7TH-3RD TERM- UNMAI OLI -UNIT-2 - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      உண்மை ஒளி


அறிமுகம்                   :

Ø  நீங்கள் மற்றவர்களை எவ்வாறு நடத்துவீர்கள்?

Ø  மற்றவர்களிடம் நீங்கள் எவ்வாறு நடந்துக் கொள்வீர்கள் ?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்

 

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  படக்காட்சியின் மூலம் கருத்தை கூறல்

Ø  அனைவரையும் உடன் பிறந்தவராக மதிக்கும் பண்பைக் கூறல்

Ø  ஜென் கதைகள் பிறப்பிடம் பற்றிக் கூறல்

Ø  பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø  அனைவருக்கும் உதவும் பண்பினை வளர்த்தல்

Ø  திருடனிடம் ஏமாந்த குருவின் பெருந்தன்மையைப் போற்றுதல்

Ø  திருடனின் குணத்தால் நல்ல பண்பு கெடும் நிலையைக் கூறல்

Ø  ஒப்புரவும் கடமையும் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

உண்மை ஒளி


விளக்கம்    :

( தொகுத்தல் )

உண்மை ஒளி

Ø    ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்

Ø    புத்தமதத் துறவிகளில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்

Ø    உலக மக்களை உடன் பிறந்தவராக கருதுவது மனிதப் பண்பு

Ø    குரு தன் சீடர்களுக்கு உண்மை ஒளி குறித்து பாடம் நடத்துகிறார்.

Ø    மயங்கி விழுந்தவரிடம் கருணை

Ø    மயங்கி விழுந்தவன் திருடன்

Ø    திருடன் குருவின் குதிரையைத் திருடுதல்

Ø    குரு தான் ஏமாந்ததை உணர்தல்

Ø    குரு அவனுக்கும் கருணை காட்டுதல்

Ø    திருடன் தன் செயலை எண்ணி வருந்துதல்

 

 

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o        ஜென் கதைகளை அறிதல்

o        ஜென் சிந்தனையாளர்கள் பற்றி அறிதல்

o        உண்மை ஒளி பற்றி அறிதல்

o        படக்காட்சிக் கதையினை நடித்தல்.

o        குரு திருடனிடம் ஏமாந்ததை அறிதல்

o        குருவின் தூய மனதை அறிந்து திருடன் வெட்கப்படும் நிலை அறிதல்

o        உலகில் அனைவரையும் தம் உடன் பிறந்தவராக எண்ணுதல்

 

மதிப்பீடு      :

Ø  ஜென் என்னும் சொல் ________ மொழிக்குரியது.

Ø  ஜென் என்னும் சொல்லுக்கானப் பொருள் _________

Ø  குரு தன் சீடர்களுக்கு எதனைப் பற்றி பாடம் எடுத்தார்?

Ø  குரு திருடனிடம் எவ்வாறு ஏமாந்தார்?

Ø  உலகில் உள்ள மனிதர்களிடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாக நீங்கள் கருதுவன யாவை?

Ø  இக்கதையில் வாயிலாக நீ அறிந்த பண்பு யாது?

கற்றல் விளைவுகள்                  :

உண்மை ஒளி

T703  தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில் /  சைகை மொழியில் வெளிப்படுத்துதல்

 

T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

 

T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

 

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  ஜென் கதையை நடித்துக் காட்டுக.

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post