6TH-TAMIL-2ND MID TERM MODEL QUESTION - 2023 - PDF

 

இரண்டாம்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் – /2023

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 2.00 மணி                                                                                    மதிப்பெண் : 60

பிரிவு - அ

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                5×1=5

1. நாம்__________சொல்படி நடக்க வேண்டும்.

அ) இளையோர்                        ஆ) ஊரார்                    இ) மூத்தோர்                 ஈ) வழிப்போக்கர்

2. வீட்டு பயன்பாட்டிற்காக பொருள் வாங்குபவர்______

) நுகர்வோர்               ) தொழிலாளி            ) முதலீட்டாளர்            ஈ) நெசவாளி

3. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள்       ஆ) வந்தான்     இ) கண்ணில்   ஈ) தம்பி

4. கதிர் முற்றியதும் ________ செய்வர்

) அறுவடை              ஆ) உரமிடுதல் இ) நடவு           ஈ) களையெடுத்தல்

5. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

அ) பொறுமை+உடைமை         ஆ) பொறை+யுடைமை  

இ) பொறு+யுடைமை    ஈ) பொறை+உடைமை

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக:-                                                                                   2×1=2

6. காமராசரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் __________

7. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _____ தரும்.  

இ) பொருத்துக:-                                                                                                       3×1=3

8.  விடிவெள்ளி                                 அ) காமராஜர்

 9. மூதுரை                               -          ஆ) விளக்கு

10. மதிய உணவுத் திட்டம்.       -          இ) ஒளவையார்

பிரிவு - ஆ

ஈ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி:-                                                               6×2=12

11 கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

12. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

13 ) நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

14. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

15. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

16. சிறு வணிகப் பொருட்கள் யாவை?

17. இன எழுத்துகள் என்றால் என்ன?

18. நான்கு நிலங்கள் என்பன யாவை?

உ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                         2×4=8

19. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

20. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?

21. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.

பிரிவு - இ

ஊ) அடிமாறாமல் எழுதுக:-                                                                                       3 + 2 = 5

22. “ மன்னனும் மாசற “  எனத் தொடங்கும் மூதுரை பாடல்

23. “ மோப்ப “ – எனத் தொடங்கும் திருக்குறள்                                    

பிரிவு – ஈ

எ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                                5×1=5

24. இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை கண்டு எழுதுக.

கங்கை, பக்கம், தக்காளி, மஞ்சள், குன்று, காக்கை

25. சொற்களை திருத்தி எழுதுக.

            அ) நன்ரி                      ஆ) தெண்றல்

26. முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க

அ) முளையிலே விளையும் தெரியும் பயிர்                     ஆ) ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

26. கலைச்சொல் தருக

அ) welcome                   ஆ)  E – Magazine

27. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

         நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)

பிரிவு – உ

ஏ) ஏதேனும்  ஒன்றனுக்கு விரிவான விடையளிக்க:-                                                               1×7=7

28. அ) “ உழைப்பே மூலதனம் “ -என்னும் கதையைச் சுருக்கமாக எழுதுக.    ( அல்லது )

ஆ) காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – இளமை காலம் – கல்விப்பணி – நிறைவேற்றிய திட்டங்கள் - முடிவுரை

ஐ) கடிதம் எழுதுக                                                                                                       1×8=8

29. அ) விடுப்பு வேண்டி வகுப்பாசிரியருக்கு விண்ணப்பம் எழுதுக ( அல்லது )

ஆ) பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

ஒ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                               1×5=5

30. புலியின் ____   சிவந்து காணப்படும். (கன் /கண்)

31. சிரம் என்பது ______ (தலை / தளை)

32. வீட்டு வாசலில் _______ போட்டனர். (கோலம் / கோளம்)

33. தம்பி ­­­­________ வா. (இவர் / இங்கே)

34. உன் வீடு ________ அமைந்துள்ளது? (எங்கே / என்ன)

 

இரண்டாம் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் – 2023

ஆக்கம்

உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்

உங்கள் மாவட்ட வினாத்தாள் மற்றும் கற்றல் வளங்களை 8667426866 எனற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

எங்களோடு பயணிக்க கீழ் வரும் விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.

 

வாட்ஸ் அப் ( புலனம் )                                                              டெலிகிராம் ( தொலைவரி



 

 

 

 

 

 CLICK HERE TO GET PDF

CLICK HERE


CLICK HERE TO JOIN                                                                             CLICK HERE TO JOIN

https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq                               https://t.me/thamizhvithai


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post