10TH-TAMIL- ONE MARK - GOVT QUESTIONS - ONLINE QUIZ - SEP 2020

 

செப்டம்பர் தேர்வு  வினாத்தாள் 2020 ( தனித்தேர்வர் வினாத்தாள் )

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி              மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )                                 

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                            15×1=15


1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன்;சேரலாதன்      ஆ)  அதியன்;பெருஞ்சாத்தன்

 இ)  பேகன் ; கிள்ளிவளவன்  ஈ)  நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி


2. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் ‘ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது              

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது


3.” பெரிய மீசை “ சிரித்தார் – இதில் அமைந்துள்ள தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை                     ஆ) உவமைத் தொகை     

இ) அன்மொழித் தொகை             ஈ) உம்மைத் தொகை


4. ‘ உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்        

இ) மருத்துவரிடம் நோயாளி          

ஈ) நோயாளியிடம் மருத்துவர்


5. திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.

அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.

ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


6. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை        ) மோனை,எதுகை

) முரண்,இயைபு              ) உவமை,எதுகை


7 கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது  

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்          

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்


8. குயில்களின் கூவலிசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்

அ) மொட்டின் வருகை                ஆ) வனத்தின் நடனம்

இ)  உயிர்ப்பின் ஏக்கம்                 ஈ) நீரின் சிலிர்ப்பு


9. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

1) வினைமுற்று                          -        I ) கெடு

2. தொழிற்பெயர்                         -        ii) கட்டு

3. முதனிலைத் தொழிற்பெயர்       -        iii) எய்தல்

4. வினையடி                    -        iv) வந்தான்

அ) (1) – (iv)   (2) – (iii)                  (3) – (ii)                  (4) – (i)

ஆ) (1) – ( iii) (2) – ( i)                  (3) – (iv)                  (4) – (ii)

இ) (1) – (iv)    (2) – (iii)                  (3) – (i)                   (4) – (ii)

ஈ) (1) – ( i)     (2) – (iii)                  (3) – (ii)                  (4) – (iv)


10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்க.

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்ட் பிஸ்கட்டுகளை ஈக்வலாக வையுங்கள்.

அ) தங்க பிஸ்கட்டுகளைச் சரியாக

ஆ) தங்கக் கட்டிகளை ஈக்வலாக

இ) தங்கக் கட்டிகளை ஈடாக 

ஈ) தங்கக் கட்டிகளை முறையாக


11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்___

அ) நாட்டைக் கைப்பற்றல்                      ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்               ஈ) கோட்டையை முற்றுகையிடல்


பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

  திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

   பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “


12) பாடலின் இலக்கிய வகை

அ) பத்துப்பாட்டு                 ஆ) சிற்றிலக்கியம்  

இ) எட்டுத்தொகை            ஈ) பதினெண் கீழ்க்கணக்கு


13) ‘ கிண்கிணி ‘ என்னும் அணிகலன்

அ) இடையில் அணிவது     ஆ) தலையில் அணிவது    

இ) காலில் அணிவது           ஈ) நெற்றியில் அணிவது


14. குண்டலமும் குழைக்காதும் – இலக்கணக் குறிப்பு தருக

அ) எண்ணும்மை                        ஆ) உம்மைத்தொகை       

இ) உவமைத்தொகை                  ஈ) வினைத்தொகை


15) சீர் எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.

அ) பட்ட,பொட்டொடு         ஆ) செம்பொன்,பைம்பொன்

இ) சரிந்தாட,பதிந்தாட         ஈ) பண்டி,குண்டலம்




Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post