10TH-TAMIL- ONE MARK - GOVT QUESTIONS - ONLINE QUIZ - SEP 2021

 

செப்டம்பர் தேர்வு  வினாத்தாள் 2021 ( தனித்தேர்வர் வினாத்தாள் )

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி           மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

I) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்    15×1=15

II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.    

1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்       

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்             

ஈ) அங்கு வறுமை இல்லாததால்


2. நீலச்சட்டை பேசினார் – இத்தொடரில் “ நீலச்சட்டை“என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.

அ) பண்புத்தொகை           ஆ) உவமைத்தொகை             

இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை


3 தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

அ) திருக்குறள்                ஆ) புறநானூறு

 இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்


4. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது                

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது


5. திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர்,புதுச்சேரி,திருநெல்வேலி – இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘ மரூஉ ‘ வரியைத் தேர்க.

அ) திருச்சி, புதுவை, நெல்லை, உதகை                  

ஆ) திருச்சி , கோவை, புதுவை, நெல்லை

இ) நெல்லை, உதகை, திருச்சி, கோவை       

ஈ) உதகை, திருச்சி, புதுவை, கோவை


6. கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்  ) ஆல், கு ) ஐ, கு      ஈ) இன், கு


7 சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்.

) மதுரை   ) புகார்               ) வஞ்சி     ) முசிறி


8. “ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

          நேர்ப்பட வைத்தாங்கே

     குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

          கோல வெறிபடைத்தோம்” – பாரதியார்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) வானத்து – வைத்தாங்கே  ஆ) காற்றையும் – குடித்தொரு

இ) நிலாவையும் – குலாவும்         ஈ) வைத்தாங்கே – வெறிப்படைத்தோம்


9. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும்       ) தோகையும் சண்டும்  

) தாளும் ஓலையும்        ) சருகும் சண்டும்


10. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவுத் தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்                  

ஆ) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்              

ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்


11. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி                 ஆ) திணை வழுவமைதி   

இ) மரபு வழுவமைதி                 ஈ) கால வழுவமைதி


பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “


12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா                    ஆ) எந்த + தமிழ் + நா     

இ) எம் + தமிழ் + நா                    ஈ) எந்தம் + தமிழ் + நா


13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை           ஆ) வினைத்தொகை     

இ) உவமைத்தொகை      ஈ) உம்மைத்தொகை


14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை                           ஆ) தமிழ் மொழியை

இ) தாய் நாட்டை              ஈ) தம் குழந்தையை


15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்                       ஆ) சான்றோர் 

இ) வேற்று மொழியினர்    ஈ) புலவர்


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post