10th-Tamil-Previous -Public Questions - One mark - collections - Pdf

 


அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள்

ஒரு மதிப்பெண்கள்

செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )

செப்டம்பர் – 2020

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )                                 

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                      15×1=15

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன்;சேரலாதன்    ஆ)  அதியன்;பெருஞ்சாத்தன்

 இ)  பேகன் ; கிள்ளிவளவன்  ஈ)  நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

2. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் ‘ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது         

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது   

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது  

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

3.” பெரிய மீசை “ சிரித்தார் – இதில் அமைந்துள்ள தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை                    ஆ) உவமைத் தொகை   

இ) அன்மொழித் தொகை          ஈ) உம்மைத் தொகை

4. ‘ உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்     

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்    

இ) மருத்துவரிடம் நோயாளி                 ஈ) நோயாளியிடம் மருத்துவர்

5. திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.

அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.

ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

6. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

உருவகம்,எதுகை      மோனை,எதுகை      

முரண்,இயைபு           உவமை,எதுகை

7 கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது  

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார் 

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்               

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

8. குயில்களின் கூவலிசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்

அ) மொட்டின் வருகை             ஆ) வனத்தின் நடனம்

இ)  உயிர்ப்பின் ஏக்கம்               ஈ) நீரின் சிலிர்ப்பு

9. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

1) வினைமுற்று                        -        I ) கெடு

2. தொழிற்பெயர்                        -        ii) கட்டு

3. முதனிலைத் தொழிற்பெயர்    -        iii) எய்தல்

4. வினையடி                            -        iv) வந்தான்

அ) (1) – (iv)  (2) – (iii)       (3) – (ii)        (4) – (i)

ஆ) (1) – ( iii) (2) – ( i)       (3) – (iv)       (4) – (ii)

இ) (1) – (iv)  (2) – (iii)       (3) – (i)        (4) – (ii)

ஈ) (1) – ( i)   (2) – (iii)       (3) – (ii)        (4) – (iv)

10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்க.

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்ட் பிஸ்கட்டுகளை ஈக்வலாக வையுங்கள்.

அ) தங்க பிஸ்கட்டுகளைச் சரியாக      

ஆ) தங்கக் கட்டிகளை ஈக்வலாக

இ) தங்கக் கட்டிகளை ஈடாக ஈ) தங்கக் கட்டிகளை முறையாக

11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்___

அ) நாட்டைக் கைப்பற்றல்                            ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்            ஈ) கோட்டையை முற்றுகையிடல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

  திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

   பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “

12) பாடலின் இலக்கிய வகை

அ) பத்துப்பாட்டு               ஆ) சிற்றிலக்கியம்

இ) எட்டுத்தொகை          ஈ) பதினெண் கீழ்க்கணக்கு

13) ‘ கிண்கிணி ‘ என்னும் அணிகலன்

அ) இடையில் அணிவது  ஆ) தலையில் அணிவது 

இ) காலில் அணிவது                  ஈ) நெற்றியில் அணிவது

14. குண்டலமும் குழைக்காதும் – இலக்கணக் குறிப்பு தருக

அ) எண்ணும்மை                     ஆ) உம்மைத்தொகை    

இ) உவமைத்தொகை               ஈ) வினைத்தொகை

15) சீர் எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.

அ) பட்ட,பொட்டொடு       ஆ) செம்பொன்,பைம்பொன்      

இ) சரிந்தாட,பதிந்தாட       ஈ) பண்டி,குண்டலம்

செப்டம்பர் – 2021

I) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                     15×1=15

II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.    

1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்       

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்             

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

2. நீலச்சட்டை பேசினார் – இத்தொடரில் “ நீலச்சட்டை“என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.

அ) பண்புத்தொகை           ஆ) உவமைத்தொகை             

இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை

3 தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

அ) திருக்குறள்                ஆ) புறநானூறு

 இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்

4. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது                

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

5. திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர்,புதுச்சேரி,திருநெல்வேலி – இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘ மரூஉ ‘ வரியைத் தேர்க.

