10TH-TAMIL-2ND REVISION - MODEL QUESTION - 2-PDF

  

 

இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2024

மாதிரி வினாத்தாள் - 2

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1. வேர்கடலைமிளகாய்விதைமாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை  

குலைவகை       மணிகை        கொழுந்துவகை           இலை வகை

2. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

அ) உழவு,மண்,ஏர்,மாடு                 ஆ) மண்,மாடு,ஏர்,உழவு     

இ) உழவு,ஏர்,மண்,மாடு                 ஈ) ஏர்,உழவு,மாடு, மண்

3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்________

அ) துலா       ஆ) சீலா        இ) குலா       ஈ) இலா

4. “ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் “ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ. குறுந்தொகை    ஆ. கொன்றை வேந்தன்    இ. திருக்குறள்                  ஈ. நற்றிணை

5. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை


6. “ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫   ) மூன்று, நான்கு – ௩ , ௪       

) ஐந்து , ஏழு – ௫ , ௭         ) நான்கு , ஆறு – 


7. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்.

) மதுரை    ) புகார்                ) வஞ்சி      ) முசிறி

8. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

9 தலையில் அணியும் அணிகலன்_________

அ) கிண்கிணி           ஆ) சுட்டி      இ) சூழி        ஈ) குண்டலம்

10. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?                      

ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?

இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?    

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

11 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் உள்ள தமிழ் தெரு   _______

அ) கரிகாலன் தெரு           ஆ) இராஜேந்திர சோழன் தெரு    

இ) இராச சோழன் தெரு     ஈ) குலோத்துங்கன் தெரு


பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மையில்லை நேர்நெறுக ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்


12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

அ) வண்மை - வறுமை      ஆ) திண்மை – நேர்மை

இ) உண்மை - வெண்மை ஈ) பொய் – பல்கேள்வி


13 ) பாடலின் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக

அ) வண்மை – வெண்மை  ஆ) திண்மை - நேர்மை              

இ) உண்மை - வெண்மை ஈ) பொய் – திண்மை


14 ) புகழுரை - பிரித்து எழுதுக

அ) புகழ் + இரை ஆ) புகழ் + உரை  இ) புகழு + உரை

ஈ) புகழு + இரை


15 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) நீதி வெண்பா      ஆ) கம்பராமாயணம்

இ) சிலப்பதிகாரம்     ஈ) தேம்பாவணி


பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                 4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

ஆ. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரத்தத்தை எழுதினார்.


17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

18. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி குறிப்பிடுக.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.


20. காலக்கழுதை கட்டெறும்பானதும் – கவிஞர் செய்தது யாது?.


21.  உலகு – எனத் முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                              5×2=10

22. மாடிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. இப்பத்தியில் தடித்த எழுத்துகளில் உள்ள தொடர்களின் வகைகளை எடுத்தெழுதுக.


23. மாமழை பெய்கையிலே

      மாம்பூவே கண்ணுறங்கு – தொடர்வகைகளை எழுதுக


24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.


25. கலைச்சொல் தருக

அ. COSMIC RAYS                        ஆ. Revivalism


26. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்


27. ஒலித்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக


குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்க :-  அ. சிலை - சீலை   ஆ) மலை – மாலை


28. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?


பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?


30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

“ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் “ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்க காலத்திலேயே தமிழில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண,மகாபாரத் தொன்மைச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன. இதுவும் பிற மொழிக்கருத்துகளை, கதைகளை, தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை,  சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக்கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

அ. இப்பத்தியில் இடம்பெறும் செப்பேட்டுக் குறிப்பு எவ்வூரைச் சார்ந்தது?

ஆ. சங்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததை எதன் மூலம் அறியலாம்?

இ. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட காப்பியங்கள் எவை?

31. முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ சித்தாளின் மனச்சுமைகள்

      செங்கற்கள் அறியாது “

- இடஞ்சுட்டிப் பொருள் எழுதுக.


33. “ மாளாத காதல் நோயாளன் போல் “ என்னும் தொடரிலுள்ள  உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.


34. “ அருளைப் “ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடலை அடிமாறாமல்  எழுதுக


(அல்லது )

“ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணித  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                       2×3=6

35‘ ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக


36. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

      அழுதகண் ணீரும் அனைத்து – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.


37. நிரல்நிறை அணியை விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) காசிக்காண்டம் குறிப்பிடும் இல்லற ஒழுக்கங்களில் எவையேனும் ஐந்தினை எழுதி, உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரை எதிர்கொண்டு, நீங்கள் விருந்தளித்த நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதுக 

( அல்லது )

ஆ) ‘ சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் ‘ என்ற தலைப்பில்  கீழ்க்காணும் குறிப்பினைக் கொண்டு உங்கள் இலக்கிய உரையைத் தொடர்க.

குறிப்பு :

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து  அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கைக் காட்சியைப் பெரிய கலை நிகழ்வாகவே காட்டும் கன்பனின் கவி நயம்……….

39. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

( அல்லது )

ஆ. நீங்கள் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு அந்நூலைப் படிக்குமாறு பரிந்துரை செய்து உங்கள் நண்பருக்குக் கடிதம் ஒன்று எழுதுக..

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.



41. எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி.கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாகப் பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.


42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை  போண்று  நீவிர் கண்ட பல்வேறு பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரித்துக் காக்கும் வழிமுறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக..             ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.


குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I )ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.


பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                   3×8=24

43. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.                

  ( அல்லது )


ஆ) விருந்தினர் பேணுதல், பசித்தவருக்கு உணவிடல் போன்ற தமிழர் பண்பாடு இன்றைய சூழலில் உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் உணவிட்ட செயலையும் அழகுற விவரிக்கவும் .


44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க

       ( அல்லது )


 ‘ பாய்ச்சல் ‘ கதையில் அழகு தன்னை மறந்து ஆடியதைப் போன்று உங்கள் தெருக்களில் நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞரைக் குறித்து அழகுற விளக்கி எழுதுக.


45. அ) மனித நேயமிக்க ஆளுமை ஒருவருக்கு குறிப்புகளைப் பயன்படுத்தி நினைவிதழ் ஒன்று உருவாக்குக.

முன்னுரை – என் இளமைப் பருவம் – விடுதலைப் போராட்டத்தில் நான் – பொது நலமே தன்னலம் – எளிமையே அறம் – நாட்டின் முன்னேற்றமே நோக்கம் – எளியோரின் அன்பே சொத்து – முடிவுரை

( அல்லது )


ஆ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – பொருட்காட்சி அமைவிடம் – நுழைவுக்கட்டணம் – பலவித அரங்குகள் – நடைபெற்ற நிகழ்ச்சிகள் – பல்துறை அங்காடிகள் – பெற்ற உணர்களும் நன்மைகளும் – முடிவுரை

 

 CLICH HERE TO GET PDF

KINDLY WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post