10TH-TAMIL-MODEL ACHIVEMENT EXAM - 2024

மாதிரி அடைவுத் தேர்வு - 2024

பத்தாம் வகுப்பு

தமிழ்

கால அளவு :  1.30 மணி நேரம்                                   மொத்த மதிப்பெண் : 100

1. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது_______

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்.

2. பின்வரும் பெருஞ்சித்திரனார் அவர்களின் நூல்களுள் “ தமிழுக்கு கருவூலம் “ எனக் குறிக்கப் பெறும் நூல்.

அ) மகபுகுவஞ்சி    ஆ) கனிச்சாறு       இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை    

ஈ) பள்ளிப்பறவைகள்

3. கீழ்க்காணும் தாவரப் பகுதி பெயர்களுள் கொழுந்து வகையைக் குறிக்கும் சொல் _____

அ) முறி       ஆ) சண்டு   இ) சினை    ஈ) வெங்கழி

4. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : 1. கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

                2. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

5. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்      ஆ) தளரப் பிணைத்தால் 

இ) இறுக்கி முடிச்சிட்டால்         ஈ) காம்பு முறிந்தால்

6. மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய – இப்பாடலில் அடிக்கோடிட்ட சொற்களின் இலக்கணக் குறிப்புகள் முறையே

அ) உம்மைத் தொகை, பெயரெச்சம்     ஆ) எண்ணும்மை, பெயரெச்சம்

இ) உம்மைத்தொகை, வினையெச்சம்  ஈ) எண்ணும்மை , வினையெச்சம்

7. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

8. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

  அ) உழவு,மண்,ஏர்,மாடு   ஆ) மண்,மாடு,ஏர்,உழவு    இ) ஏர்,உழவு,மாடு,மண்             

ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

9. பருவக் காற்றின்  பயனை உலகிற்கு உணர்த்தியதாக குறிப்பிடப்படும் ஹிப்பாலஸ் என்பவர் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர் ________

அ) ரோமானியர்      ஆ) பிரெஞ்சு         இ) கிரேக்கம்          ஈ) போர்ச்சுகல்

4.  10. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?                    ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?

இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை? ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

11. மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

  அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே – இதில் குறிப்பிடப்படும் பொருள்கோள்

அ) எதிர் நிரல்நிறை பொருள்கோள்

ஆ) ஆற்று நீர் பொருள் கோள்

இ) முறை நிரல் நிறை பொருள் கோள்

ஈ) கொண்டுக் கூட்டுப் பொருள்கோள்

12. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது  - இக்குறட்பாவில் நிரல்நிறையாக  அமைந்துள்ள சொற்கள் முறையே

அ) அன்பு – பண்பு ; அறன் – பயன்       ஆ) அன்பு – பயன் ; அறன் – பண்பு

இ) அன்பு – அறன் ; பண்பு – பயன்       ஈ) அன்பு – உடைத்தாயின் ; பண்பு – இல்வாழ்க்கை

13. . பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                ஆ) சீலா                இ) குலா                ஈ) இலா

14. தேம்பாவணி ________ பாடல்களைக் கொண்டது

அ) 3 காண்டங்கள் 36 படலங்கள் 3615 பாடல்கள்

ஆ) 3 காண்டங்கள் 32 படலங்கள் 3615 பாடல்கள்

இ) 3 காண்டங்கள் 34 படலங்கள் 3415 பாடல்கள்

ஈ) 3 காண்டங்கள் 35 படலங்கள் 3515 பாடல்கள்

15. .”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.

 “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்               ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை                       ஈ) கொளல் வினா, இனமொழி விடை

16. மணிமேகலை, பெருங்கதை ஆகிய இலக்கியங்களில் பயின்று வரும் ஓசை _____

அ. செப்பல்            ஆ) துள்ளல்           இ) அகவல்            ஈ) தூங்கல்

17. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது___________________

அ) திருக்குறள்                ஆ) புறநானூறு                 இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்

18. பொருந்தும் இணை தேர்க.

