10TH-TAMIL-MODEL 1st REVISION EXAM - 2024

 


மாதிரி முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - 2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1. ‘ காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________

அ) வினைத்தொகை                  ஆ) உம்மைத்தொகை      

இ) பண்புத்தொகை           ஈ) அன்மொழித்தொகை

2. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் __________

அ) நாட்டைக் கைப்பற்றல்                     ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்              ஈ) கோட்டையை முற்றுகையிடல்

3.கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்   ) ஆல், கு  ) ஐ, கு       ஈ) இன், கு

4. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்   ஆ) யோசேப்பு                   இ) அருளப்பன்                 ஈ) சாந்தா சாகிப்

5. . “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்                ஆ) அறிவியல்                           இ) கல்வி               ஈ) இலக்கியம்

6. ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும்,தமிழெண்களையும் குறிப்பிடுக.

அ) ஆலமரம்,வேப்பமரம் – ௫ ௧               ஆ) ஆலமரம்,வேலமரம்     - ௪ ௨

இ) அரசமரம்,வேங்கைமரம் -       ௧ ௨              ஈ) வேப்பமரம், ஆலமரம் – ௪ ௬

7. குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_________

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்               ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

இ)  குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்           ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

8 கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                ஈ) அங்கு வறுமை இல்லாததால்

9 பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று _______,____________வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக       ) எலிசபெத் தமக்காக   

) கருணையன் பூக்களுக்காக              ) எலிசபெத் பூமிக்காக

10. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்           ஆ) மிகுந்த செல்வம் உடையவர் 

இ) பண்பட்ட மனித நேயம்                               ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

11 பின்வருவனவற்றில் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று “

12. பாடல் இடம் பெற்ற நூல் _____

அ) நீதிவெண்பா     ஆ) புறநானூறு                  இ) வெற்றிவேற்கை          ஈ) கொன்றை வேந்தன்

13. பாடலின் சீர் மோனைச் சொற்கள்

அ) அருளை அருத்துவதும்          ஆ) அருளை,அறிவை      

இ) அகற்றி,அருந்துணையாய்       ஈ) அறிவை,அகற்றி

14. அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால்

அ) அருந்துணை+யாய்                ஆ) அருந்து + துணையாய்

இ) அருமை + துணையாய்           ஈ) அரு + துணையாய்

15. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது _______

அ) அன்பு     ஆ) கல்வி     இ) மயக்கம்   ஈ) செல்வம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                      4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்.

ஆ. நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.

17. தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.

18. விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

19. ஹிப்பாலஸ் பருவக் காற்று குறித்து எழுதுக.

20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

21.  பல்லார் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                     5×2=10

22. குறள் வெண்பாவின் இலக்கணம்  கூறி எடுத்துக்காட்டுத் தருக

23. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )

24. தொகைச்சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக.

முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.

25. கலைச்சொல் தருக

அ. Tempest             ஆ. LUTE MUSIC

26. “ தம்பி? எங்க நிக்கிறே?,” “ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது “ - இவ்வுரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக,

27. கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப் பெயர்களைக் காண்க :-  அ) பழம்                           ஆ) ஆடு

28. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-   சிலை - சீலை

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,

அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?

ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?

30. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’

இது போல் இளம்பயிர் வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைத்து எழுதுக.

31. . ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32.  முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா “ ஏர் புதிதா?” கவிதையில் கவி பாடுகிறார்?

.33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக

34. “ விருந்தினனாக “ எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

“ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதம் என முடியும்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                        2×3=6

35‘ கண்ணே கண்ணுறங்கு!

      காலையில் நீயெழும்பு!

      மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

36. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

       தாழா துஞற்று பவர்   – இக்குறளை அலகிடுக.

37. வினா, விடை வகைகளை கூறி எடுத்துக்காட்டுத் தருக

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                  5×5=25

38. அ). இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்திப் பாடலின் அழகிய நயத்தைச் சுவைபட விளக்குக        ( அல்லது )

ஆ) கருணையன் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க

39. ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு, முக்கியச் சாலை விதிகளை விளக்கி,அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.     ( அல்லது )

ஆ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. கதவிலக்க எண் 30, காஞ்சி நகர், திருவண்ணாமலை என்ற முகவரியில் வசித்து வரும் செல்வன்  மகன் முகிலன்  என்பவர் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் பயின்று, கணினியில் கோரல் டிரா என்னும் பயிற்சியும் பெற்றுள்ளார். அவர்  தமிழ்விதை அச்சகம் என்னும் நிறுவனத்தில் கணினி தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை முகிலனாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.

42. அ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.      ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடைதருக.

தற்போது  வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது, இன்றைய தொழில் நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. பல்வேறு வகைப்பட்ட பலத் திறன் பேசிகள் உலகத்தில் நடக்கும் பல்வேறு தகவல்களையும் நொடிப்பொழுதில் தந்துவிடுகிறது. முறையாக பயன்படுத்தினால் திறன் பேசி நன்மையே. அளவுக்கு மீறி அதில் செலவிடும் போது பல்வேறு விதமான தீய விளைவுகளும் ஏற்படுகிறது.

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

ஈ) உலக நிகழ்வுகளை திறன் பேசி எப்படி நமக்கு தருகிறது?

உ)  இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக

 

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                3×8=24

43. அ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம்,விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.

( அல்லது )

ஆ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக

44. அ பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயல்.’ அன்னமய்யா’ புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதை வழி விளக்கி எழுதுக.

          ( அல்லது )

அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45. அ) ‘ விசும்பின் துளியும் பசும்புல் தலையும் ‘ என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை ஒன்று எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – வானத்து மழைநீரைப் பூமியில் காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை

          ( அல்லது )

ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக.

குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை

  மாணவர்கள் இணைய வகுப்பில் இணைய விரும்பினால் கீழ் உள்ள TETEGRAM மற்றும் WHATSAPP குழுவில் இணையவும். 

 TELEGRAM GROUP :            CLICK HERE

            WHATSAPP GROUP :             CLICK HERE

உங்கள் மாவட்ட குழுவில் இணைய :     CLICK HERE

            WHATSAPP GROUP CHENNAL :     CLICK HERE

இந்த வினாத்தாளினை பதிவிறக்க்ம் செய்ய நீங்கள் 10 நொடிகள் காத்திருக்கவும், காத்திருந்து

 பின் தோன்றும் DOWNLOAD HERE என்னும் பொத்தானை அழுத்தி இந்த மாதிரி அடைவுத் தேர்வு வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post