சேலம் – அரையாண்டுத் தேர்வு -2023
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | ||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | ||||||||||
1. | அ. மரபு | 1 | ||||||||||
2. | ஆ.தந்தை பெரியார் | 1 | ||||||||||
3. | அ. பயிலுதல் | 1 | ||||||||||
4. | இ. உணவின் | 1 | ||||||||||
5. | இ. பனையோலைகள் | 1 | ||||||||||
6. | ஆ. பண்பு | 1 | ||||||||||
7. | இ. குற்றமற்ற | 1 | ||||||||||
8. | ஈ. வேற்றுமை | 1 | ||||||||||
9. | அ. நலம் + எல்லாம் | 1 | ||||||||||
10. | ஆ.முறையெனப்படுவது | 1 | ||||||||||
11. | கண்ணெழுத்து | 1 | ||||||||||
12 . | அறிவியல் | 1 | ||||||||||
13 . | திருப்பூர் | 1 | ||||||||||
14 . | குடநாடு | 1 | ||||||||||
15 | இளமை | 1 | ||||||||||
16 | பெரியபுராணம் | 1 | ||||||||||
17. | இயல்பு புணர்ச்சி | 1 | ||||||||||
18. | புலவரே வருக | 1 | ||||||||||
19 | தோன்றல் விகாரம் | 1 | ||||||||||
20 | கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகு செய் வார் - குமரகுருபரர் | 3 | ||||||||||
20. | வாழ்க நிரந்தரம் ! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைக் கொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! | 3 | ||||||||||
21 | சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து | 2 | ||||||||||
பிரிவு - 2 | ||||||||||||
22 | மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும். | 2 | ||||||||||
23 | காவிரி, பவானி, நொய்யல், அமராவதி | 2 | ||||||||||
24. | தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து, குலைந்து நடுங்கினர் | 2 | ||||||||||
25 | கற்களில் உருண்டும், தவழ்ந்தும் நெளிந்தும் செல்கிறது. | 2 | ||||||||||
26 | நடுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோருக்கு அழகு. | 2 | ||||||||||
27 | பண்பு – பாடறிந்து ஒழுகுதல் அன்பு – தன்கிளை செறாஅமை | 1 1 | ||||||||||
28. | 1. மருந்தினால் நீங்கும் நோய் 2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் 3. முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய் | 2 | ||||||||||
29. | தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது | 2 | ||||||||||
பகுதி – 3 | ||||||||||||
30 | க,இய,இயர்,அல் | 2 | ||||||||||
31 | பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்று வினை அல்லது வினைமுற்று என்பர். | 2 | ||||||||||
32 | · ஆறு வகைப்படும் · வேற்றுமைத் தொகை · வினைத்தொகை · பண்புத்தொகை · உவமைத் தொகை · உம்மைத் தொகை · அன்மொழொத் தொகை | 2 | ||||||||||
33 | அ. பருகு ஆ.கொய் | 2 | ||||||||||
34. | அ. ௩ ஆ. ௧ ௬ | 2 | ||||||||||
36 | ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.. அதுபோல கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை | 3 | ||||||||||
37 |
| 3 | ||||||||||
38 | · வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள் · சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம், ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும். · காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். | 3 | ||||||||||
39 | அடிமையாய்த் தவித்து கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்தாள். | 3 | ||||||||||
40 | நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்ற மும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை. ) | 3 | ||||||||||
41 | உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்கானத் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் | 3 | ||||||||||
42 | · நன்செய்,புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. · விளைந்த பயிர்கள் வழியாக நாட்டின் வறுமையைப் போக்குகிறது. · புற்களுக்கு இன்பம் சேர்கிறது. · இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது | 5 | ||||||||||
· வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்குச் சென்று தங்க வேண்டும். · காட்டுதீ ஏற்படும் சூழலில் நகர்புறத்தில் வரவேண்டும். · நிலநடுக்கம் ஏற்படும் போது கட்டடத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தங்குதல் வேண்டும். | 5 | |||||||||||
43அ | இருப்பிடச் சான்றுக்கு விண்ணப்பித்தல் அனுப்புதல் பெறுதல் ஐயா பொருள் கடிதப் பகுதி இப்படிக்கு இணைப்பு நாள், இடம் உறைமேள் முகவரி | 5 | ||||||||||
43ஆ | 7, தெற்கு வீதி,மதுரை-111-03-2023.ஆருயிர் நண்பா, நலம் நலமறிய ஆவல். நீ .மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இப்படிக்கு,உனது ஆருயிர் நண்பன்க.தளிர்மதியன்.உறைமேல் முகவரி:பெறுதல் த.கோவேந்தன், 12,பூங்கா வீதி, சேலம்-4 | 5 | ||||||||||
44 | அ. கல்வி கேள்வி ஆ. மேடு பள்ளம் இ. போற்றிப் புகழப்பட ஈ. ஈடு இணை உ. ஆடி அசைந்து | 5 | ||||||||||
45 | 1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வடடெழுத்து எனப்படும். 2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும். உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும். 3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம். . பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். 4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும். உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும். 5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது. | 5 | ||||||||||
46 | படத்திற்கு பொருத்தமான சொற்கள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக. | 5 | ||||||||||
47அ | எழுத்து - தொடக்க நிலை : v மனிதன் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். ஓவிய எழுத்து : v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். ஒலி எழுத்து நிலை : v ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. v ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. v ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர். | 8 | ||||||||||
47ஆ | உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளா கும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். உள்நாட்டு வணிகம் சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன. வெளிநாட்டு வணிகம் கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. ஏற்றுமதி முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதி பொன்,மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன | 8 | ||||||||||
48அ | முன்னுரை பொருள் முடிவுரை என குறிப்புச்சட்டம் இட்டு எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கவும் | 8 | ||||||||||
48 ஆ | வெட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு சருகுமான், 'காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள் முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது. உயிர்பிழைத்த கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நகக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது. வெட்டுக்கிளியின் பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. | 8 | ||||||||||
49 அ | நான் விரும்பும் கவிஞர் முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார்.பிறப்பும் இளமையும் . பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டதுவிடுதலை வேட்கை: 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதைஎண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.ஒருமைப்பாட்டுணர்வு: எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.மொழிப்பற்று: பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார். நாட்டுப்பற்று . பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.படைப்புகள்: பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.முடிவுரை: வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும். | 8 | ||||||||||
49ஆ | முன்னுரை நோய்வரக் காரணங்கள் நோய் தீர்க்கும் வழிமுறைகள் வருமுன் காத்தல் உணவே மருந்து உடற்பயிற்சியின் தேவை முடிவுரை எனும் தலைப்பில் எழுதி இருக்க வேண்டும் | 8 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
www.tamilvithai.com www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
KINDLY WAIT 10 SECONDS