7TH-3RD TERM-THANNAI ARITHAL-UNIT-3- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      மார்ச்

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      தன்னை அறிதல்


அறிமுகம்                   :

Ø  உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?

Ø  உன் எதிர்கால நோக்கம் யாது? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி, வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                     :

பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  தனித்தன்மை பற்றிக் கூறல்

Ø  சாதனைப் புரிய தம்முடைய திறனை கண்டறிதல் பற்றிக் கூறல்

Ø  கவிதையின் ஆசிரியர் பற்றிக் கூறல்

Ø  கவிதையை உணர்வுக்கு ஏற்ற வகையில் வாசித்துக் காட்டல்.

Ø  கவிதையின் உட் பொருளை விளக்குதல்

Ø  மாணவர்களை தம்முடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தல்

கருத்துரு வரைபடம்                 :

 

தன்னை அறிதல்



 

விளக்கம்    :

( தொகுத்தல் )

தன்னை அறிதல்

Ø    கவிதையின் ஆசிரியர்

Ø  சே, பிருந்தா

Ø  மழை பற்றிய பகிர்தல், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை

Ø    கவிதையின் உட் பொருள்

Ø  குயில் காக்கை கூட்டில் முட்டையிடுகிறது.

Ø  குயில் குஞ்சுவிற்கு காகம் உணவளிக்கிறது.

Ø  காகம் போல கரைய முயல்கிறது குயில் குஞ்சு

Ø  தான் குயில் என்பதனையும், தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

Ø  தன் ஆற்றலை உணர்த்தால் வாழ்வில் சாதனை புரியலாம் என கவிதை உணர்த்துகிறது.

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   தனித்தன்மை பற்றி அறிதல்

Ø   சாதனைப் புரிய தம்முடைய திறனை கண்டறிதல் பற்றி அறிதல்

Ø   கவிதையின் ஆசிரியர் பற்றி அறிதல்

Ø   கவிதையை உணர்வுக்கு ஏற்ற வகையில் வாசித்தல்

Ø   கவிதையின் உட் பொருளை அறிதல்

Ø    தம்முடைய தனித்திறன்களை அறிந்து கொள்ளுதல்

 

மதிப்பீடு      :

Ø  கூடு கட்ட தெரியாத பறவை __________

Ø  காகம் __________ ( கரையும்/கூவும் )

Ø  காக்கை ஏன் குயில் குஞ்சைப் போக சொன்னது?

Ø  குயில் குஞ்சு தன்னை எப்போது ‘ குயில் ‘ என உணர்ந்தது?

Ø  உங்களிடம் உள்ள தனித்திறமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

கற்றல் விளைவுகள்                  :

 

தன்னை அறிதல்

T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

 

T709 ஒன்றைப் படித்து முழுமையான பொறுமையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்

 

T714  படிக்கும் போது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பாடப்பொருள்களை புரிந்து கொள்வதுடன் அகராதிகள், பார்வை நூல்கள், வரைபடங்கள் ,இணையதளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணைக் கொண்டு பொருண்மையை தெளிவாக அறிதல்

 

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  உங்களிடம் காணும் பண்புகளை எழுதி வருக

 

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post