அ) திருச்சி, புதுவை, நெல்லை, உதகை                  

ஆ) திருச்சி , கோவை, புதுவை, நெல்லை

இ) நெல்லை, உதகை, திருச்சி, கோவை       

ஈ) உதகை, திருச்சி, புதுவை, கோவை

6. கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்  ) ஆல், கு ) ஐ, கு      ஈ) இன், கு

7 சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்.

) மதுரை   ) புகார்               ) வஞ்சி     ) முசிறி

8. “ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

          நேர்ப்பட வைத்தாங்கே

     குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

          கோல வெறிபடைத்தோம்” – பாரதியார்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) வானத்து – வைத்தாங்கே  ஆ) காற்றையும் – குடித்தொரு

இ) நிலாவையும் – குலாவும்         ஈ) வைத்தாங்கே – வெறிப்படைத்தோம்

9. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

இலையும்,சருகும்       தோகையும் சண்டும்  

தாளும் ஓலையும்        சருகும் சண்டும்

10. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவுத் தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்                  

ஆ) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்              

ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்

11. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி                 ஆ) திணை வழுவமைதி   

இ) மரபு வழுவமைதி                 ஈ) கால வழுவமைதி

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா                    ஆ) எந்த + தமிழ் + நா     

இ) எம் + தமிழ் + நா                    ஈ) எந்தம் + தமிழ் + நா

13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை     

இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை

14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை                           ஆ) தமிழ் மொழியை

இ) தாய் நாட்டை              ஈ) தம் குழந்தையை

15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்                       ஆ) சான்றோர் 

இ) வேற்று மொழியினர்    ஈ) புலவர்

மே – 2022

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                    15×1=15

ii)      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலைவகை                        ஆ) மணிவகை  

இ) கொழுந்து வகை                           ஈ) இலைவகை

2. ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? ‘ என்று நூலகரிடம் வினவுதல்

அ) அறிவினா                           ஆ) கொளல் வினா

இ) அறியா வினா                      ஈ) ஏவல் வினா

3 ‘ ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் ‘ – என்ற புதிருக்கான விடையைத் தேர்க.

அ) காடு                 ஆ) நாடு       இ) வீடு        ஈ) தோடு

4.’ தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’ – இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல்

அ) மணிமேகலை                      ஆ) தேம்பாவணி    

இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்

5. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்   

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்      ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

6. மலர்விழி பாடினாள் – இத்தொடர்

) பொதுமொழி              ) தனிமொழி

) தொடர் மொழி            ) அடுக்குத் தொடர்

7 கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது. – என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு.

) வனத்தின் நடனம்      ) மிதக்கும் வாசம்        

) மொட்டின் வருகை    ) காற்றின் பாடல்

8.மெய்கீர்த்தி என்பது

அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை

ஆ) மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதி வைப்பது.

இ) ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை 

ஈ) அறக்கருத்துகள் அடங்கிய நூல்

9. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுப்படுத்தக் காரணமாக அமைவது.

) எழுவாய்                    ) வேற்றுமை உருபு     

) உவம உருபு                ) உரிச்சொல்

10. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது.

அ) திருக்குறள்               ஆ) புறநானூறு               

இ) கம்பராமாயணம்          ஈ) சிலப்பதிகாரம்

11. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) கான் அடை – காட்டைச் சேர்

ஆ) கால் உடை – காலால் உடைத்தல்

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்             

ஈ) கால் நடை – காலால் நடத்தல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா                    ஆ) எந்த + தமிழ் + நா     

இ) எம் + தமிழ் + நா                    ஈ) எந்தம் + தமிழ் + நா

13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை     

இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை

14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை                           ஆ) தமிழ் மொழியை       

இ) தாய் நாட்டை              ஈ) தம் குழந்தையை

15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்                                 ஆ) சான்றோர்       

இ) வேற்று மொழியினர்             ஈ) புலவர்

ஆகஸ்ட் - 2022

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                15×1=15

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்  சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                           

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

அ) இலையும் சருகும்                 ஆ) தோகையும் சண்டும்  

இ) தாளும் ஓலையும்                 ஈ) சருகும் சண்டும்

2. பெரிய மீசை சிரித்தார்தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

பண்புத்தொகை                    உவமைத்தொகை    

அன்மொழித்தொகை            உம்மைத்தொகை

3 “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்     

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்    

இ) மருத்துவரிடம் நோயாளி                 ஈ) நோயாளியிடம் மருத்துவர்

“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்      ஆ) அறிவியல்       இ) கல்வி     ஈ) இலக்கியம்.

