8TH-TAMIL- HALF YEARLY - QUESTION 2023 -1-PDF

 

 

அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் – 1/2023

 எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                              மதிப்பெண் : 100

பகுதி – I

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                     10×1=10

1 பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில்         ஆ) விசும்பில்        இ) மரத்தில்           ஈ) நீரில்

2. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.

அ) தலை               ஆ) மார்பு               இ) மூக்கு              ஈ) கழுத்து

3. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

அ) பயிலுதல்          ஆ) பார்த்தல்          இ) கேட்டல்           ஈ) பாடுதல்

4. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை          ஆ) காலனை         இ) ஆற்றலை                  ஈ) நலத்தை

5. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்         ஆ) உடற்பயிற்சியின்       இ) உணவின்                  ஈ) வாழ்வின்

6. 'கலனல்லால்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால்    இ) கலன் + அல்லால்  ஈ) கலன் + னல்லால

7. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

அ) மூன்றாம்                   ஆ) நான்காம்         இ) ஐந்தாம்             ஈ) ஆறாம்

பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

அ) செய்தல்           ஆ) வனைதல்                 இ) முடைதல்         ஈ) சுடுதல்

9. செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை .

அ) வினை                      ஆ) பண்பு              இ) அன்மொழி       ஈ) உம்மை

10. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச வேண்டும்.

அ) சொல்லின்                ஆ) அவையின்      இ) பொருளின்       ஈ) பாடலின்

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                        5×1=5

11. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் _____.

12. புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.

13எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______.

14. . ‘பாலாடை’ - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____

15. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

III) பொருத்துக:-                                                                                    4×1=4

16. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.

17. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.

18. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்.

19. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

பகுதி – II / பிரிவு – 1

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.             5×2=10

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

20. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

21. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

22. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

23 பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?

24. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.

25. “ விடல்“ – என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                  5×2=10

26. தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?

27. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

28. கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

கொண்டுநின்றுஉடன்விடபொருட்டு )

1. இடி ___________ மழை வந்தது.      

2. மலர்விழி தேர்வின் ____________ ஆயத்தமானாள்.

29. கலைச்சொல் தருக:-

அ) Millets               ஆ)  Valley

30. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

31. வினைமுற்று என்றால் என்ன?

32. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

பகுதி – III

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                           3×3=6

33. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

34. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

35. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

36. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.

37. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

 

பகுதி -IV  

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                            5×5=25

38. அ) விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.   ( அல்லது )

ஆ) இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

39. கொங்கு நாட்டின் உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக (அல்லது)

 ஆ. தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

40. விளம்பரத்தைக் கண்டு வினாக்களுக்கு விடையளிக்க.

எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?

2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?

4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?

5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?

41. சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

மேடுபள்ளம்ஈடுஇணைகல்விகேள்விபோற்றிப்புகழப்படவாழ்வுதாழ்வுஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் __________ களில் சிறந்தவர் ஆவர்.

2. ஆற்று வெள்ளம் __________ பாராமல் ஓடியது.

3. இசைக்கலைஞர்கள் __________ வேண்டியவர்கள்.

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு __________ இல்லை

5. திருவிழாவில் யானை __________ வந்தது.

42. மரபு பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன்தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                     3×8=24

43. அ) எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக..      ( அல்லது )

ஆ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

44. அ) வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக        ( அல்லது )

 அறிவுசால் ஔவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

45. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை( அல்லது )

ஆ) நாட்டின் வளர்ச்சியில் இளைஞரின் பங்கு குறித்து கட்டுரை எழுதுக.

அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் – 1

ஆக்கம்

உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்

உங்கள் மாவட்ட வினாத்தாள் மற்றும் கற்றல் வளங்களை 8667426866 எனற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம். நீங்கள் செய்யும் இந்த உதவி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சென்றடையும்.

எங்களோடு பயணிக்க கீழ் வரும் விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.

 CLICK HERE TO GET PDF

clickhere


வாட்ஸ் அப் ( புலனம் )                                                    டெலிகிராம் ( தொலைவரி



 

 

 

 

 

 

 

 

 


CLICK HERE TO JOIN                                                                  CLICK HERE TO JOIN

https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq                      https://t.me/thamizhvithai

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post