6TH-3RD TERM- UNIT-1-PEYARSHOL-NOTES OF LESSON-2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஆறாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      பெயர்ச்சொல்


 அறிமுகம்                  :

Ø  சிலவகையான பெயர்களைக் கூற வைத்தும்,கரும்பலகையில் எழுதியும் பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  அறுவகைப்பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  இலக்கணப்பகுதிகளை புரிந்து படித்தல்

Ø  பெயர்ச்சொல்லின் வகைகளை கூறல்

Ø  இடுகுறிப்பெயரும்,காரணப்பெயரும் வகையினைப் பற்றிக் கூறல்

 

கருத்துரு வரைபடம்              :

பெயர்ச்சொல்



விளக்கம்    :

பெயர்ச்சொல்

Ø  ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்சொல்

Ø  பொருட்பெயர் : பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர்

Ø  இடப்பெயர் : இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர்

Ø  காலப்பெயர் : காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர்

Ø  சினை பெயர் : பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்

Ø  பண்பு பெயர் : பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்

Ø  தொழிற் பெயர் : தொழிலைக் குறிக்கும் பெயர்

Ø  இடுகுறிப்பெயர் : நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

Ø  இடுகுறிப் பொதுப்பெயர் : ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்

Ø  இடுகுறிச் சிறப்புப் பெயர் : ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

Ø  காரணப்பெயர் : காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.

Ø  காரணப் பொதுப் பெயர் : காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்

Ø  காரணச் சிறப்புப் பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  பெயர்ச்சொல் பற்றி அறிதல்

Ø  பெயர்ச்சொல் வகைகளை அறிதல்

Ø  இடுகுறிப்பெயர்,காரணப்பெயர் பற்றி அறிதல்

Ø  இடுகுறிசிறப்பு பெயர், இடுகுறி பொதுப் பெயர் பற்றி அறிதல்

Ø  காரணப் பொதுப்பெயர் பற்றி அறிதல்

Ø  காரண சிறப்புப்பெயர் பற்றி அறிதல்

மதிப்பீடு                      :

                        LOT :

Ø  பெயர்ச்சொல் __________வகைப்படும்

Ø  பொருட்பெயர் என்பது யாது?

MOT :

Ø  தொழிற்பெயர் என்றால் என்ன?

Ø  காரணப்பொதுப் பெயர் பற்றிக் கூறுக

HOT

Ø  காரணச் சிறப்பு பெயரைக் காரணத்துடன் விளக்குக.

Ø  நீர் நிரம்பு இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும்,மரங்கொத்திப்  போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. இத்தொடரில் காணப்படும் இடுகுறிப் பெயர்களையும், காரணப்பெயர்களையும் எழுதுக.

கற்றல் விளைவுகள்                  :

                                    பெயர்ச்சொல்

T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post