10TH-TAMIL- ONE MARK - GOVT QUESTIONS - ONLINE QUIZ - MAY 2022

 

அரசு பொதுத் தேர்வு  வினாத்தாள்  - மே - 2022

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி           மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்           15×1=15

ii)      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலைவகை                        ஆ) மணிவகை  

இ) கொழுந்து வகை                           ஈ) இலைவகை


2. ‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? ‘ என்று நூலகரிடம் வினவுதல்

அ) அறிவினா                           ஆ) கொளல் வினா

இ) அறியா வினா                      ஈ) ஏவல் வினா


3 ‘ ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் ‘ – என்ற புதிருக்கான விடையைத் தேர்க.

அ) காடு                 ஆ) நாடு       இ) வீடு        ஈ) தோடு


4.’ தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’ – இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல்

அ) மணிமேகலை                      ஆ) தேம்பாவணி    

இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்


5. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்   

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்      ஈ) வெளிநாட்டு முதலீடுகள்


6. மலர்விழி பாடினாள் – இத்தொடர்

) பொதுமொழி              ) தனிமொழி

) தொடர் மொழி            ) அடுக்குத் தொடர்


7 கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது. – என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு.

) வனத்தின் நடனம்      ) மிதக்கும் வாசம்        

) மொட்டின் வருகை    ) காற்றின் பாடல்


8.மெய்கீர்த்தி என்பது

அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை

ஆ) மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதி வைப்பது.

இ) ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை 

ஈ) அறக்கருத்துகள் அடங்கிய நூல்


9. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுப்படுத்தக் காரணமாக அமைவது.

) எழுவாய்                    ) வேற்றுமை உருபு     

) உவம உருபு                ) உரிச்சொல்


10. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது.

அ) திருக்குறள்               ஆ) புறநானூறு               

இ) கம்பராமாயணம்          ஈ) சிலப்பதிகாரம்


11. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) கான் அடை – காட்டைச் சேர்

ஆ) கால் உடை – காலால் உடைத்தல்

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்             

ஈ) கால் நடை – காலால் நடத்தல்


பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “


12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா                    ஆ) எந்த + தமிழ் + நா     

இ) எம் + தமிழ் + நா                    ஈ) எந்தம் + தமிழ் + நா


13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை     

இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை


14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை                           ஆ) தமிழ் மொழியை       

இ) தாய் நாட்டை              ஈ) தம் குழந்தையை


15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்                                 ஆ) சான்றோர்       

இ) வேற்று மொழியினர்             ஈ) புலவர்
இணைய வழித் தேர்வு - மே 2022 
விடைக்குறிப்பு

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post