10th-Tamil-Previous -Public Questions - 2 mark- section-2- collections - Pdf

 

அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள்

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )

செப்டம்பர் – 2020

பகுதி – II / பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.              5×2=10

22. கலைச்சொல் தருக:- அ) ARTIFACTS      ஆ)  MYTH

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் விடுபட்ட சொற்கள் குறிக்கும் வண்ணங்களின் பெயர்களை எழுதுக.

கண்ணுக்கு குளுமையாக இருக்கும் ________ புல்வெளிகளில் கதிரவனின் _____ வெயில் பரவிக் கிடக்கிறது.

23. ஆலும் வேலும் பல்லுக்குறுதி,நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

-இத்தொடகள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும், தமிழெண்களையும் குறிப்பிடுக.

24.  பாலகுமாரன் புதினங்கள் இருக்கிறதா?என்று நூலகரிடம் வினவுவது எவ்வகை வினா

பிரபஞ்சன் புதினங்கள் இருக்கிறது என்று நூலகர் கூறுவது எவ்வகை விடை?

25. “ தம்பீ ! எங்க நிக்கிறே?”

     “ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”

உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

26. மலைந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக..

27. “ காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை

       செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ”

- இப்பாடல் அடிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களை எடுத்தெழுதுக.

28. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதி, தொடரில் அமைக்க.

செப்டம்பர் – 2021

பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.            5×2=10

22. கலைச்சொல் தருக:- அ) CONSULATE     ஆ)  FOLK LITERATURE

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப் பெயர்களை எழுதுக.     ( அ) கல்      ( ஆ ) ஆடு

23. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

24.  “ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி, நாங் கெளம்பிட்டேன்……

உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

25. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக..

26. வெண்பாவின் ஓசையையும்,ஆசிரியப்பாவின் ஓசையையும் எழுதுக.

27. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

          பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி

28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

          மேகலை, தேன், பூ, மழை, மணி

மே – 2022

பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.            5×2=10

22. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.  

 ( அ ) இன்சொல்             ( ஆ ) எழுகதிர்

23. “ வாழ்க “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

( அ ) விடு – வீடு             ( ஆ ) கொடு – கோடு

25. வெண்பா, ஆசிரியப்பாவின் ஓசைகளை எழுதுக

26. கலைச்சொல் தருக:- அ) BELIEF    ஆ)  PHILOSOPHER

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப் பெயர்களை எழுதுக.     ( அ) கல்      ( ஆ ) ஆடு

27. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

28. சந்தக் கவிதையில் வந்த பிழையைத் திருத்துக.

     “ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

          தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

          ஓதி யுனர்ந்தின் புருவோமே”

ஆகஸ்ட் - 2022

பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.            5×2=10

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை?

23. “ ஒலித்து “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. பழமொழிகளை நிறைவு செய்க:

அ) உப்பில்லாப் _________    ஆ) ஒரு பானை ________

25. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

26. கலைச்சொல் தருக:- அ) VOWEL   ஆ)  DISCUSSION

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

குறிப்பு :- எதிர்மறையாக மாற்றுக   அ) மீளாத்துயர்   ஆ) பார்த்த படம்

27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத் தொடரை இரு தொடர்களாக்குக.

28. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்கவும்.

அ) பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்.

ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்

 

ஏப்ரல் – 2023

பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.            5×2=10

22. கீழ்க்காணும் ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

அ) உதக மண்டலம்                   ஆ) திருநெல்வேலி

இ) சைதாப்பேட்டை                   ஈ) கும்பகோணம்

23. பழமொழிகளை நிறைவு செய்க:

அ) ஒரு பானை _________    ஆ) அளவுக்கு________

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக- “ ஒலித்து “

25. கலைச்சொல் தருக:- அ) PATENT ஆ)  STORM

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வாள், பொன், பூ

26. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

 அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்,

27. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

அ) மனக்கோட்டை          ஆ) கண்ணும் கருத்தும்

28.குறள்வெண்பாவின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

ஜூன் – 2023

பிரிவு – 2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.            5×2=10

22. கலைச்சொல் தருக:- அ) VOWEL   ஆ)  EMBLEM

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப் பெயர்களை எழுதுக:   அ) பழம்      ஆ) புல்

23.’ கிளர்ந்த’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக

          பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி

25. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

26. சந்தக் கவிதையில் பிழைகளைத் திருத்துக

          “ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

                   தேரும் சிலப்பதி  காறமதை

          ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

                   ஓதி   யுனர்ந்தின் புருவோமே”

27. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

28. மரபுத் தொடரைப் பொருத்தமான  தொடரில் அமைத்து எழுதுக

அ) அள்ளி இறைத்தல்     ஆ) ஆறப்போடுதல்

click here to get pdf

click here

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post