NAGAPATTINAM - 10TH-TAMIL-HALF YEARLY - ANSWER KEY- PDF - 2023

   

 நாகப்பட்டிணம் – அரையாண்டுத் தேர்வு  -2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                           மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. மணிவகை

1

2.

ஈ. இலா

1

3.

ஈ. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

4.

அ. திருப்பதியும், திருத்தணியும்

1

5.

ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

1

6.

அ) அருமை + துணை

1

7.

ஆ. சண்முக சுந்தரம்

1

8.

இ) உருவகம்

1

9.

ஆ. கொளல் வினா

1

10.

இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

1

11.

அ. பாடாண் திணை

1

12 .

அ. கீரந்தையார் 

1

13 .

அ. பரிபாடல்

1

14 .

ஈ. வானம்

1

15

ஆ. அடுக்குத்தொடர்

1

பகுதி - 2

16

அ. பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்?

ஆ. அரும்பு எனப்படுவது எது?

1

1

17.

1. கண்காணிப்பு காமிராக்கள்                 2. நவீன திறன்பேசி

2

18.

தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

2

19

·         அறம் கூறும் மன்றங்கள்

·         துலாக்கோல் போல் நடுநிலையானது

·         மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

20

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

21.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

பிரிவு - 2

22

v  இன்சொல் பேசுவதே சிறப்பு.

v  காலையில் எழுகதிர் அழகாக இருக்கும்.

1

1

23

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி                             த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்                   த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

1

1

24.

v  உதகை

v  கோவை

1

1

25

அ. தொன்மம்

ஆ. மெய்யியலாளர்

1

1

26

அ. கர்ணன் எளியவர்களுக்கு அள்ளி இறைத்து கொடை

   தர்மம் செய்தான்

ஆ. கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்

1

1

27

உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

2

28

குறிஞ்சி – யாமம்

முல்லை – மாலை

மருதம் – வைகறை

நெய்தல் – எற்பாடு

பாலை - நண்பகல்

2

பகுதி – 3

29

Ø   வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும்அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்

3

30

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :        நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்

3

31

அ.

இ.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

Ø  நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர்மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

Ø  உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

33

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது

3

34

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.        

 கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே                     வீரமாமுனிவர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடும்,மாடும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்குடிக்கின்ற நீர்,குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36

 

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

பல்-லார்

நேர் – நேர்

தேமா

2

பகை-கொள-லின்

நிரை–நிரை-நேர்

கருவிளங்காய்

3

பத்-தடுத்-த

நேர்–நிரை -நேர்

கூவிளங்காய்

4

தீ-மைத்-தே

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

5

நல்-லார்

நேர் – நேர்

தேமா

6

தொடர்-கை

நிரை – நேர்

புளிமா

7

விடல்

நிரை

மலர்

இக் குறளின் இறுதிச் சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

·         அகவல் ஓசை பெற்று வரும்.

·         ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்

·         ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

·         வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

·         மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்

·         ஏகாரத்தில் முடிவது சிறப்பு

3

பகுதி - 4

38

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

5

38ஆ

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

5

39அ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம்நீ அங்கு நலமாஎன அறிய ஆவல். இன்று அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. அதிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும், வெளியில் சென்று வந்தால் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடலுக்கு சிறு தொந்தரவு என்றாலும் வருமுன் காப்பது சிறந்தது என்பது  போல ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும். இதனை எல்லாம் நீயும் உனக்கு அருகில் இருப்பவருக்கும் கூறி முன்னெச்சரிக்கையாக இரு.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

 

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

39ஆ

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு

          வணக்கம்எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளனஎங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளனஇதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றனஎனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

               நன்றி.

இடம் : சேலம்                                                                                இப்படிக்கு,

நாள் : 04-03-2021                                                                 தங்கள் உண்மையுள்ள,                                                                                                         அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,         சேலம் – 636001

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42ஆ

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றதுஅங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளனவிவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறதுஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. கோடை

2. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதைக்காற்று எனப்படுகிறது

3. குடக்கு

4. வடக்கு

5. நான்கு திசைகளில் காற்று

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்

8

43ஆ

வாசிப்போம்                                                                                             நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்           :         ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்          ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

இனி வாராவாரம் ஆரவாரம்வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில் வெளிவரும்.

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

உங்கள் பிரதிக்கு முந்துங்கள்…..

நன்றி

 

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

44ஆ

மகளிர் நாள் விழா

அறிக்கை

          எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

          கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள்ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

        தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார்தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

        இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்லஅனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

Ø  மகளிரின் சிறப்புகள்

Ø  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

Ø  சுய உதவிக்குழுக்களின் பங்கு

Ø  மகளிர் கல்வி

போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

        ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

 மாணவத் தலைவரின் நன்றியுரை:

        மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார்மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும்கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல் மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

8

45ஆ

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம்குடியரசு தினம்காந்திஜெயந்திதேசிய ஒருமைப்பாடு தினம்ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 PDF

CLICK HERE

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 KINDLY WAIT FOR 10 SECONDS

PDF

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

 

 

 

 

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post