10TH-TAMIL-2ND REVISION - MODEL QUESTION -1-PDF

 

இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2024

 மாதிரி வினாத்தாள் - 1

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1. காசிக்காண்டம் என்பது __________

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்      

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்    

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

2. ‘ பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி

அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்                    ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ. கடல் நீர் ஒலித்தல்                                     ஈ. கடல் நீர் கொந்தளித்தல்

3“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்       ஆ) அறிவியல்        இ) கல்வி      ஈ) இலக்கியம்

4. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்            

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                 

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

5. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள் ___________

அ) தாமரை இலை நீர் போல்                            ஆ) வாழையடி வாழை

இ) கண்ணினைக் காக்கும் இமை போல ஈ) மழை முகம் காணாப் பயிர்போல

6. குளிர் காலத்தைப் பொழுதாக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்               

ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்    

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்              

ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

7. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________

அ) திரு.பிரகாசம்     ஆ) மார்ஷல்.ஏ.நேசமணி     இ) தனிநாயகம் அடிகள்     ஈ) ந. முத்துசாமி

8. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

அ) இகந்தால் என்மனம் இறந்துவிடாது             

ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் 

ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

9 உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் எனக் கூறும் நூல்

அ) காசிக்காண்டம்             ஆ) விவேக சிந்தாமணி      

இ) மலைபடுகடாம்             ஈ) நற்றிணை

10. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின் பொருள்

அ. சிற்றூர்     ஆ. பேரூர்     இ. கடற்கரை           ஈ. மூதூர்

11 ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் அனைத்து இடங்களிலும் சென்று பொருந்தி பொருளை விளக்குவது _____ அணி

அ) தற்குறிப்பேற்ற அணி               ஆ) தீவக அணி       

இ) நிரல்நிறையணி                     ஈ) தன்மையணி

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவோடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருத்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே“

12. இப்பாடலின் ஆசிரியர்

அ. இளங்கோவடிகள் ஆ. கண்ணதாசன்   இ. வீரமாமுனிவர்             ஈ. அதிவீரராம பாண்டியன்

13. இப்பாடல் இடம்பெற்ற நூல்-------

அ. காலக்கணிதம்    ஆ. தேம்பாவணி       இ. சிலப்பதிகாரம்     ஈ. இரட்டுறமொழிதல்

14. இப்பாடலில் உள்ள எதுகைச் சொற்கள் _________

அ. பூக்கை - பூவை            ஆ. குவித்து - காக்கென்று

இ. ஆக்கை - அழுங்கணீர்  ஈ. சேக்கை - யாக்கை

15. யாக்கை  – என்பதன் பொருள்

அ. உணவு    ஆ. உறக்கம்           இ. உடல்                ஈ. உடை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                 4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் ஜெயகாந்தன்.

ஆ. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.

17. ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டினை எழுதுக.

18. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

19. ஆற்றுப்படை என்றால் என்ன?

20. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

21.  விடல் – எனத் முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                              5×2=10

22. விடையின் வகைகளைக் கூறுக

23. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

          மேகலை, தேன், பூ, மழை, மணி

24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-   மலை  - மாலை

25. கலைச்சொல் தருக

அ. COSMIC RAYS                        ஆ. FOLK LITERATURE

26. ஆலும் வேலும் பல்லுக்குறுதி,நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

-இத்தொடகள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும், தமிழெண்களையும் குறிப்பிடுக.

27. வாழ்க – பகுபத உறுப்பிலக்கணம் தருக

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப்பெயர்களைக் காண்க :-  அ. புல்   ஆ) ஆடு

28. பொருள் கூறுக:-   அ. கட்புள்              ஆ) திருவில்

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”

- இது போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி ‘ அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் ‘ என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை?

ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது?

இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது?

31“ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. கம்பராமாயணம் – நூற்குறிப்பு வரைக.

33. வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

34. “ வாளால் “ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

“ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                       2×3=6

35.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

      அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக

37. கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்றுகள் தருக.              

( அல்லது )

ஆ) ’ காலக்கணிதம்’ கவிதையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள கருத்துகளுள் உங்களைக் கவர்ந்த ஐந்து கருத்துகளை எழுதுக.

39. மருந்தகம் ஒன்றிலிருந்து உங்கள் தாத்தா வாங்கி வந்த மருந்தின் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்ததை அறிந்த நீங்கள், அந்த மருந்தகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரதுறை ஆய்வாளர் அவர்களுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுக.

( அல்லது )

ஆ. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

41. அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15. காந்தி தெரு, குமாரபாளையம்,நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்கு சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

பெயர் : அருளன், தந்தை : செல்வம், முகவரி : கதவு எண்.25, திலகர் தெரு, மதுரை வடக்கு-2.

42. அ) நீங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நடந்துக் கொள்ளும் விதத்தை பட்டியலிடுக

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டுஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்சுள்ளி மலர்பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றனஅவையாவனநெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளைவேளைஊமத்தம்கள்ளிமுருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவைகரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்இது மூங்கில் அரிசி எனப்படும்.

(i)கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

(ii). புறத்தே காட்சிப்படாமல் உள்ளே பொதிந்திருக்கும் மலர்கள் யாவை?

(iii). இனிப்பான பூக்கள் எது?

(iv) எந்தப் பூ குடிநீருக்கு மணத்தை ஏற்றும்?

(v மூங்கில் அரிசி என்றால் என்ன?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                   3×8=24

43. அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்கவும். ( அல்லது )

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்  பேசுவதற்கான  உரைக்குறிப்புகளை எழுதுக

44. அ “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.

          ( அல்லது )

 நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் – பள்ளிக் கலையரங்கம்                          நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புகள்: முன்னுரை – கொரோனா பெருந்தொற்று – தடுப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வுச் செயல்பாடுகள் – நமது கடமைகள் – முடிவுரை             ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..

குறிப்புகள் : முன்னுரை – கல்பனா சாவ்லா இளமைப் பருவம் – விண்வெளிப் பயணம் – விண்வெளி சாதனைகள் – முடிவுரை

 click here to get pdf

PLS WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post