அ) 867       -        ௮ ௯ ௭

ஆ) 543      -        ௫ ௬ ௩

இ) 291        -        ௨ ௬ ௧

ஈ) 896        -        ௮ ௯ ௬

19. தவறான இணைகளைத் தேர்க:-

1. நாளுக்கு ஒரு முறை மலர்வது                   -        பிரம்மகமலம்

2. ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது               -        சண்பகம்

3. 12 ஆண்டுக்கு ஒரு முறை மலர்வர்து         -        குறிஞ்சி      

4. தலைமுறைக்கு ஒரு முறை மலர்வது        -        மூங்கில்

அ) 1,3          ஆ) 1,2         இ) 3,4         ஈ) 1,4

20. கீழ்க்கண்ட கவிஞர்களுள் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ____

அ) பாரதிதாசன்      ஆ) வண்ணதாசன்          இ) கண்ணதாசன்  ஈ) வாணிதாசன்

21. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் _____ அல்லன். எனும் புறநானூறு குறிப்பிடும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் யார்?

அ) அதியன்           ஆ) ஆய் அண்டிரன்        இ) பாரி        ஈ) காரி

22. அறநெறிக் கால அறங்கள் கீழ்க்கண்ட எந்த ஒன்றினைச் சார்ந்தவையாக இருந்தன.

அ) போர்       ஆ) சமயம்             இ) இயல்பானவை           ஈ) கல்வி

23. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது                 ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                      ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

24 உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

அ) உதியன்;சேரலாதன்    ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்   இ) பேகன்;கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

25. மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

     ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்

-     இப்பாடலில் அமைந்துள்ள அடியெதுகை சொற்களை காண்க.

அ) மையோ                     -        ஐயோ

ஆ) கதமோ                     -        கடலோ

இ) வடிவென்பதொ          -        குடையான்

ஈ) கடலோ                       -        முகிலோ

26. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________

அ) அகவற்பா                  ஆ) வெண்பா                  இ) வஞ்சிப்பா                   ஈ) கலிப்பா

27. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது______________________

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்   

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்    

) அறிவியல் முன்னேற்றம்                                  

) வெளிநாட்டு முதலீடுகள்

28. பொருந்தா இணையைக் காண்க.

அ) INTELLECTUAL            -        கலைச்சொல்

ஆ) SYMBOLISM               -        குறியீட்டியல்

இ)  AESTHETICS              -        முருகியல்

ஈ)  MYTH                         -        தொன்மம்

29. வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

      றிண்மையில்லையோர்   செறுந ரின்மையால்

-     இதில் வரும் வண்மை, திண்மை, செறுநர் என்னும் சொற்களின் பொருள்கள் முறையே

அ) வளமை  , வலிமை , பகைவர்

ஆ) திறமை , வலிமை , அயலார்

இ) கொடை, வலிமை, பகைவர்

ஈ) கொடை , உண்மை, பொய்யர்

30. பின்வருவனவற்றுள் குமரகுருபரர் அவர்களால் எழுதப்படாத நூல் _____

அ) கந்தர் கலிவெண்பா             ஆ) மதுரைக் கலம்பகம்

இ) திருக்காவலூர் கலம்பகம்      ஈ) நீதிநெறி விளக்கம்

31. செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு

 - எனும் செங்கீரைப் பருவத்தின் பாடல்

அ) ஏழாம் பாடம்      ஆ) ஒன்பதாம் பாடல்        இ) எட்டாம் பாடல்  ஈ) ஆறாம் பாடல்

32. புரவிநாட்டியம் என்ற கலை யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்தது?

அ) மராட்டியர் காலம்        ஆ. விஜயநகர பேரரசு காலம்      இ) முகலாயர் காலம்

ஈ) நாயக்கர் காலம்

33. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று_________ ,________________வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக    ) எலிசபெத் தமக்காக  

) கருணையன் பூக்களுக்காக ) எலிசபெத் பூமிக்காக

34. சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

அ) பூஞ்சோலைகள் – அரும்புகள்                  ஆ) மலை – எறும்புகள் – தேன்

இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன்      ஈ) கானகம் – வண்டுகள் - நீர்

35. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.

தவழும்போது ஒரு பெயர்

விழும்போது ஒரு பெயர்

உருளும்போது ஒரு பெயர்

திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன?

அ) நீர்,மழை,ஆறு,ஓடை            ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம்.

இ) மாரி,கார்,நீர், புனல்                 ஈ) மழை,புனல்,மேகம்,நீர்

36. கீழ்க்கண்டவர்களுள் யார் ஒருவர் சீறாபுராணத்திற்கு உரை எழுதியவர்

அ) கா.ப. செய்குதம்பி பாவலர்               ஆ) உமர்கய்யாம்             

இ) கண்ணதாசன்                               ஈ) பா. கந்தசாமி

37. பின்வரும் வழாநிலை தொடர்களுள் தொடர்பில்லாத ஒன்றினைத் தேர்க

அ) நீ தந்தாய்          ஆ. நேற்று வந்தான்         இ) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்பர்                            ஈ) கண்ணகி உண்டாள்

38. காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூலின் ஆசிரியர்

அ) ஐன்ஸ்டீன்       ஆ) ஸ்டீபன் ஹாக்கிங்               இ) ஜான் வீலர்       ஈ) நியூட்டன்

39. எர்லி மார்னிங் எழுந்து வாக்கிங் சென்று வந்து டீ குடித்த அம்மா,நீயூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். – இத்தொடரில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் வரிசையைத் தேர்க.

அ) வைகறை,நடைபயிற்சி,பத்திரிக்கை,தேநீர்

ஆ) அதிகாலை, நடந்து, தேநீர், பத்திரிக்கை

இ) காலை, நடை, தேநீர், செய்தி

ஈ) வைகறை, நடைபயிற்சி,தேநீர்,செய்தித்தாள்

40. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்        ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்              ஈ) அங்கு வறுமை இல்லாததால்

41. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் – எனும் பாடலடியில் அண்டப்பகுதியைப் பற்றிக் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம்      ஆ) திருக்கோவை           இ) திருமந்திரம்     ஈ) திருப்பாவை

42. தன் நாட்டில் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட புரிந்து பதில் அளிக்கும் இயந்திர மனிதர்களை  தயாரித்துள்ள நாடு

அ) அமெரிக்கா      ஆ) சீனா      இ) ரஷ்யா    ஈ) இந்தியா

43‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

அ) குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை

ஆ) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை

இ) குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்

ஈ) குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை

44. வேர்டுஸ்மித் என்பது

அ) தகவல் களஞ்சியம்     ஆ) எழுத்தாளி       இ) தேடுபொறி       ஈ) வையக விரிவு வலை

45. பழமொழியைப் பொருத்துக.

அ) ஆறில்லா ஊருக்கு             -        1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ) உப்பில்லாப் பண்டம்             -        2. நூறு வயது

இ) நொறுங்கத் தின்றால்            -        3. குப்பையிலே

ஈ) ஒரு பானை                          -        4. அழகு பாழ்

அ) அ-4.ஆ-3,இ-2,ஈ-1           ஆ) அ-3,ஆ-2,இ-4,ஈ-1          

இ) அ-2,ஆ-4,இ-1,ஈ-3            ஈ) அ-1,ஆ-2இ-3,ஈ-4

46.பின்வருவனவற்றுள் தொழிற்பெயர் அல்லாதது எது?

அ) நடத்தல்           ஆ) நடவாமை       இ) வாழ்க்கை        ஈ) நடந்தான்

47. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்,இடம்,காலம்.பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வந்தால் அது _____

அ) வினைச்சொல்           ஆ) பெயரெச்சம்              இ) தொழிற்பெயர்            

ஈ) வினையாலணையும் பெயர்

48. “ காற்றுள்ள போதே தூற்றிக் கொள் “ – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்

அ) காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்

ஆ) உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்து விட வேண்டும்.

இ) உரிய காலத்தில் காற்றைப் போல செயல்பட வேண்டும்.

ஈ) உரிய காலத்தில் உணர்ந்து உரிய செயலைத் தேட வேண்டும்.

49. பலர்புகு வாயில் அடைப்ப கடவுநர் வருவீர் உளீரோ – எனும் விருந்தை எதிர்க்கொள்ளும் தன்மை பற்றிக் கூறும் நூல்

அ) அகநானூறு      ஆ) புறநானூறு       இ) குறுந்தொகை            ஈ) நற்றிணை

50. பின்வருவனவற்றுள் பண்புப்பெயர் விகுதி மற்றும் உருபு மறைந்து வரும் தொடர் எது?

அ) செம்மையாகிய காந்தள்        ஆ) வட்டமான தொட்டி    இ) இனிமையான மொழி

ஈ) நன்மொழி

51. திணை வழுவமைதி –

அ) ‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இ) ‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.

ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது.

52.வரகரசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – என வள்ளல்களின் விருந்தோம்பலைப் பற்றி பாடியவர்-

அ) அதிவீரராம பாண்டியவர்       ஆ) ஒளவையார்     இ) முடமோசியார்  

ஈ) ஜெயங்கொண்டார்

53. பின்வரும் இருபெயரொட்டுப் பண்புத்தொகைகளுள் தொடர்பில்லாத ஒன்றினைத் தேர்க.

அ) மார்கழித் திங்கள்        ஆ) சாரைப் பாம்பு    இ) பனைமரம்        ஈ) மலர்க்கை

54. “ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் “ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ. குறுந்தொகை   ஆ. கொன்றை வேந்தன்  இ. திருக்குறள்                ஈ. நற்றிணை

‘ 55. ம.பொ.சி.அவர்கள் கீழ்வரும் எந்த நாளை “ இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத் தக்க புனித நாள்” எனக் குறிப்பிடுகிறார்.

அ) அக்டோபர் 12, 1969    ஆ) ஆகஸ்ட் 15, 1947     இ) ஆகஸ்டு 8, 1942

ஈ) ஆகஸ்ட் 8, 1947

56. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ. வானத்தையும் பாட்டையும்              ஆ. வானத்தையும் புகழையும்

இ. வானத்தையும் பூமியையும்               ஈ. வானத்தையும் பேரொலியையும்

57.ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் “ வால்காவிலிருந்து கங்கை வரை “ நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர்

அ) கணமுத்தையா          ஆ) கவிநேசன்      இ) சா.ப.அறவாணன்        ஈ) பா.கந்தசாமி

58. நெஞ்சையள்ளும்  சிலப்பதி காரமென்றோர்

      மணியாரம் படைத்தத் தமிழ்நாடு – என பாடிய கவிஞர்

அ) கவிமணி          ஆ) நாமக்கல் கவிஞர்      இ) பாரதிதாசன்      ஈ) பாரதியார்

59. க.பா.செய்குதம்பிப் பாவலர் செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்ததாக குறிப்பிடப்படும் வயது

அ) 10          ஆ) 12         இ) 14          ஈ) 15        

60. கீழ்க்கண்ட எந்த நாட்டு  மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் ஷேக்ஸ்பியர்  அந்த நாட்டு படைப்பாளராக கொண்டாடப்படுகிறார்?

அ) பிரெஞ்சு          ஆ) ஜெர்மனி         இ) இங்கிலாந்து     ஈ) ரஷ்யா

61. அன்பால் கட்டினார்,அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ____________

அ) வேற்றுமை உருபு       ஆ) எழுவாய் இ) உவம உருபு     ஈ) உரிச்சொல்

62. பின்வருவனவற்றுள் விளித்தொடர் அல்லாதது எது?

அ) அருணா ஓடாதே        ஆ) அரசே தருக           இ) அம்மா சொன்னார்

ஈ) குழந்தையே வா

63. முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள்_____

அ) வெண்நெல்,வரகு      ஆ) மலைநெல்,திணை             இ) வரகு,சாமை              

ஈ) மீன்,செந்நெல்

64. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள் ___________

அ) தாமரை இலை நீர் போல்                          ஆ) வாழையடி வாழை

இ) கண்ணினைக் காக்கும் இமை போல         ஈ) மழை முகம் காணாப் பயிர்போல

65. மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க.

ஆறபோடுதல்

அ) தாமதப்படுத்துதல்        ஆ) ஆற்றில் போடுதல்               இ) ஆற வைத்தல்  ஈ) ஆற்றில் இறங்குதல்

66.நுண்ணறிவுக் கணினியான வாட்சன் கீழ்க்கண்ட எந்தத் துறையில் பயன்படுத்தப்படுகிறது?

அ) மருத்துவம்       ஆ) பொறியியல்     இ) வானியல்          ஈ) புவியியல்

67. தமிழ்த்தொண்டு என்னும் தொடர் ________

அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை           ஆ) உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

இ) அன்மொழித்தொகை                              ஈ) வேற்றுமைத்தொகை

68. பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே – இப்பாடலில் இடம்பெறும் விருந்தோம்பல் பண்பின் எண்ணிக்கை.