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்                 

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்             

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

6. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்         ஆ) ஆநிரை கவர்தல்      

இ) வலிமையை நிலைநாட்டல்  

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

7 சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் _

அ) அகவற்பா         ஆ) வெண்பா        இ) வஞ்சிப்பா         ஈ) கலிப்பா

8. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி --

) உவமை ) தற்குறிப்பேற்றம்        ) உருவகம்         ) தீவகம்

9. ‘ சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும்         - என்றன்

    சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..

) திரு.வி.க                             ) க.சச்சிதானந்தன்                

) நம்பூதனார்                  ) தனிநாயக அடிகள்

10. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்                       ஆ) கம்பர்    

இ) தேவநேயப் பாவாணர்            ஈ) வைரமுத்து

11. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்            ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு                           ஈ) புளிமா தேமா பிறப்பு

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ காற்றே,வா

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா

இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு “

12.’ மயலுறுத்து ‘ என்பதன் பொருள்________

அ. விளங்கச் செய்            ஆ. மயங்கச் செய்  

இ. அடங்கச் செய்             ஈ. சீராக

13. ப்ராண ரஸம் – என்பதன் பொருள்

அ. உயிர்வளி         ஆ, கார்பன் -டை-ஆக்ஸைடு   

 இ. ஹைட்ரோ கார்பன்              ஈ. கந்தக – டை - ஆக்ஸைடு

14. ‘ மிகுந்த ‘ – இலக்கணக் குறிப்பு தருக.

அ. வினையெச்சம்           ஆ. முற்றெச்சம்              

இ. பெயரெச்சம்                ஈ. வினைத்தொகை

15. நீரலைகளின் – பிரித்தெழுதுக

அ. நீர் + அலைகளின்      ஆ. நீரின் + அலைகளின்

இ. நீரலை + களின்          ஈ. நீர் + அலைகளின்

ஏப்ரல் – 2023

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                    15×1=15

ii)       கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்  சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.  

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

அ) இலையும் சருகும்       ஆ) தோகையும் சண்டும்  

இ) தாளும் ஓலையும்                 ஈ) சருகும் சண்டும்

2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) அங்கு வறுமை இல்லாததால்         

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்  

) ஊரில் விளைச்சல் இல்லாததால்             

) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

3 சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

அ) உழவு,மண்,ஏர்,மாடு              ஆ) மண்,மாடு,ஏர்,உழவு   

இ) உழவு,ஏர்,மண்,மாடு              ஈ) ஏர்,உழவு,மாடு, மண்

. “பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க” என்று_______ வேண்டினார்

அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன்,பூக்களுக்காக  ஈ) எலிசபெத், பூமிக்காக

5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்________

அ) துலா      ஆ) சீலா      இ) குலா      ஈ) இலா

6. அருந்துணை என்பதைப் பிரித்தால்__________

அ) அருமை + துணை     ஆ) அரு + துணை

இ) அருமை + இணை     ஈ) அரு + இணை 

7. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை       ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை         ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை

8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

) உதியன்: சேரலாதன்  ) அதியன் ; பெருஞ்சாத்தன்

) பேகன் ; கிள்ளிவளவன்        ) நெடுஞ்ச்செழியன் ; திருமுடிக்காரி

9. “ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫           ) மூன்று, நான்கு – ௩ , ௪       

) ஐந்து , ஏழு – ௫ , ௭                ) நான்கு , ஆறு – 

10. “ கத்துங் குயிலோசை – சற்றே வந்து

  காதிற் படவேணும் “ – பாரதியார்.   - இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி

அ) திணை வழுவமைதி            ஆ) பால் வழுவமைதி

இ) மரபு வழுவமைதி                            ஈ) கால வழுவமைதி

11. பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) பெயரெச்சத் தொடர்             ஆ) வினையெச்சத் தொடர்

இ) வேற்றுமைத் தொடர்             ஈ) விளித் தொடர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ பகர்வனர் திரிதரு நகரவீதியும் ;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் ;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் “

12.இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

அ. நீதிவெண்பா               ஆ. புறநானூறு      

இ. மணிமேகலை             ஈ. சிலப்பதிகாரம்

13. பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

அ. பகர்வனர் ; பட்டினும்   ஆ, பட்டினும் ; கட்டினும்

 இ. கட்டும் ; தூசும்           ஈ. பட்டினும் ; மயிரினும்

14. காருகர் – பொருள் தருக

அ. உழவர்    ஆ. நெசவாளர்  இ. பொற்கொல்லர்       ஈ.காவலர்

15. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள்:

அ. பூக்களும் ; சந்தனும்    ஆ. பூக்களும் ; அகிலும்   

இ. அகிலும் ; சந்தனும்      ஈ. பட்டும் ; சந்தனும்

ஜூன் – 2023

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்    15×1=15

ii)       கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்  சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.  

1. மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்        

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்  

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்    

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு       

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

3. ‘ செங்காந்தள் ‘ என்ற சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க.

அ) உவமைத் தொகை     ஆ) பண்புத் தொகை       

இ) உம்மைத் தொகை      ஈ) வேற்றுமைத் தொகை

4. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்    ஆ) வானத்தையும், புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்  ஈ) வானத்தையும் பேரொலியையும்

5. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?________

அ) தமிழ்      ஆ) அறிவியல்       இ) கல்வி     ஈ) இலக்கியம்

6. கரகாட்டத்தைக் ‘ கும்பாட்டம் ‘ என்றும் ‘ குடக்கூத்து ‘ என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?

ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

இ) கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

7. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

அ) வேற்றுமை உருபு       ஆ) எழுவாய்

 இ) உவம உருபு              ஈ) உரிச்சொல்

8. தமிழினத்தை ஒன்றுப்படுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது ----

) திருக்குறள்                 ) புறநானூறு 

) கம்பராமாயணம்          ) சிலப்பதிகாரம்

9. ‘ எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _______

) எந் + தமிழ் + நா                    ) எந்த + தமிழ் + நா     

) எம் + தமிழ் + நா                      ) எந்தம் + தமிழ் + நா

10. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா         ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா    ஈ) கலிப்பா

11. ஓர் ஆண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கையினைக் குறிக்கும் தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.

அ) ௧ ௫        ஆ) ௧ ௨       இ) ௧ ௩        ஈ) ௧ ௪

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ சக்தி குறைந்து போய், அதனை அவித்து விடாதே

பேய்போல வீசி அதனை மடித்து விடாதே

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு

உனக்கு பாட்டுகள் பாடுகிறோம்

உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்“

12.இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ லயத்துடன் ‘ என்ற சொல்லின் பொருள்

அ. சுழலாக   ஆ. கடுமையாக      இ. சீராக       ஈ. வேகமாக

13. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க

அ. அவித்து விடாதே, நெடுங்காலம்    ஆ, மடித்து விடாதே, பாடுகிறோம்

 இ. மெதுவாக, லயத்துடன்                     ஈ. பாடுகிறோம், கூறுகிறோம்

14. இக்கவிதையை இயற்றியவர்

அ.திரு.வி.க ஆ. பாரதியார்  இ. பாரதிதாசன்     ஈ.மு.மேத்தா

15. ‘ நெடுங்காலம் ‘ என்ற சொல்லைப் பிரித்தால் கிடைப்பது ___

அ. நெடுமை + காலம்                 ஆ. நெடிய + காலம்

இ. நெடு + காலம்    ஈ. நெடுங் + காலம்

 click here to get pdf

 click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post