அரையாண்டுத்
தேர்வு மாதிரி வினாத்தாள் – 1/2023
ஒன்பதாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம்
+ 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக 15×1=15
1. ‘
பக்திச்சுவை நனி சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர்______
அ) பெ.சுந்தரனார் ஆ)
வெ.இராமலிங்கனார்
இ) மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரனார் ஈ) சேக்கிழார்
2. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த
காலமும் நிலையாய்
இருப்பதும் தமிழே!............. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
அ) முரண்,எதுகை,இரட்டைதொடை
ஆ)இயைபு,அளபெடை,செந்தொடை
இ) மோனை,எதுகை,இயைபு
ஈ) மோனை,முரண்,அந்தாதி
அ) நீரின்று அமையாது
உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது
யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
க) அ,இ ௨)
ஆ,இ ௩) அ,ஆ ௪) அ,ஆ,இ
4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள் ஆ)
வடசொற்கள்
இ) உரிச்சொற்கள் ஈ)
தொகைச்சொற்கள்
5. தீரா
இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ. குணம், குற்றம்
இ.
பெருமை,
சிறுமை ஈ.
நாடாமை, பேணாமை
6. தமிழ்நாடு
அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ)
தேசியத் திறனறித் தேர்வு ஆ)
ஊரகத் திறனறித் தேர்வு
இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு ஈ)
மூன்றும் சரி
7. கீழ்க்
காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்ச
மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய
நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே!
நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ) வாழ்க்கையில்
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக
8’ பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி ____
அ)
குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
9. இந்திய
தேசிய இராணுவத்தை ............... இன் தலைமையில் .................. உருவாக்கினர்.
அ)
சுபா ஷ் சந்திரபோஸ்,
இந்தியர் ஆ) சுபாஷ் சந்திரபோ ஸ், ஜப்பானியர்
இ)
மோகன்சிங்,
ஜப்பானியர் ஈ) மோகன்சிங்,
இந்தியர்
10. ஐந்துசால்பு ஊன்றிய தூண்_ அடிக்கோடிட்ட சொல்லின் தமிழ் எண்
காண்க
அ) ௬ ஆ) ௫ இ)
எ ஈ) அ
11 நச்சிலைவேல்
கோக்கோதை நாடு,
நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற
நாடுகள் முறையே,
அ)
பாண்டிய நாடு,
சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ)
சேர நாடு,
சோழ நாடு ஈ)
சோழ நாடு, பாண்டிய நாடு
பாடலைப்படித்து (12,13,14,15) வினாக்களுக்கு
விடையளிக்கவும்.
நீர்இன்று அமையா
யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே
உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது
நிலத்தொடு நீரே;
12.இப்பாடலடிகள்
இடம் பெற்ற நூல்.
அ) நீதிவெண்பா ஆ) சிலப்பதிகாரம் இ) புறநானூறு ஈ)
மணிமேகலை
13 ) இப்பாடலின் ஆசிரியர் _________
அ) சாத்தனார் ஆ) குடபுலவியனார் இ) இளங்கோவடிகள் ஈ) நக்கீரர்
14. யாக்கை என்பதன் பொருள் யாது?
அ) காகம் ஆ)
உடல் இ)
நீர் ஈ) நிலம்
15. பாடலில் உள்ள சீர் மோனை சொற்கள்______
அ) நீர் - யாக்கை ஆ) பிண்டம் – நீர் இ) உணவு – நிலவு ஈ) உண்டி - உணவு
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
17. விடைக்கேற்ற வினா அமைக்க
அ. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது
ஆ. சேர,சோழ,பாண்டிய
நாட்டின் வளங்களைக் கூறும் நூல் முத்தொள்ளாயிரம்
18. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர்
உணர்த்தும் கருத்துகளை எழுதுக.
19 தலைவியின் பேச்சில் வெளிபடுகின்ற பாடுபொருள் யாது?
20. பாலைநிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
21. “ விடல் “ – என முடியும் திருக்குறளை
எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. பிழை நீக்கி எழுதுக.