அ) அ          ஆ) எ          இ)ஈ) ௯

69. ‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற வேண்டும்.

இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்

ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

70. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது

அ. காலம் மாறுவதை                 ஆ. வீட்டைத் துடைப்பதை        இ. இடையறாது அறப்பணி செய்தலை

ஈ. வண்ணம் பூசுவதை

71.“ காலின் ஏழடிப் பின் சென்று “ – என்னும் பொருநராற்றுப் படை உணர்த்தும் செய்தி

அ. விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்

ஆ. விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்

இ. எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்

ஈ. ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்

72. ‘ பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி

அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்                 ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ. கடல் நீர் ஒலித்தல்                                   ஈ. கடல் நீர் கொந்தளித்தல்

73. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது _________

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்                                   ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

74. வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்

அ) ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை   

ஆ) இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை   ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

75. மேரி மெக்லியோட் பெத்யூன் அவர்களின் கதையை “ உனக்குப் படிக்கத் தெரியாது “ என நூலாக எழுதிய கமலாலயன் அவர்களின் இயற்பெயர்

அ) க.சண்முக சுந்தரம்     ஆ) வே,குணசேகரன்       இ) செ.மாணிக்கம் 

ஈ) வே.இளங்கோவன்

76. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ________ பொருள்கோள் ஆகும்.

அ) ஆற்று நீர் பொருள்கோள்               ஆ) முறைநிரல்நிறைப் பொருள்கோள்

இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்    ஈ) கொண்டுக்கூட்டு பொருள்கோள்

77. பாரதியார் காற்றை’ மயலுறுத்து ‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________

அ) மணம் வீசும் காற்றாய் நீ வா  ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா

இ) மயிலாடும் காற்றாய் நீ வா      ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

78. பின்வரும் தொடர்களில் கலவைத் தொடர் அல்லாதது எது?

அ) அழைப்புமணி ஒலித்ததால் கயல்விழி கதவைத் திறந்தார்.

ஆ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார்.அதனால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

இ) மின்சாரம் தடைப்பட்டதால் மின்விசிறி நின்றது.

ஈ) ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதா;ல் கரை உடைந்தது.

79.கன்னியாகுமரி மாவட்டம் தமிழநாட்டுடன் இணைந்த நாள்

அ) 1957 நவம்பர் 1           ஆ) 1956 நவம்பர் 1

இ) 1958 செப்டம்பர் 1       ஈ) 1956 செப்டம்பர் 1

80. தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – எனும் செய்யுளில் “ தூசும்  துகிரும் “ சொற்களின் பொருள் முறையே

அ) பவளம், பட்டு    ஆ) சுண்ணாம்பு, பட்டு      இ) பட்டு, பவளம்    ஈ) பட்டு, ஆடை

81. பின்வரும் எந்த காப்பியத்தில் உரைப்பாட்டு மடை என்னும் தமிழ்நடை அமைந்துள்ளது.

அ) சீவக சிந்தாமணி         ஆ) குண்டலகேசி            இ) மணிமேகலை   ஈ) சிலப்பதிகாரம்

82. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

83. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்  ஆ) யோசேப்பு                  இ) அருளப்பன்                ஈ) சாந்தா சாகிப்

84. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற தன் வீரர்களுடன் மதிலைச் சுற்றி வளைத்தலின் போது சூடும் பூ

அ) வஞ்சி    ஆ) உழிஞை         இ) நொச்சி            ஈ) வாகை

85. சங்க அறங்கள் பற்றிக் குறிப்பிடும் போது ‘ கவிதை வாழ்க்கையின் திறனாய்வு ‘ என்று கூறியவர்.

அ) எர்னால்ட் எமிங்வே   ஆ) மாக்ஸ் முல்லர்          இ) ஆர்னால்டு       ஈ) கால்டுவெல்

86. ஆலும் வேலும் பல்லுக்குறுதி

      நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும்,தமிழெண்களையும் குறிப்பிடுக.

