www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : நான்காம்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : நால்வகைச்
சொற்கள்
அறிமுகம்
:
·
சில
சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் வகைகளை கூறி ஆர்வ மூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
சொற்களின்
வகை அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு
:
·
பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
·
நால்வகைச்
சொற்களைப் பற்றிக் கூறல்
·
சொற்கள்
இடம் பெறும் தன்மையைப் பற்றிக் கூறல்.
·
நடைமுறை
வாழ்வில் இவ்வகைச் சொற்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் எனக் கூறல்
கருத்துரு வரைபடம்
:
நால்வகைச் சொற்கள்
விளக்கம் :
நால்வகைச் சொற்கள்
Ø ஒன்றுக்கு
மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
Ø இலக்கண
அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
Ø ஒன்றன்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்
Ø வினை
என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல்
எனப்படும்.
Ø பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது
Ø பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல்
ஆகும்.
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø நால்வகைச் சொற்கள் பற்றி அறிதல்
Ø நால்வகைச்சொற்களின் பயன்பாடு பற்றி அறிதல்
Ø நால்வகைச் சொற்களை இன்று பயன்படுத்தும் விதம் அறிதல்
மதிப்பீடு :
·
இலக்கண வகையால் சொற்கள் __________ வகைப்படும்.
·
நால்வகைச் சொற்களுக்கும் உதாரணங்களைக் கூறுக
·
நால்வகைச் சொற்களும் இடம் பெறுமாறு 5 தொடர்களைக்
கூறுக.
கற்றல் விளைவுகள்
:
நால்வகைச் சொற்கள்
T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்
போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி
எழுதுதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø Ø அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் நால்வகைச் சொற்களின் வகைகளைக் கண்டறிதல்
_________________________________________________