8TH-TAMIL-UNIT-9- SATTA MEYTHAI AMBEDHKAR- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        இரண்டாம்  வாரம்

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      சட்ட மேதை அம்பேத்கர்


அறிமுகம்                   :

Ø  மனிதர்களிடையே தகராறு வந்தால் அது தீர்க்கும் இடம் எது? எப்படி தீர்வு கிடைக்கும் என்பன போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன் மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்

Ø  சட்டம் என்றால் என்ன என்பது பற்றிக் கூறல்

Ø  சட்டம் மனித வாழ்க்கைக்கு முக்கியம் என்பதனை உணர்த்துதல்

Ø  சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பற்றிக் கூறல்

Ø  அம்பேத்கர் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறல்

Ø  அம்பேத்கரின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

சட்ட மேதை அம்பேத்கர்



 

விளக்கம்    :

( தொகுத்தல் )

சட்ட மேதை அம்பேத்கர்

Ø    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

Ø    பிறப்பு : 14-04-1891

Ø    பெற்றோர் : ராம்ஜி சக்பால் - பீமாபாய்

Ø    1907 – பள்ளிப்படிப்பு

Ø    1912 – இளங்கலை பட்டம்

Ø    1920 – பொருளாதார பட்டம்

Ø    1924 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை

Ø    காந்தியடிகளுக்கும், அம்பேத்கருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம்.

Ø    சுதந்திர தொழிலாளர் கட்சி ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்காக தொடங்கினார்.

Ø    சமத்துவ சமுதாயத்திற்காக சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்.

Ø    அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.

Ø    புத்தரும் அவரின் தம்மமும் என்ற நூலை எழுதினார்.

Ø    1990-இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

 காணொளிகள்        :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø    நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    புதிய வார்த்தைகளைக் காணுதல்

Ø     புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்

Ø    அம்பேத்கரைப் பற்றி அறிதல்

Ø    சட்டம் பற்றிய புரிதல் கொள்ளுதல்

Ø    அம்பேத்கர் மக்களுக்கு ஆற்றியப் பணிகளை அறிதல்

Ø    இந்திய நாட்டின் சட்டம் பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து இயற்றப்பட்டது என்பதன அறிதல்

மதிப்பீடு      :

·         அம்பேத்கர் இயற்பெயர் யாது? ________

·         அம்பேத்கர் எப்போது பிறந்தார்?

·         அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

·         வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

·         பூனா ஒப்பந்தம் பற்றிக் கூறுக

·         பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

கற்றல் விளைவுகள்                  :

                                  சட்ட மேதை அம்பேத்கர்

·      T801 மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப் பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றை படித்து கலந்துரையாட செய்தல்

·      T808   ஒரு கட்டுரையை படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்த கலந்துரையாடல் ,சில வினாக்களுக்கு விடை காண முற்படல்

·      T809    படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக

.__________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post