இரண்டாம்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் – /2023
ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 2.00 மணி மதிப்பெண் : 60
பிரிவு - அ
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 5×1=5
1. கடலில் துறை அறியாமல் கலங்குவன _______
அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்
2. பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது_____
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
3. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு_______
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
4. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுத கிடைப்பது______
அ) இவைஎல்லாம் ஆ) இவையெல்லாம் இ) இதுயெல்லாம் ஈ) இவயெல்லாம்
5. தங்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்பியவரிடம் _______ இருக்கக் கூடாது
அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக:- 5×1=5
6. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ______
7. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ______ என அழைக்கப்படும்.
8. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் __________
9. ‘ஏறப் பரியாகுமே ‘ என்னும் தொடரில் ‘ பரி ‘ என்பதன் பொருள்___________
10. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ___________
இ) பொருத்துக:- 4×1=4
11. எண்ணித்துணிக – அ) சமம்
12. முகில் - ஆ) செயல்
13. உயிர்க்குக் கண்கள். - இ) மேகம்
14. நிகர் - ஈ) எண்ணும் எழுத்து
பிரிவு - ஆ
ஈ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி:- 6×2=12
15. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
16. மனித பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு யாது?
17. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
18. ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
19. கல்விச்செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
20. ஓவியங்களின் வகைகள் யாவை?
21. நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?
22. பாரதிதாசனின் மனதை கவர முயன்ற இயற்கைப் பொருட்கள் யாவை?
உ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
23. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
24. கேலிச்சித்திரம் என்றால் என்ன?
25. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
26. கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
பிரிவு - இ
ஊ) அடிமாறாமல் எழுதுக:- 4+2=6
27. “ வானம் ஊன்றிய “ எனத் தொடங்கும் கலங்கரை விளக்கம் பாடல் ( அல்லது )
‘ வைப்புழி ‘ எனத்தொடங்கும் நாலடியார் பாடல்
28. “ தொட்டனைத் “ – எனத் தொடங்கும் திருக்குறள்
பிரிவு – ஈ
எ) கடிதம் எழுதுக. 1×5=5
29. உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
ஏ) கட்டுரை எழுதுக 1×7=7
30. அ. கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. : எங்கள் ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம்-தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை ( அல்லது )
ஆ.குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.:- பயணங்கள் பலவகை
முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப் பயணம் – கடல் வழிப் பயணம் – வான்வழிப்பயனம் - முடிவுரை
ஏ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:- 5×2=10
31. கலைச்சொல் தருக :- அ) storm ஆ) uniform
32. சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.( அவர்கள், அவை, நீ )
அ) ___________ ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஆ) _______ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
33. பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
அ) ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
ஆ) அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்
34. பின்வரும் தொடரில் மூவிடப் பெயர்களை எழுதுக.
எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது
35. இடைச்சொல் ‘ ஐ ‘ சேர்த்து தொடரை மீண்டும் எழுதுக.
அ. கடல் பார்த்தான் ஆ) புல் தின்றது
இரண்டாம் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் – 2023
ஆக்கம்
உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்
உங்கள் மாவட்ட வினாத்தாள் மற்றும் கற்றல் வளங்களை 8667426866 எனற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எங்களோடு பயணிக்க கீழ் வரும் விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.
வாட்ஸ் அப் ( புலனம் ) டெலிகிராம் ( தொலைவரி
CLICK HERE TO JOIN CLICK HERE TO JOIN
https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq https://t.me/thamizhvithai