10TH-TAMIL-HALF YEARLY-ANSWERKEY-2023 - PDF

 

 சேலம் – அரையாண்டுத் தேர்வு  -2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ. எம் + தமிழ் + நா

1

2.

ஆ. 3142

1

3.

ஈ. சிலப்பதிகாரம்

1

4.

ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

1

5.

இ) பாவாணர்

1

6.

அ) அகவற்பா

1

7.

இ) 5 

1

8.

இ) அன்மொழித்தொகை 

1

9.

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

1

10.

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

1

11.

இ) 12 

1

12 .

ஆ) சிலப்பதிகாரம்  

1

13 .

இ) இளங்கோவடிகள்

1

14 .

ஈ) துணி

1

15

ஆ) நன்மை + கலம்

1

பகுதி - 2

16

அ. ஒரு நாட்டின் வளத்திற்குத் தக்கபடி, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்குமா?

ஆ. எந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது?

1

1

17.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.

2

18.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

19

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2

20

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

2

21.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

2

பிரிவு - 2

22

v  தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

1

1

23

உரைத்த – உரை + த் +த்+ அ

உரை – பகுதி

த் – சந்தி

த் – இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

1

1

24.

v  அறியா வினா

v  சுட்டு விடை

2

25

அ. சரியாக தமிழெண் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

ஆ. சரியாக தமிழெண் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

26

மலைக்கு மாலை என எழுதினான்

1

1

27

அ. சின்னம்

ஆ. உயிரித் தொழில் நுட்பம்

1

1

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. கற்குவியல்              ஆ. பழக்கூட்டம்

1

1

28

நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன்

2

பகுதி – 3

29

அ. போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.

ஆ. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

இ. பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

1

1

1

30

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  அன்னை மொழியானவள்

Ø  அழகான செந்தமிழானவள்

Ø  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

Ø  பாண்டியன் மகள்

Ø  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

Ø  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

33

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்

3

34

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!                    

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!  

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்                 

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!         - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3

34

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே                     வீரமாமுனிவர்

 

பகுதி – 3 / பிரிவு - 3

35

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

இன்-மை-யின்

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

2

இன் – னா

நேர் – நேர்

தேமா

3

தியா-தெனின்

நேர் – நிரை

கூவிளம்

4

இன்-மை-யின்

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

5

இன்-மை-யே

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

6

இன்-னா

நேர் – நேர்

தேமா

7

தது

நேர்பு

காசு

இக் குறளின் இறுதிச் சீர் காசு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

36

செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது

3

37

·         செப்பலோசை பெற்று வரும்

·         ஈற்றடி மூச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.

·         இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்

·         இரண்டடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை அமையும்.

·         ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

5

39அ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

 

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

39ஆ

சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

          நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                                          நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

பெறுதல்

          திரு.இரா.இளங்கோ,

          100,பாரதி தெரு,,நாமக்கல்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

தி

தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

மூன்று + வேந்தர்

நாற்றிசை

நான்கு + திசை

முத்தமிழ்

மூன்று + தமிழ்

இருதிணை

இரண்டு + திணை

முப்பால்

மூன்று + பால்

ஐந்திணை

ஐந்து + திணை

நானிலம்

நான்கு + நிலம்

அறுசுவை

ஆறு + சுவை

பத்துப்பாட்டு

பத்து + பாட்டு

௧௦

எட்டுத்தொகை

எட்டு + தொகை

5

42ஆ

சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. மீண்டும் மீண்டும்  

2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3. பெய்மழை

4. நீருக்கும் ஆற்றல் உண்டு

5. ஐம்பூதங்கள்

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம் கொடுத்து, முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரை என வழங்கி இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக.

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத் தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினையும் அறியலாம்

8

43ஆ

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

 

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

44ஆ

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

        மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

        பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

        அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

        வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

        சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

        எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

CLICK HERE TO GET PDF

KINDLY WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

 

 

 

 

 

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post