9TH-TAMIL-UNIT-8- PERIYARIN SINTHANAIGAL - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      பெரியாரின் சிந்தனைகள்


அறிமுகம்                   :

Ø  சமூகத்திற்கு பாடுபட்டவர்களில் நீ அறிந்தவர் பற்றிக் கூறுக.

Ø  அண்ணல் அம்பேத்கர் பற்றிக் கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  தமிழரின் சிந்தனை மரபுகளை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  பெரியாரைப் பற்றி அறிமுகம் செய்தல்

Ø  உரைப்பத்தியை வாசிக்க வைத்தல்

Ø  சமூகப் பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல்

Ø  பெரியாரின் சிந்தனைகளைப் போற்றுதல் அறநெறி கருத்துகளை பின்பற்ற வலியுறுத்தல்

கருத்துரு வரைபடம்                 :

பெரியாரின் சிந்தனைகள்

 



 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

பெரியாரின் சிந்தனைகள்

Ø    வெண்தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன், ஈரோட்டுச் சிங்கம்

Ø    ஏன்?எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி,அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு

Ø    சாதி மனிதனுக்கு தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

Ø    கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்

Ø    தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத் தர வேண்டும் எனக் கூறினார்.

Ø    இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்களில் தமிழில் படைக்க வேண்டும்.

Ø    உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஒள’ என்பதனை ‘ அவ்’ எனவும் சீரமைத்தார்.

Ø    பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.

Ø    அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.

Ø    தன் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்.

 காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   பிழையின்றி வாசித்தல்

Ø    புதிய வார்த்தைகளை காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   பெரியாரைப் பற்றி அறிதல்

Ø   உரைப்பத்தியை வாசித்தல்

Ø   பெரியாரின் சிந்தனைகளைப் போற்றுதல்

Ø   பெரியாரின் சிந்தனைகளை சமூகத்தோடு ஒப்பிடல்

மதிப்பீடு      :

·                Ø  பெரியாருக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் யாவை?

·                Ø  பெரியார் விதைத்த விதைகள் பற்றி கூறுக

·                Ø  பெரியாரிடம் நீ கேட்க வேண்டிய வினாக்களைப் பட்டியலிடுக.

கற்றல் விளைவுகள்                  :

                 பெரியாரின் சிந்தனைகள்

T938 -மொழியில் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மரபுகளைப் படித்தறிதலுடன் ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க அடிப்படையில் கலந்துரையாடுதல், அறச் செயல்களைப் பின்பற்றி வாழும் எழுச்சி பெறுதல்

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   பெரியாரின் சிந்தனைகளை  எழுதுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post