6TH-3RD TERM- UNIT-1-VELU NATCHIYAR-NOTES OF LESSON-2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :       மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஆறாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      வேலுநாச்சியார்


அறிமுகம்              :

·         நீங்கள் அறிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கூறுக.

·         சுதந்திர போராட்ட கதைகளைக் கூறி ஆர்வ மூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்         :

·         விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.

ஆசிரியர் குறிப்பு     :

 

·         பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

·         பெண்களின் வீரத்தைக் கூறல்

·         வேலுநாச்சியார் வீர தீர செயல்களைப் போற்றுதல்

·         வரலாற்று நிகழ்வுகளை காணொலி வாயிலாக காண்பித்தல்

·         வேலுநாச்சியார் போர்திறம் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்         :


வேலுநாச்சியார்

  


விளக்கம்  :

வேலுநாச்சியார்

Ø   விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களுள் ஒருவர் வேலுநாச்சியார்ப் பற்றி அறிதல்

Ø   பெயர் : வேலுநாச்சியார்

Ø   தந்தை பெயர் : இராமநாத புர மன்னர் – செல்லமுத்து

Ø   கணவர் : முத்து வடுக நாதர் ( சிவகங்கை மன்னர் )

Ø   வேலு நாச்சியார் படை தளபதிகள் : பெரிய மருது, சின்ன மருது

Ø   வேலுநாச்சியாருக்கு தமது படைகளை அனுப்பியவர் : ஐதர் அலி

Ø   வேலுநாச்சியாரின் அமைச்சர் : தாண்டவராயர்

Ø   வேலுநாச்சியார் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் : குயிலி

Ø   நடுகல் : உடையாள்

Ø   வேலுநாச்சியாரின் காலம் 1730-1796

Ø   வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.

Ø   ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø  சுதந்திரத்தின் மகத்துவம் அறிதல்

Ø  பெண்களின் வீரத்தைப் போற்றுதல்

Ø    நடுகல் போன்ற சொற்களின் பொருள்களை அறிதல்

மதிப்பீடு    :

·         வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு____________

·         வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் யாவை?

·         பெண்கள் இன்றைய சூழலில் எதற்கு எதிராக போராட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

வேலுநாச்சியார்

T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை எழுதி வருக

_______________________________________

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post