9TH-TAMIL-SLM-HALF YEARLY EXAM - ANSWER KEY -2023 - PDF

 

 சேலம் – அரையாண்டுத் தேர்வு  -2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ. சிற்றிலக்கியம்

1

2.

ஈ. தொகைச் சொற்கள்

1

3.

அ. 1929

1

4.

இ. தென்னை

1

5.

அ. மாமல்லபுரம்

1

6.

ஈ. சேக்கிழார்

1

7.

அ.அ,இ

1

8.

ஆ. பண்புத்தொகை, வினைத்தொகை

1

9.

ஆ. திருத்தக்கத் தேவர்

1

10.

ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

1

11.

இ. சேரநாடு, சோழ நாடு

1

12 .

ஈ. மிக்க வயல்

1

13 .

அ. வெண்பா

1

14 .

அ. அரக்கு + ஆம்பல்

1

15

ஈ. முத்தொள்ளாயிரம்

1

பகுதி - 2

16

அ. சங்குகள் ஈனுகின்ற முட்டைகள் எவ்வாறு இருந்தன?

ஆ. சோழநாட்டின் எந்தப் படை வலிமையானது?

1

1

17.

திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது.

2

18.

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

19

ü  தொலைநகல் இயந்திரம் ( FAX )

ü  தானியங்கு பண இயந்திரம் ( ATM )

ü  ஆளறி சோதனைக் கருவி ( BIOMETRIC DEVICE )

ü  வங்கி கணக்கு அட்டை அச்சுப்படி இயந்திரம்

ü  அட்டை தேய்ப்பி இயந்திரம்

2

20

நெற்பயிர்களுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

2

21.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

2

பிரிவு - 2

22

Ø  பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்

Ø  குழலிக்கும் பாடத் தெரியும்.

1

1

23

அ. பலமுறை தோல்வி அடைந்தவனுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாக உள்ளது.

ஆ. மாறன் உலக அனுபவம் இல்லாமல் கிணற்றுத்தவளையாக உள்ளான்.

1

1

24.

அ. இந்திய தேசிய இராணுவம்    

ஆ. கரும்புச்சாறு

2

25

அ. கல்

ஆ. இடமெல்லாம் சிறப்பு

1

1

26

அ. நல்ல (அ) பெரிய

ஆ.கொடிய  (அ) பெரிய

1

1

27

சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைதளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்

1

1

28.

பொருத்தமான தமிழெண் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

2

பகுதி – 3

29

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

3

30

சேரநாடு :

        வயல்களில் செவ்வாம்பல் மலர்கள் விரியத் தொடங்கின. அதனை கண்ட நீர்ப்பறவைகள் தீப்பிடித்தது என அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளில் ஒடுக்கி வைத்தன. சேர நாட்டில் இந்த அச்சம் இருக்கிறது.

சோழ நாடு :

        நெற்போர் மீது உழவர்கள் நின்றுக் கொண்டு மற்ற உழவர்களை நாவலோ என அழைப்பது யானை மீது ஏறி நின்றுக் கொண்டு மற்ற வீரர்களை நாவலோ என அழைப்பது போல் உள்ளது.

பாண்டிய நாடு :

        சங்குகள் மணலில் ஈனும் முட்டைகள் முத்துகள் போல் உள்ளன.

  • புன்னை மொட்டுகள் முத்துகள் போல் உள்ளன. பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் துளிகள் முத்துகள் போல் உள்ளன.

3

31

அ. பெரியார்

ஆ. பெரியார் குடியரசு, விடுதலை, உண்மை

இ. பெரியார்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  தமிழ் மொழி காலத்திற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்கிறது

Ø  சங்க காலங்களில் தமிழ் மொழியை ஓலைச் சுவடிகளில் எழுதினர்

Ø  அதன் பின் காகிதங்களில் எழுதுகோல் கொண்டு எழுதப்பட்டது.

Ø  அச்சகங்களில் அச்சுகோப்பாக மாறி அச்சாகி வெளிவந்தது

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  மேலும் பல்வேறு விதமான கலைச் சொல் உருவாக்கப்பட்டும் காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்மொழி

3

33

·         விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

·         கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

·         கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

·         இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.

3

34

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு*.                   - காரியாசான்

3

34

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

 ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*   -   தொல்காப்பியர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

இயல்பு புணர்ச்சி:-

·         நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது.

