10TH-TAMIL-1ST REVISION - THENI-ANSWER KEY-2024

 


தேனி மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  பத்தாம் வகுப்பு தமிழ்  பாடத்திற்கான திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் விடைக்குறிப்பு கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு - 2024
பத்தாம் வகுப்பு - தேனி

தமிழ்
PDF LINK AVAILABLE IN LAST

தேனி – முதல் திருப்புதல் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 + 15 மணி                                                          மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. சிற்றூர்

1

2.

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

3.

இ. எம் + தமிழ் + நா

1

4.

அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

1

5.

ஈ. இலா

1

6.

இ. பின்பனிக்காலம்

1

7.

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

8.

ஆ. மணிவகை

1

9.

அ) அன்மொழித்தொகை

1

10.

ஈ. வேற்றுமை உருபு

1

11.

இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி

1

12 .

ஆ. தளரப்பிணைத்தால்

1

13 .

இ. உலகம்

1

14 .

ஈ. உமா மகேஸ்வரி

1

15

அ. முடிச்சு + இட்டால்

1

பகுதி - 2

16

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்

2

17.

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

2

18.

v  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்

2

19

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

20

·         கலைகள் யாருடைய வாழ்விற்கு அழகூட்டுபவை?

·         கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?

2

21.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

பிரிவு - 2

22

உரைத்த – உரை + த் + த் + அ

உரை – பகுதி த் – சந்தி த் – இறந்தகால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி

1

1

23

·         குழந்தை முத்துப்பற்களால் சிரிப்பது அழகு.

·         காலையில் எழுகதிர் அழகு

1

1

24

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

25

·         கடல் , மழை

·         புலி

1

1

26

·         உடுப்பதூஉம் உண்பதூஉம்இன்னிசை அளபெடை.

·         செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

1

1

27

·         குழந்தைகளுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம்

·         திருடன் காவல் அதிகாரியிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான்.

 

1

1

28

·         கலந்துரையாடல்

·         பாசனம்

1

1

பகுதி – 3

29

·         காலமாற்றத்தால் வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள், சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை.

·         திருவிழாக்காலங்களில் தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது.

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை.

3

30

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

31

·         தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக் கூடாது

·         பசு, பார்ப்பனர்,பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

·         போர் அறம்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

3

33

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

34

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்          திருவரை யரைஞா  ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

ஒரு செய்யுளில் பல அடிகளில் சி்தறிக்கிடக்கும சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டி பொருள் கொள்வது கொண்டு கூட்டு பொருள்கோளாகும்.

எ.கா : ஆலத்து மேல குவளை குளத்துள

            வாலின் நெடிய குரங்கு.

3

36

·         உவமை அணி வந்துள்ளது.

·         உவமை – சொல்லப் பயன்படுவர்

·         உவமேயம் – கொல்லப் பயன்படுவர் கயவர்

·         உவம உருபு – போல்

3

37

 

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

ஊ-ழை-யும்

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

2

உப்-பக்-கம்

நேர் – நேர் - நேர்

தேமாங்காய்

3

காண்-பர்

நேர் –  நேர்

தேமா

4

உலை-வின்-றித்

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

5

தா - ழா

நேர் – நேர்

தேமா

6

துஞற் - று

நிரை – நேர்

புளிமா

7

பவர்

நிரை

மலர்

இக் குறளின் இறுதிச் சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

38

கட்டளைச் சொற்கள் : அவித்து விடாதே

வேண்டுகோள் சொற்கள் : வாசனையுடன் வா

·         புயல் காற்றினால் மக்கள் பலர் மீளாத்துயரில் தவிக்க கூடும் என்பதால் அவித்து விடாதே என்று கட்டளை இடுகிறார்.

உயிரினங்கள் காற்றையே உயிர் மூச்சுகாக இருப்பதால் வாசனையுடன் வா என வேண்டுகோள் வைக்கிறார்

5

38ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்

·         மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

5

39அ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

          வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

               நன்றி.

இடம் : சேலம்                                                                                இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                                                 தங்கள் உண்மையுள்ள,                                                                                                       அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001

5

39ஆ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற நூலில் மரங்கள் பயன், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம், மரங்கள் இல்லையெனில் மனித இனம் இல்லை என்பன போன்ற கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கும் அளவில் உள்ளது. நீயும் அந்த நூலைப் படித்து இயற்கையை பேணும்படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

 

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

40

ஏற்புடைய படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூற விழைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

42ஆ

1. அறம் பெருகும்

2. உறவுகள் வலுப்படும்

3. நண்பர்கள் பெருகுவர்

4. நன் மதிப்பு கிடைக்கும்

5. அனைவரிடமும் மரியாதை இருக்கும்

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

43ஆ

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத் தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினையும் அறியலாம்.

 

44அ

 

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

 

44ஆ

மகளிர் நாள் விழா

அறிக்கை

          எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

          கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

        தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

        இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

Ø  மகளிரின் சிறப்புகள்

Ø  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

Ø  சுய உதவிக்குழுக்களின் பங்கு

Ø  மகளிர் கல்வி

போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.

 

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

        ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

 மாணவத் தலைவரின் நன்றியுரை:

        மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

8

45அ

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

கல்பனா சாவ்லா

இளமைப் பருவம்

விண்வெளிப் பயணம்

விருதுகளும் அங்கீகாரங்களும்

விண்வெளியில் தமிழரின் அறிவு

விண்ணியல் அறிவில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,     அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post