7TH-3RD TERM- KANNIYA MIGU THALAIVAR -UNIT-3- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      மார்ச்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      கண்ணிய மிகு தலைவர்


அறிமுகம்                   :

Ø  நீங்கள் அறிந்த தலைவர் பற்றி கூறுக

Ø  உங்கள் மனம் கவர்ந்த தலைவர் யார்? ஏன்? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி, வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                     :

Ø  ஆளுமைகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  மனித நேய பண்புகளை பற்றிக் கூறுதல்.

Ø  காயிதே மில்லத் பற்றிக் கூறுதல்

Ø  காயிதே மில்லத் எளிமையினைப் பற்றிக் கூறல்

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பினை கூறல்

Ø  காயிதே மில்லத் மொழிக் கொள்கை பற்றிக் கூறல்

Ø  காயிதே மில்லத நாட்டுப் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் அரசியல் பொறுப்புகள் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் கல்வி பணி பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

கண்ணிய மிகுத் தலைவர்


விளக்கம்    :

( தொகுத்தல் )

கண்ணிய மிகுத் தலைவர்

Ø  காயிதே மில்லத்

o   அடைமொழி : கண்ணியமிகு

o   விடுதலை மேலானது என ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்

Ø  எளிமை :

o   பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பொது போக்குவரத்தை பயன்படுத்துதல்.

o   தமக்கு கிடைத்த பரிசையும் தாம் தொடங்கி வைத்த கல்லூரியின் பயன்பாட்டிற்கு கொடுத்து விட்டார்.

o   மிக எளிமையாக தனது மகனின் திருமணத்தை  நடத்தினார்.

Ø  நேர்மை

o   தான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதத்திற்கு அஞ்சல் தலை வாங்கி ஒட்டி அனுப்புவார்

Ø  மொழிக் கொள்கை

o   பழமையான மொழிகளிலே ஒன்றைத் தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டுமெனில் தமிழைத்தான் உறுதியாக கூறுவேன்.

Ø  நாட்டுப்பற்று

o   இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962 போரில் தனது ஒரே மகனை போர்முனைக்கு ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.

o   காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு “ சமுதாய வழிகாட்டி “ என்று பெயர்.

Ø  கல்விப்பணி

o   கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்

o   திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி தொடங்க இவரே காரணம்.

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø  மனித நேய பண்புகளை பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் பற்றிக் அறிதல்

Ø  காயிதே மில்லத் எளிமையினைப் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பினை அறிதல்

Ø  காயிதே மில்லத் மொழிக் கொள்கை பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத நாட்டுப் பற்று அறிதல்

Ø  காயிதே மில்லத் அரசியல் பொறுப்புகள் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் கல்வி பணி பற்றி அறிதல்

Ø  தலைவர்களை போற்றி மதிக்கும் பண்பினை பெறுதல்

 

மதிப்பீடு      :

Ø  காயிதே மில்லத் எந்த நாட்டு மொழிச் சொல்?

Ø  காயிதே மில்லத் _____ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

Ø  விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு யாது?

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பைக் கூறுக.

Ø  நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப் பணியைச் செய்வீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

 

கண்ணிய மிகு தலைவர்

T701   வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றை குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்

 

T702 ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்.

 

T708 வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் பிரச்சனைகள் சாதி ,மதம், நிறம், பாலினம், சடங்குகள் போல்ன மீது காரண காரிய அடிப்படையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதல்

 

T711  படித்தவற்றை பற்றி சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள முயலுதல்

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  எளிமையாக வாழ்ந்த பிற தலைவர்களின் பெயர்களை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post