www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : மூன்றாம்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : முடிவில்
ஒரு தொடக்கம்
அறிமுகம் :
Ø தானங்களில் சிறந்த
தானமாக நீங்கள் எதனை கருதுவீர்கள்? ஏன்?
Ø கடையேழு வள்ளல்கள்
பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
உறுப்பு
தானத்தின் அவசியம் உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
முடிவில் ஒரு தொடக்கம்
Ø மனித நேயப் பண்புகளில்
தானத்தைப் பற்றிக் கூறல்
Ø கடையேழு வள்ளல்கள்
சிறப்பைக் கூறல்
Ø இன்றைய சூழலில் இரத்த
தானம் பற்றி அதிகம் கேள்விப்பட்டதைக் கூறல்
Ø உடல் உறுப்பு தானத்தின்
அவசியம் உணர்தல்
Ø உடல் உறுப்பு தானத்தில்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்
கருத்துரு வரைபடம் :
முடிவில் ஒரு தொடக்கம்
விளக்கம் :
முடிவில் ஒரு தொடக்கம்
Ø பொன்னையும்,
பொருளையும் கொடுப்பது மட்டும் கொடையன்று
Ø உறுப்பையும்
தருவதே சிறந்த கொடை
Ø பெங்களூரில்
உள்ள சிறுமிக்கு இதயம் பலவீன மடைகிறது.
Ø திருக்கழுக்குன்றத்தில்
ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது. அவரின் இதயம் மட்டும் துடித்துக் கொண்டு இருக்கிறது.
Ø பெருங்களூரில்
உள்ள சிறுமிக்கு அந்த இதயம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைகிறது.
Ø திருக்கழுக்குன்றத்தில் விபத்தில் இறந்தவரின் இதயம் பெங்களூரில் உள்ள அந்த
சிறுமிக்குப் பொருத்தப்படுகிறது.
Ø இறந்தும்
அவரின் இதயம் வாழ்கிறது. உறுப்புக் கொடை மூலமாக.
Ø உறுப்புக்கொடை
மூலம் அந்த சிறுமியின் உயிர் காக்கப்படுகிறது.
Ø உறுப்பு
தானத்தின் அவசியம் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
o மனித நேய பண்புகளை அறிதல்
o தானத்தின்
அவசியம் உணர்தல்
o கொடுத்து
உதவும் பண்பினை அறிதல்
o உறுப்புக்
கொடையின் அவசியம் பற்றி அறிதல்
o உறுப்பு
தானத்தின் மூலம் உயிர் பிழைக்கும் வழி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø தானம்
என்பது யாது?
Ø உனக்குத்
தெரிந்த மனித நேய பண்புகளைக் கூறுக.
MOT :
Ø உறுப்புக்
கொடை என்பது யாது?
Ø சமூகத்தில்
உள்ள தானங்களின் தன்மைகளைக் கூறுக.
HOT
Ø இந்த
நிகழ்வின் மூலம் நீங்கள் அறிவது யாது?
Ø உறுப்பு
தானத்தின் அவசியத்தை நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு எடுத்துரைப்பீர்கள்?
கற்றல் விளைவுகள் :
முடிவில்
ஒரு தொடக்கம்
·
T611
ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுதல்
மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு
கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø
இந்நிகழ்வை சுருக்கி கதையாக எழுதுக
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை