www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழ்நாட்டில் காந்தி
அறிமுகம்
:
·
நீங்கள் அறிந்த சுதந்திரப்
போராட்ட வீரர்களின் பெயரைக் கூறுக.
·
காந்தியைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
இந்திய நாட்டின் சிறப்புகளை
உணர்தல்
·
வாழ்வில் எளிமையின் சிறப்பை
உணர்தல்
ஆசிரியர் குறிப்பு
:
·
காந்தியின் எளிமையைப்
போற்றுதல்
·
காந்தி எளிமைக் கோலம்
பேணுவதற்கான காரணம் கூறல்
·
எளிமையின் சிறப்பைப்
போற்றுதல்
கருத்துரு வரைபடம்
:
தமிழ்நாட்டில் காந்தி
விளக்கம் :
தமிழ்நாட்டில் காந்தி
·
1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும்
கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.
·
1921 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
·
பெரும்பாலான மக்கள்
இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.
·
அன்றுமுதல் வேட்டியும்
துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
·
உலகம் போற்றிய எளிமைத்
திருக்கோலம் இதுவாகும்
·
தென்னாப்பிரிக்காவில்
வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
·
திருக்குறள் அவரைப்
பெரிதும் கவர்ந்த நூலாகும்.
·
உ.வே.சாமிநாதரின் உரையைக்
கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார்.
·
”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ்
கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø நாட்டின் இயற்கை வளங்களை அறிதல்
Ø இயற்கை வளங்களை பாதுகாத்தல்
Ø பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø பாடலின் நயங்களை அறிதல்
Ø காந்தியின் சிறப்பை உணர்தல்
Ø காந்தியின் எளிமையைப் போற்றுதல்
மதிப்பீடு :
·
காந்தியடிகளிடம் உடை
அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _
·
காந்தியடிகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை
ஏற்படுத்திய நிகழ்வு கூறுக.
·
காந்தியடிகளிடம் காணப்படும்
உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
கற்றல் விளைவுகள்
:
·
T604 வானொலி, தொலைக்காட்சி
,செய்தித்தாள் போன்றவற்றில்
தாங்கள் கேட்ட பார்த்த படித்த செய்திகளை தங்களின் சொந்த மொழி நடையில் கூறுதல்
·
T610 பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி
தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள்,
கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்
போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துக்களை
பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø நாடு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் எழுதி
வருக.
Ø காந்தியடிகளின் அறப்போராட்டங்களின் பெயர்களை எழுதி வருக
_______________________________________