அ. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான
உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
ஆ. பவளவிழிதான் பரிசு
உரியவள்
23. இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
அ. சுடர்க்கொடி
பாடினாள்;
மாலன் பாடினான்
ஆ. அலுவலர் வந்தார்;
அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
24. பழமொழியை நிறைவு செய்க:-
1. இளமையில் கல்வி _____________
2. கற்றோருக்குச் சென்ற _______________
25. கலைச்சொல் தருக:- அ) hero stone ஆ) sugarcane juice
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
அ) குவிந்து
– குவித்து ஆ) சேர்ந்து – சேர்த்து;
26. உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக
மாற்றுக.
அ) மலர்விழி வீணை வாசித்தாள் ;
கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
ஆ) தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள் .
27. பொருத்தமான பெயரடைகளை எழுதுக ( இனிய, கொடிய, பெரிய )
அ. எல்லோருக்கும் ______ வணக்கம்
ஆ. ______ விலங்கிடம் பழகாதே
28. பத்தியில் காணும் ஆகுபெயர்களை எழுதுக.
“தலைக்கு
இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை
மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறைக்க விரும்பாமல் அதனை அவளும்
ஏற்றுக்கொண்டாள்.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
திராவிட
மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில்
தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள் , வடதிராவிட
மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திராவிட மொழிக்குடும்பத்திலுள்ள
தமிழ், கன்னடம், மலையாளம்
முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில
மொழிகள் நடுத்திராவிட மொழிகள்
எனவும் பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனவும்
பகுக்கப்பட்டுள்ளன.
1. திராவிட
மொழிக்குடும்பம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
2. தென்
திராவிட மொழிகள் யாவை?
3. பிராகுயி
எந்த திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?
30. டோக்கியோ கேடட்ஸ் குறிப்பு வரைக
31. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. காலந்தோறும் தமிழ் எவ்வாறு தம்மை புதுபித்துக் கொள்கிறது?
33
இராவண
காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
34. அடிபிறழாமல் எழுதுக.
“தித்திக்கும் “ எனத் தொடங்கும் தமிழ்விடுதூது பாடல் (அல்லது )
“ பூவாது காய்க்கும் “ எனத் தொடங்கும் சிறுபஞ்சமூலம் பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
புணர்ச்சி
என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக
36. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக்
காட்டுக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச்
சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில்
வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
39. அ) உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின்
“ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக. ( அல்லது )
ஆ. உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும்
உலகத் தாய்மொழி நாள்
( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. ) நயம்
பாராட்டுக.
கல்லும்
மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும்
செடியும் கடந்துவந்தேன்;
எல்லை
விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித்
தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத
மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி
குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத
ஊற்றிலும்
உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள்
பொங்கிட ஓடிவந்தேன்.
– கவிமணி
42.அ) மொழிபெயர்க்க.
1 A nations’s culture resides in the hearts and in the
soul of its people – Mahatma Gandhi
2. The art of people is a true mirror to their minds –
Jawaharlal Nehru
3. The
biggest problem is the lack of love and charity – Mother Teresa
4. You have to dream before your dreams can come true –
A.P.J.Abdul Kalam
5. Winners don’t
do different; they do things differently – Shiv Khera
(
அல்லது )
ஆ) உன்னை மகிழச்செய்த பணிகள் – ஐந்து எழுதுக
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும்
இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம்
மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
44. அ) 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக ( அல்லது
)
ஆ . எங்கள் ஊர்ச் சந்தை –
என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக
45. நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு
மதிப்புரை எழுதுக.
( அல்லது )
ஆ) இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க
அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு
மாதிரி வினாத்தாள் – 1
ஆக்கம்
உங்கள் தமிழ்விதை மற்றும்
கல்விவிதைகள் வலைதளம்
உங்கள் மாவட்ட வினாத்தாள்
மற்றும் கற்றல் வளங்களை 8667426866 எனற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம். நீங்கள் செய்யும் இந்த
உதவி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சென்றடையும்.
எங்களோடு பயணிக்க கீழ் வரும்
விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.
வாட்ஸ்
அப் ( புலனம் ) டெலிகிராம்
( தொலைவரி
CLICK HERE TO JOIN CLICK
HERE TO JOIN
https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq https://t.me/thamizhvithai