10TH-TAMIL-ONEMARK-GOVT QUESTION-JUNE-2023


அரசு பொதுத் தேர்வு  வினாத்தாள்- JUNE 2023 - 2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி           மதிப்பெண் : 100

பகுதி – I

ஜூன் – 2023

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்    15×1=15

ii)       கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்  சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.  


1. மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்        

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்  

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்    

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்


2. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு       

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

3. ‘ செங்காந்தள் ‘ என்ற சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க.

அ) உவமைத் தொகை     ஆ) பண்புத் தொகை       

இ) உம்மைத் தொகை      ஈ) வேற்றுமைத் தொகை

4. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்    ஆ) வானத்தையும், புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்  ஈ) வானத்தையும் பேரொலியையும்


5. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?__

அ) தமிழ்      ஆ) அறிவியல்       இ) கல்வி     ஈ) இலக்கியம்


6. கரகாட்டத்தைக் ‘ கும்பாட்டம் ‘ என்றும் ‘ குடக்கூத்து ‘ என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?

ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

இ) கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?


7. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

அ) வேற்றுமை உருபு       ஆ) எழுவாய்

 இ) உவம உருபு              ஈ) உரிச்சொல்


8. தமிழினத்தை ஒன்றுப்படுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது ----

) திருக்குறள்                 ) புறநானூறு 

) கம்பராமாயணம்          ) சிலப்பதிகாரம்


9. ‘ எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _______

) எந் + தமிழ் + நா                    ) எந்த + தமிழ் + நா     

) எம் + தமிழ் + நா                      ) எந்தம் + தமிழ் + நா


10. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா         ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா    ஈ) கலிப்பா


11. ஓர் ஆண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கையினைக் குறிக்கும் தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.

அ) ௧ ௫        ஆ) ௧ ௨       இ) ௧ ௩        ஈ) ௧ ௪

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ சக்தி குறைந்து போய், அதனை அவித்து விடாதே

பேய்போல வீசி அதனை மடித்து விடாதே

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு

உனக்கு பாட்டுகள் பாடுகிறோம்

உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்“


12.இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ லயத்துடன் ‘ என்ற சொல்லின் பொருள்

அ. சுழலாக   ஆ. கடுமையாக      இ. சீராக       ஈ. வேகமாக


13. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க

அ. அவித்து விடாதே, நெடுங்காலம்    ஆ, மடித்து விடாதே, பாடுகிறோம்

 இ. மெதுவாக, லயத்துடன்                     ஈ. பாடுகிறோம், கூறுகிறோம்


14. இக்கவிதையை இயற்றியவர்

அ.திரு.வி.க ஆ. பாரதியார்  இ. பாரதிதாசன்     ஈ.மு.மேத்தா


15. ‘ நெடுங்காலம் ‘ என்ற சொல்லைப் பிரித்தால் கிடைப்பது ___

அ. நெடுமை + காலம்                 ஆ. நெடிய + காலம்

இ. நெடு + காலம்                        ஈ. நெடுங் + காலம்

இணைய வழித் தேர்வு - ஜூன் 2023

விடைக்குறிப்பு

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post