விகாரப்புணர்ச்சி :

·         நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது மாற்றங்களோடு  புணர்வது.

·         தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரம் மூவகைப்படும்

3

36

விளக்கம் :

        இயல்பாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிபேற்ற அணி.

எ.கா :

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

பொருத்தம்:

          நீர் மிக்க வயல்களில் செவ்வாம்பல் மலர்வது இயல்பான நிகழ்வு. பறவைகள் நீரில் தீப்பிடித்துவிட்டது என அஞ்சுவதாக தன் கற்பனையை ஏற்றிக் கூறியுள்ளார்

3

37

·         ஆறு வகைப்படும்

·         பகுதி, விகுதி, சந்தி,சாரியை, விகாரம், இடைநிலை.

3

பகுதி - 4

38

v  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

v  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

v  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

v  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

v  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

v  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

v  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

v  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

v  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

v  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

v  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

38ஆ

·         முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

·         புலவர்கள் குறம், பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

·         தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

·         தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

·         மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

·         உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

·         மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

5

39அ

முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

5

39ஆ

 Walk like a bull. : ஏறு போல் நட

Love your food : ஊண் மிக விரும்பு

Union is strength : ஒற்றுமை வலிமையாம்

Thinking is great : எண்ணுவது உயர்வு

Strengthen the body. : உடலினை உறுதி செய்

5

40

ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

       சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.

5

40ஆ

12, தெற்கு வீதி,

மதுரை-2

                                                                                28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பனுக்கு,                

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி,

இப்படிக்கு,

                                                                        அன்புநண்பன்,

                                                                           அ.கபிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் – 1

5

41

1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
5. குறித்த நேரங்களில் பள்ளி வீட்டுப்பாடங்களை முடிப்பேன்.
6. பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்டு நடப்பேன்
.

5

42

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

முயற்சிக்கான ஊக்கக் காட்சி

5

42

அ. கால்

ஆ. அலை

இ. 120 – ௧௨௦ , 534-௫௩௪ , 99-௯௯

5

பகுதி - 5

43அ

அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-

ü  வங்கி அட்டையைக் கொண்டு இன்று தேவைப்படும் போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது.

ü  இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

ü  மேலும் இந்த அட்டை மூலம் பல்வேறு விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது.

ü  சமையல் எரிவாயு முன்பதிவு, இரயிலில் முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கான கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட முடிகிறது.

ü  வங்கி அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம்.

திறன் அட்டைக் கருவி:-

·         தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

·         குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

·         நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.

·         அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.

8

43ஆ

மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

·         சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

·         அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள்.

 

 

44அ

·         இசை மொழியினைக் கடந்தது.

·         ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ

·         வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.

·         வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம் செய்தார்.

·         நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         போல்ஸ்காவின் முகத்தில் புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர்.

·         நாதசுர வித்துவான் அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார்.

·         போல்ஸ்காவின் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது.

·         அடுத்து சாந்தமுலேகா என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         இந்த இராகத்தில் போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான்.

·         போல்ஸ்கா, நாதசுர வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’ என்றான்.

இக்கதையின் மூலம் இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம்..

8

44ஆ

கொங்கணாபுரம் – வாரச்சந்தை

        சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். சந்தையானது மக்கள் அதிகம் வந்து போகக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் இந்த சந்தைக்கு வந்து காய்கறிகள், கீரைகள், மளிகைப் பொருட்கள் என வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். சந்தை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது.

சந்தையின் சிறப்பு

          கொங்கணாபுரச் சந்தை ஆடு மற்றும் பருத்தி விறபனைக்குப் பெயர் போனது. இங்கு வாரந்தோறும் தவறாமல் ஆயிரங்கணக்கான ஆடுகளும், கோடிக்கணக்கில் பருத்திகளும் விற்பனை ஆகிறது. இங்குள்ள ஆடுகளும் ,பருத்திகளும் தரம் வாய்ந்தவையாக உள்ளமையால் அனைத்து ஊர் மக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

8

45அ

இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரின் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·           இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·           குறைந்த செலவில் தரமான சேவையைக் கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·           இதுவரை 45 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

·                இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·       1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·       1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·       சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·       நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு.

8

45ஆ

கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-23 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 CLICK HERE TO GET ANSWER KEY PDF

KINDLY WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post