அ) ஆலமரம்,வேப்பமரம் – ௫ ௧             ஆ) ஆலமரம்,வேலமரம்    - ௪ ௨

இ) அரசமரம்,வேங்கைமரம் -     ௧ ௨              ஈ) வேப்பமரம், ஆலமரம் – ௪ ௬

87. சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவியதாக வர்ணிக்கப்படும் காலம்

அ) சங்கம் மருவிய காலம்          ஆ) இடைக்காலம்

இ) நவீன காலம்                        இ) சங்க காலம்

88.இலக்கணக் கட்டுகோப்புக் குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருக்கும் பா வகை

அ) ஆசிரியப்பா                ஆ) கலிப்பா           இ) வெண்பா          ஈ) வஞ்சிப்பா

89. ஆக்கல், அளித்தல், அழித்தல் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை ; அறிக – இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ)  கண்ணதாசன்           ஆ) வண்ணதாசன்          இ) கு.ப.ரா    

ஈ) தி.சொ.வேணுகோபால்

90. தேம்பாவணி என்பதை கீழ்க்கண்ட எந்த ஒன்றாக பிரித்து ‘ தேன் போன்ற  இனிய பாடல்களின் தொகுப்பு’ என்று  பொருள் கொள்ளப் படுகிறது.

அ) தேம் +பாவணி   ஆ) தேம்பா = அணி          இ) தேன் + பா + அணி     

ஈ) தே + பா + அணி

91. ‘ காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________

அ) வினைத்தொகை                 ஆ) உம்மைத்தொகை    

இ) பண்புத்தொகை          ஈ) அன்மொழித்தொகை

92. பின்வருவனவற்றுள் வினையெச்ச விகுதி அமைந்த சொல் எது?

அ) மலைத்து         ஆ) மயங்கிய          இ) அறியேன்         ஈ) கிளர்ந்த

93. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் __________

அ) நாட்டைக் கைப்பற்றல்                   ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்            ஈ) கோட்டையை முற்றுகையிடல்

94. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________

அ) தொழிற்பெயர்            ஆ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்          

இ) முதனிலைத் தொழிற்பெயர்  ஈ) வினையாலணையும் பெயர்

95. கீழ்க்கண்டவற்றுள் வியங்கோள் வினைமுற்று விகுதிகள் எவை?

1) தல்           2) க             3) இய         4) அம்

அ) 1,3          ஆ) 3,2        இ) 3,4         ஈ) 1,4

96. சிவப்புச் சட்டை ‘ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை     இ) அன்மொழித்தொகை

ஈ) உம்மைத்தொகை

97. கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்___________

அ) கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்.

ஆ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

இ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார் என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

ஈ) கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி கூட்டத்திலிருட்ந்தவர்களை அமைதிப்படுத்தி  வைத்தார்.

98. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) கான் அடை – காட்டைச் சேர்                   ஆ) கால் உடை – காலால் உடைத்தல்

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்              ஈ) கால் நடை – காலால் நடத்தல்

99. விடுபட்ட உணவு வகைகளை வரிசைப்படுத்துக.

பச்சரிசியைக் கொண்டு _________ செய்து பாசிப்பருப்பினை வறுத்து ________ பிடித்து கேரட்டைத் துருவி நெய்யிட்டு _______ செய்து முடித்த அம்மா, இறுதியாக உருளைக் கிழங்கைச் சீவி _________ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார்.

அ) பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா                   ஆ) சீவல்,உருண்டை,அல்வா,சீவல்

இ) பொங்கல், உருண்டை,அல்வா,சீவல்                  ஈ) உருண்டை,சீவல்,அல்வா, பொங்கல்

100. ‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

அ) குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை

ஆ) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை

இ) குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்

ஈ) குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை



மாணவர்கள் இணைய வகுப்பில் இணைய விரும்பினால் கீழ் உள்ள TETEGRAM மற்றும் WHATSAPP குழுவில் இணையவும். 

 TELEGRAM GROUP :            CLICK HERE

            WHATSAPP GROUP :             CLICK HERE

உங்கள் மாவட்ட குழுவில் இணைய :     CLICK HERE

            WHATSAPP GROUP CHENNAL :     CLICK HERE

இந்த வினாத்தாளினை பதிவிறக்க்ம் செய்ய நீங்கள் 10 நொடிகள் காத்திருக்கவும், காத்திருந்து

 பின் தோன்றும் DOWNLOAD HERE என்னும் பொத்தானை அழுத்தி இந்த மாதிரி அடைவுத் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


            

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post