10TH-TAMIL-ONEMARK-GOVT QUESTION-APRIL-2023

 

அரசு பொதுத் தேர்வு  வினாத்தாள்- ஏப்ரல் 2023 - 2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி           மதிப்பெண் : 100

பகுதி – I

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்    15×1=15

ii)       கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்  சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.  

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

அ) இலையும் சருகும்       ஆ) தோகையும் சண்டும்  

இ) தாளும் ஓலையும்                 ஈ) சருகும் சண்டும்


2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) அங்கு வறுமை இல்லாததால்         

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்  

) ஊரில் விளைச்சல் இல்லாததால்             

) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

3 சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

அ) உழவு,மண்,ஏர்,மாடு              ஆ) மண்,மாடு,ஏர்,உழவு   

இ) உழவு,ஏர்,மண்,மாடு              ஈ) ஏர்,உழவு,மாடு, மண்

4 . “பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க” என்று_______ வேண்டினார்

அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன்,பூக்களுக்காக  ஈ) எலிசபெத், பூமிக்காக


5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்________

அ) துலா      ஆ) சீலா      இ) குலா      ஈ) இலா


6. அருந்துணை என்பதைப் பிரித்தால்__________

அ) அருமை + துணை     ஆ) அரு + துணை

இ) அருமை + இணை     ஈ) அரு + இணை 


7. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை       ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை         ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை


8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

) உதியன்: சேரலாதன்           ) அதியன் ; பெருஞ்சாத்தன்

) பேகன் ; கிள்ளிவளவன்        ) நெடுஞ்ச்செழியன் ; திருமுடிக்காரி


9.“ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫ ) மூன்று, நான்கு – ௩ , ௪       

) ஐந்து , ஏழு – ௫ , ௭        ) நான்கு , ஆறு – ,


10. “ கத்துங் குயிலோசை – சற்றே வந்து

  காதிற் படவேணும் “ – பாரதியார்.

          - இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி

அ) திணை வழுவமைதி                    ஆ) பால் வழுவமைதி

இ) மரபு வழுவமைதி                            ஈ) கால வழுவமைதி


11. பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) பெயரெச்சத் தொடர்             ஆ) வினையெச்சத் தொடர்

இ) வேற்றுமைத் தொடர்             ஈ) விளித் தொடர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ பகர்வனர் திரிதரு நகரவீதியும் ;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் ;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் “

12.இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

அ. நீதிவெண்பா               ஆ. புறநானூறு      

இ. மணிமேகலை             ஈ. சிலப்பதிகாரம்

13. பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

அ. பகர்வனர் ; பட்டினும்   ஆ, பட்டினும் ; கட்டினும்

 இ. கட்டும் ; தூசும்           ஈ. பட்டினும் ; மயிரினும்

14. காருகர் – பொருள் தருக

அ. உழவர்    ஆ. நெசவாளர்  இ. பொற்கொல்லர்       ஈ.காவலர்

15. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள்:

அ. பூக்களும் ; சந்தனும்    ஆ. பூக்களும் ; அகிலும்   

இ. அகிலும் ; சந்தனும்      ஈ. பட்டும் ; சந்தனும்

இணைய வழித் தேர்வு - ஏப்ரல் 2023

விடைக்குறிப்பு


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post