ஆகஸ்ட்
துணைத் தேர்வு வினாத்தாள் 2022 - 2023
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் +
3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I
i)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 15×1=15
ii)
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில்
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1.
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட
பகுதி குறிப்பிடுவது.
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
2.
பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான
தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை ஆ)
உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ)
உம்மைத்தொகை
3 “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ)
நோயாளியிடம் மருத்துவர்
4 . “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ)
தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ)
இலக்கியம்.
5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ)
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ)
ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ)
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ)
அங்கு வறுமை இல்லாததால்
6. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல்
ஈ)
கோட்டையை முற்றுகையிடல்
7 சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் _
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
8. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி --
அ) உவமை ஆ)
தற்குறிப்பேற்றம் இ)
உருவகம் ஈ)
தீவகம்
9. ‘ சாகும் போது தமிழ் படித்துச்
சாக வேண்டும் - என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..
அ) திரு.வி.க ஆ)
க.சச்சிதானந்தன்
இ) நம்பூதனார் ஈ) தனிநாயக அடிகள்
10. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர்
யார்?
அ) தமிழழகனார் ஆ)
கம்பர்
இ) தேவநேயப் பாவாணர் ஈ)
வைரமுத்து
11. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப்
பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
‘ காற்றே,வா
மகரந்தத் தூளைச் சுமந்து
கொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்
வா
இலைகளின் மீதும் நீரலைகளின்
மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக்
கொண்டு கொடு “
12.’ மயலுறுத்து ‘ என்பதன்
பொருள்________
அ. விளங்கச் செய் ஆ.
மயங்கச் செய்
இ. அடங்கச் செய் ஈ.
சீராக
13. ப்ராண ரஸம் – என்பதன்
பொருள்
அ. உயிர்வளி ஆ, கார்பன் -டை-ஆக்ஸைடு
இ. ஹைட்ரோ கார்பன் ஈ. கந்தக – டை - ஆக்ஸைடு
14. ‘ மிகுந்த ‘ – இலக்கணக்
குறிப்பு தருக.
அ. வினையெச்சம் ஆ.
முற்றெச்சம்
இ. பெயரெச்சம் ஈ. வினைத்தொகை
15. நீரலைகளின் – பிரித்தெழுதுக
அ. நீர் + அலைகளின் ஆ. நீரின் + அலைகளின்
இ. நீரலை + களின் ஈ. நீர் + அலைகளின்
இணைய வழித் தேர்வு - ஆகஸ்ட் 2022
விடைக்குறிப்பு