அரசு பொதுத்
தேர்வு வினாத்தாள்கள்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
செப்டம்பர்
2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )
செப்டம்பர்
– 2020
பகுதி – II / பிரிவு – 1
நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16.
நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் எவர் என வள்ளுவர் வாய்மொழி கூறும் செய்தி யாது?
17.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. ம.பொ.சி.அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப்
பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.
ஆ.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும்
பிறவும் கொடுத்தனர்.
18.
உறங்குகின்ற
கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய்
‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
19. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு
பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக..
20.
ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டினை எழுதுக.
21. குற்றம் இல்லாமல்
தன் குடிப்பெருமையை உயரச் செய்யும் கருத்தினைக் கொண்ட திருக்குறளை எழுதுக
செப்டம்பர்
– 2021
பகுதி – II / பிரிவு – 1
நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
மலேசியா.
ஆ.
தமிழ்த்தென்றல் திரு.வி.க.போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக்
கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்
17.
வசன கவிதை – குறிப்பு வரைக.
18.வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
19. ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகளில் எவையேனும் இரண்டினை
எழுதுக.
20.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்ப்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
21. ‘ விடல் ‘ என
முடியும் திருக்குறளை எழுதுக.
மே
– 2022
பகுதி – II / பிரிவு
– 1
நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16.
வசன கவிதை – குறிப்பு வரைக
17.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு
பெற்றார்.
ஆ.
1906 – ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகச்
சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்
18.
குறிப்பு வரைக – அவையம்
19. மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!”
- இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
20.
தாவரங்களின் இளம்பயிர் வகைகளைக் குறிக்கும் சொற்களில் நான்கினை எழுதுக.
21. ‘ முயற்சி ‘
எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
ஆகஸ்ட் - 2022
பகுதி – II / பிரிவு
– 1
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. “ உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் “
- இக்குறளில் அமைந்துள்ள
அளபெடைகளின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்
செய்குதம்பிப் பாவலர்
ஆ. பரஞ்சோதி முனிவர் திருமறைக் காட்டில் பிறந்தவர்.
18.
தேம்பாவணி – குறிப்பு வரைக
19.
தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்கவும்.
20.
பாசவர்,வாசவர்,பல்நிண
விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
21. ‘ பல்லார் ‘
எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
ஏப்ரல்
– 2023
பகுதி – II / பிரிவு
– 1
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடிய சிறுகூலங்களின் பெயர்களை
எழுதுக
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் என்பவர் பருவக் காற்றின் பயனை
உலகிற்கு உணர்த்தினார்.
ஆ. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது
புலி ஆட்டமாகும்.
18.
குறிப்பு வரைக – “ சதாவதானம்”
19.
மெய்க்கீர்த்திப் பாடுவதன் நோக்கம் யாது?
20.
குறிப்பு வரைக: : “ அவையம் “
21. ‘ செயற்கை ‘
எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
ஜூன்
– 2023
பகுதி – II / பிரிவு
– 1
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. விருந்தினர்களை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை
எழுதுக
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. ‘ தமிழா துள்ளி எழு ‘ என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை
கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே ம.பொ.சி. வழங்கினார்.
ஆ. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே திருக்குறளில்
அமைந்திருக்கிறது.
18.
‘ இறடிப் பொம்மல் பெறுகுவீர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
19.
‘ தஞ்சம் எளியன் பகைக்கு ‘ – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக
20.
‘ நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் ‘ – இது போன்ற
உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
21. ‘ எப்பொருள்
‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
CLICK HERE TO GET PDF