இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2024
மாதிரி வினாத்தாள் - 3
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
_________________________________________________________________________
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1 மேன்மை தரும் அறம் என்பது______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
2. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________
அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
4. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
கல் சிலைஆகும் எனில் நெல் _______________
அ) சோறு ஆ) கற்றல் இ) எழுத்து ஈ) பூவில்
5. காசிக்காண்டம் என்பது –
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
6. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து – பழைய சோற்றினைப் பற்றி கூறும் நூல்
அ) குறுந்தொகை ஆ) மலைபடுகடாம்
இ) முக்கூடற்பள்ளு ஈ) விவேக சிந்தாமணி
7. திறன்பேசியின் தொடு திரை உடைந்தது – இதில் தொடுதிரைக்கான தொகை யாது?
அ) வினைதொகை ஆ) பண்புத் தொகை
இ) உம்மைத் தொகை ஈ) வேற்றுமைத் தொகை
8. ‘பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
9 சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
அ) பாரதியார் ஆ) ஜி.யு.போப் இ) க.சச்சிதானந்தன் ஈ) பாவலரேறு
10. . உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் எனக் கூறும் நூல்
அ) காசிக்காண்டம் ஆ) விவேக சிந்தாமணி
இ) மலைபடுகடாம் ஈ) நற்றிணை
11 சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
13. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி
14. இப்பாடலின் ஆசிரியர் ______
அ. பெருஞ்சித்திரனார் ஆ. பாரதியார் இ. தமிழழகனார் ஈ. கீரந்தையார்
15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகை சொற்கள்
அ. முத்தமிழ் – முச்சங்கம் ஆ. சங்கம் - நித்தம்
இ. அணைகிடந்தே – இணை கிடந்த ஈ. ஆழிக்கு – தமிழ்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. சம்பாவில் அறுபது உள்வகைகள் உண்டு.
ஆ. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
17. . ‘ இறடிப் பொம்மல் பெறுகுவிர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
18. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி குறிப்பிடுக.
19. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
20. விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
21. ‘ அறிவு ‘ என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. வினாவின் வகைகளைக் கூறுக
23. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ. அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்.
ஆ. “ இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர் “ என்று கூறினான்
24. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ. “ இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார்.
( வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )
ஆ. தந்தை,” மகனே ! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா? “ என்று சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக )
25. கலைச்சொல் தருக
அ. EMBLEM ஆ. INTELLECTUAL
26. வினா வகையையும்,விடை வகையையும் காண்க.
“ காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “ இந்த வழியாகச் செல்லுங்கள் “. என்று விடையளிப்பது.
27. வருக – பகுபத உறுப்பிலக்கணம் தருக
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
எதிர்மறையாக எழுதுக :- அ. கொடுத்து சிவந்த ஆ) கேட்ட பாடல்
28. தொடர்களில் உள்ள எழுவாயை செழுமை செய்க
அ. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்
ஆ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.” இன்றைய சூழலில் நான் “ நீர் தன்னைப் பற்றிப் பேசுவதாக உங்களுடைய கற்பனையில் மூன்று கருத்துகளை எழுதுக
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,
அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?
ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.
இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?
31 சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. மருவூர்ப் பாக்க கடைத்தெருவையும்,உங்கள் ஊரில் உள்ள கடைத்தெருவையும் ஒப்பிட்டு மூன்று தொடர்கள் எழுதுக.
33. “ மகரந்த தூளைச் சுமந்து கொண்டு,
மனத்தை மயலுறுத்துகின்ற இனிய
வாசனையுடன் வா” – என்ற பாடல் அடிகளில்
(அ) அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
(ஆ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?
(இ) சுமந்துகொண்டு – என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை அமைக்க.
34. “ தண்டலை மயில்க ளாட“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல் (அல்லது )
“அன்னைமொழியே “ எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35‘ ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக
36. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37. தீவக அணியை விளக்கி,அதன் வகைகளை எழுதுக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை;அறிக! -கண்ணதாசன்.
( அல்லது )
ஆ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
39. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ. கொரோனா பெருந்தொற்று ஊரடங்குக் காலத்தில் உங்கள் நேரத்தை எவ்வாறு பயனுறக் கழித்தீர்கள் என்பதை நண்பனுக்கு விவரித்து கடிதம் எழுதுக
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. கதவு எண்- 50, காந்தி தெரு, சேலத்தில் வசித்து வரும் அன்பழகன் மகள் ரேவதி, சேலம் கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை ரேவதியாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.
42. அ) நீங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நடந்துக் கொள்ளும் விதத்தை பட்டியலிடுக
( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க:-
1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela
2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?
( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?
( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.
( v ) உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்று தந்து விளக்குக. ( அல்லது )
ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக
44. அ இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும். ( அல்லது )
ஆ ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘
என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும். 45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
குறிப்புகள்: முன்னுரை – கொரோனா பெருந்தொற்று – தடுப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வுச் செயல்பாடுகள் – நமது கடமைகள் – முடிவுரை ( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
குறிப்புகள் : முன்னுரை – சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு– ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளைத் தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை.
CLICK HERE TO GET PDF