அரையாண்டு மாதிரி வினாத்தாள்-3 - 2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
____________________________________________________________________________
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________
அ) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை
2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
3. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ___________________
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
4. . “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
5. கருணையன் என்பவர் _____________
அ) வீரமாமுனிவர் ஆ) யோசேப்பு இ) அருளப்பன் ஈ) சாந்தா சாகிப்
6. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
7. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும்,தமிழெண்களையும் குறிப்பிடுக.
அ) ஆலமரம்,வேப்பமரம் – ௫ ௧ ஆ) ஆலமரம்,வேலமரம் - ௪ ௨
இ) அரசமரம்,வேங்கைமரம் - ௧ ௨ ஈ) வேப்பமரம், ஆலமரம் – ௪ ௬
8. “ சிவப்புச் சட்டை வந்தார் “ – இத்தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
9 குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_________
அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
10. பின்வருவனவற்றில் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
11. புறத்திணை ______ வகைப்படும்
அ) 10 ஆ) 11 இ) 12 ஈ) 13
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. முல்லைப்பாட்டு ஆ. மலைபடுகடாம் இ. நற்றிணை ஈ. குறுந்தொகை
13. நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்
அ. சிறிய உலகம் ஆ. தலையாய உலகம் இ. நனைந்த உலகம் ஈ. அகன்ற உலகம்
14. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ. பெரும்பெயல், பொழிந்த ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல் இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு
ஈ. நீர்செல,நிமிர்ந்த
15. பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை
அ. தடக்கை ஆ. வளைஇ இ. பெரும்பெயல் ஈ. கொடுஞ்செலவு
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.
ஆ. 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
17. இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
18. ‘ காலக் கழுதை கட்டெறும்பானதும் ‘ – கவிஞர் செய்தது யாது?
19. மெய்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?
20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
21. ‘ செயற்கை ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது “ – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?..
23. வாழ்க – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
“காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.
25. மரபுத்தொடர்களைப் பொருளறிந்து தொடரில் அமைக்க.
அ) கண்ணும் கருத்தும் ஆ) மனக்கோட்டை
26. கொடுக்கப்பட்ட இரு சொற்களையும் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
அ) தொடு – தோடு ஆ) மலை – மாலை
27. கலைச்சொல் தருக:- அ. Emblem ஆ) Renaissance
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கம்பனும் கண்டேத்தும் உமறுப்புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர் தமிழ் மறக்காதன்றோ
பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ் புலவர்களில் எவரேனும் நான்கு புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன்,மணி,மழை,மேகலை
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ) போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?
ஆ) ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் குறித்து குறிப்பிடுவது யாது?
இ) யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
30 காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.
31. ‘ பொய்க்கால் குதிரையாட்டம் ‘ என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. “ சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது “ – நாகூர் ரூமி வெளிப்படுத்தும் மனிதத்தை அவரது கவிதை வழியாகக் குறிப்பிடுக
34. “ அன்னைமொழியே “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக (அல்லது )
“ புண்ணியப் புலவீர் யான் “ எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணப் பாடல்.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு காண்க.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
36. தீவக அணியை விளக்கி, மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.
37. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக
( அல்லது )
ஆ) இறைவன்,புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. ( அல்லது )
ஆ. உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும்,பழுதுபட்ட சாலைகளை சீரமைத்தும்,பழுந்தடைந்த மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. கபிலன் தன் தந்தை வேலனி அவர்களிடம் நூலகத்தில் உள்ள உறுப்பினர் ஆக வேண்டினான். அவரும் கபிலனிடம் ரூ 100ம், 50, பால்காரர் தெரு, களரம்பட்டி, சேலம் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். ஊர்ப்புற நூலகத்திற்கு சென்ற கபிலன் தேர்வர் தன்னைக் கருதி கொடுக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில் பட்டியலிடுக. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க:-
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?
( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?
( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.
( v ) உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக ( அல்லது )
44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க ( அல்லது )
ஆ ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
45. அ) குறிப்புகளைக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள்: முன்னுரை – தமிழன்னையின் அணிகலன்கள் – தமிழ்ச்சான்றோர் – தமிழின் வளர்ச்சி – தமிழின் எதிர்காலம் – முடிவுரை ( அல்லது )
ஆ) உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்
இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.
அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் – 3
ஆக்கம்
உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்
உங்கள் மாவட்ட வினாத்தாள் மற்றும் கற்றல் வளங்களை 8667426866 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம். நீங்கள் செய்யும் இந்த உதவி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சென்றடையும்.
எங்களோடு பயணிக்க கீழ் வரும் விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.
வாட்ஸ் அப் ( புலனம் ) டெலிகிராம் ( தொலைவரி
CLICK HERE TO JOIN CLICK HERE TO JOIN
https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq https://t.me/thamizhvithai
CLICK HERE TO GET THIS QUESTION PDF