6TH-TAMIL-2ND TERM-ANSWERKEY-2023 - PDF

  

ஆறாம் வகுப்பு
இரண்டாம் பருவத் தேர்வு - 2023
தமிழ்
உத்தேச விடைக்குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          5 × 1 = 5

1.

ஆ. மாசற

1

2.

அ. மறைந்த

1

3.

அ. நுகர்வோர்

1

4.

அ. அறுவடை

1

5

ஆ. கல் + எடுத்து

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                          2 × 1 = 2

6

பெரியார்

1

7

புதியன

1

III) பொருத்துக                                                                                                           3 × 1 = 3

8

விளக்கு

1

9

பஞ்சு மெத்தை

1

10  

போர்வை

1

IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                           6× 2 = 12

11 .

மன்னனைக் காட்டிலும் கல்வி கற்றவர் சிறப்புடையவர். கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு

2

12.

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது.

2

13

சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு

2

14

நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ள வேண்டும்.

2

15.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

2

16.

o   கடல் அலையே தோழன்

o    மேகமே குடை.

2

17.

பால்கீரைகாய்கறிகள்

2

V. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி                                                              2×4= 8

18

Ø  அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

Ø  மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

Ø  பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

Ø  பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

4

19.

Ø  பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்

Ø   பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்

Ø  இனிய சொற்களைப் பேசுதல்

Ø   எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்

Ø  கல்வி அறிவு பெறுதல்

Ø  எல்லோரையும் சமமாகப் பேணுதல்;

Ø  அறிவுடையவராய் இருத்தல்

Ø   நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

4

20.

ஏற்றுமதி பொருட்கள் :

        தேக்கு மயில் தோகைஅரிசிசந்தனம்இஞ்சிமிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இறக்குமதி  பொருட்கள் :

        கண்ணாடிகற்பூரம்பட்டு, அரேபிய குதிரைகள்

4

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                             1× 5= 5

21

மன்னனும் மாசறக்  கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு - ஒளவையார்

5

VII. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                    5× 1 = 5

22

அ.) கண்டம்

ஆ) நன்றி

1/2

1/2

 

23

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

1

24.

இங்கே

1

25.

அ. நல்வரவு                          ஆ. நூலகம்

1/2

1/2

26.

அ.வீட்டின் கூடை                ஆ. புடவை

1/2

1/2

VIII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                        1×7= 7

27

முன்னுரை :

          தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

போகித் திருநாள் :

          வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

பொங்கல் திருநாள் :

          தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும். மாவிலைத் தோரணம் கட்டுவர். புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம்முந்திரிநெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள். விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர்.

மாட்டுப் பொங்கல் :

          பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.

காணும் பொங்கல் :

          மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

முடிவுரை :

          இயற்கைஉழைப்புநன்றியுணர்வுபண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்

7

27.ஆ

Ø  அருளப்பர் என்னும் வணிகர்

Ø  வளவன், அமுதன், எழிலன் என மூன்று பிள்ளைகள்

Ø  அருளப்பர் வெளிநாடு செல்ல திட்ட மிடுகிறார்.

Ø  தமது பிள்ளைகளுக்கு ஐம்பதாயிரம் தருகிறார். தான் திரும்பி வரும் போது அதைத் திருப்பி பத்திரமாக எனக்குத் தர வேண்டுமென்கிறார்.

Ø  வளவன் உழவுத் தொழிலில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்து தொழில் செய்தான்

Ø  அமுதா ஆடு,மாடுகள் வளர்த்து பால், வெண்ணை, நெய் போன்றவற்றை விற்பனை செய்தாள்

Ø  எழிலன் பணத்தை பத்திரமாக வைத்திருந்தான்

Ø   அருளப்பர் வந்ததும் மூவரும் தன்னிடம் உள்ள பணத்தினை  என்ன செய்தார்கள் எனக் கூறிக் கொடுத்தனர்.

Ø  எழிலன் எதுவும் செய்யாமல் பணத்தை திருப்பிக் கொடுத்தான்

Ø  எழிலனுக்கு அறிவுரைகள் கூறி அருளப்பன் தன்னிடம் தொழிலைக் கற்றுக் கொள்ளக் கூறினார்.

7

IX. கடிதம் எழுதுக                                                                                                           1×8=8

28

சேலம் – 6

06-11-2022

அன்புள்ள மாமாவுக்கு,

          வணக்கம். நீங்கள் நலமா? இங்கு யாவரும் நலம். சென்ற வாரம் என் பிறந்த நாளுக்கு நீங்கள் அனுப்பிய  எழுதுகோல் மற்றும் புதுமையான பயிற்சி ஏடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பரிசு எனக்கு மிகவும் மிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவேன்.

                                      நன்றி.

                                                                   இப்படிக்கு,

                                                தங்கள் அன்புள்ள,

                                                                   முகிலன்.

உறைமேல் முகவரி:-

பெறுநர்

          க. அன்புச்செழியன்,

          50, பாரதி தெரு,

          காமராஜர் நகர், ஈரோடு - 636007

8

X. சரியான விடையைத் தேர்ந்தெடு                                                                                5×1= 5

29

தலை

1

30

பறந்தது

1

31.

பரவை

1

32

மணம்

1

33.

கோலம்

1


விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

CLICK HERE TO GET PDF

KINDLY WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post