9TH-TAMIL- SLM 2ND MID TERM - 2023 - ANSWER KEY - PDF

 

 சேலம் -இரண்டாம் இடைத் தேர்வு -நவம்பர் -2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 7

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

அ. முத்துலட்சுமி அம்மையார்

1

 

2.

ஆ. கனக சுப்புரத்தினம்

1

 

3.

அ. மாமல்லபுரம்

1

 

4.

ஈ.ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

1

 

5.

ஈ. கெடுதல்

1

 

6.

ஆ. மோகன்சிங், ஜப்பானியர்

1

 

7.

இ. அள்ளல் - சேறு

1

 

 பகுதி – 2

8

அ. திருக்குறள்                  ஆ. காமராஜர்

1

1

 

9.

·      போரில் விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல், நடுகல்.

·      அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்படும்.

2

 

10

இசைத்தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

2

 

11.

சிறுவர்கள்  பாலைக்காய்கள் வெடிக்குமாறு கோலினால் அடித்து விளையாடினர்.அவ்வோசையைக் கேட்ட்ட பருந்துகள் பறந்தோடின.

2

 

12

இடிகுரல் – உவமைத்தொகை

பெருங்கடல் – பண்புத் தொகை

2

 

13.

நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

2

 

14.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

 

15

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் சாகும் வரை உள்ள நோய்

2

 

பகுதி - 3

16

Ø  ஒளவையார்

Ø  ஒக்கூர் மாசாத்தியார்

Ø  காவற்பெண்டு

Ø  ஆதிமந்தி

Ø  பாரிமகளிர்

Ø  நச்செள்ளையார்

3

 

17

முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

3

 

18

·         விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

·         கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

·         கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

·         இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.

3

 

19.

அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலேஎதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடுபிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

3

 

20.

அ. வேய்ந்தனர்

ஆ. தின்றது

இ. வீசியது

3

 

பகுதி - 4

21

கல்லிடைப் பிறந்த ஆறும்

 கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

 நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்                       -  புலவர்.குழந்தை

5

 

22

அனுப்புநர்

         ரா. முகிலன்

        மாணவச்செயலர்,

        10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் உயர்நிலைப்பள்ளி,

        கோரணம்பட்டி,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

பொருள் :- பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுதல் - சார்பு

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021                                தங்கள்  உண்மையுள்ள

இடம் : கோரணம்பட்டி                                     ரா. முகிலன்                                                                                 (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

பெறுதல்

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

5

 

23

அ. மா         ஆ. கடி          இ. கடி          ஈ. வான்          உ. சால

5

 

பகுதி – 5

24

மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

·         சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

·         அடையாற்றில் அவ்வை இல்லம்புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரைவடசொல் தமிழ் அகர வரிசைமுப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள்.

4

 

24

குறிஞ்சி :

·         அருவிகள் பறை போல் ஒலி எழுப்பும்.

·         பைங்கிளிகள் தமிழிசை பாடும்.

·         மயில்கள் தோகை விரித்தாடும்.

·         இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

·         குறிஞ்சி நிலம் எங்கும் மணம் கமழ்ந்து இருக்கும்.

முல்லை :

·         நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், வண்டுகளும் பாடும்.

·         ஆயர்கள் முக்குழல் இசையால் மேயும் பசுக்களை ஒன்று சேர்ப்பர்

·         முதிரை,சாமை,குதிரைவாலி,நெல் இவற்றை குன்று போல் குவித்து வைப்பர்.

பாலை :

·         செந்நாய் கடுமையான வெயிலில் நின்று தனது நிழலில் குட்டிகளை இளைப்பாறச் செய்யும்

·         சிறுவர்கள் பாலைக்காயை கோலினால் அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்

மருதம் :

·         காஞ்சி,வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.

·         வைக்கோற் போர் மீது ஏறி சிறுவர்கள் தென்னை இளநீரை பறிப்பர்.

நெய்தல்

·         பவளங்களையும், முத்துகளையும் மலைபோல் கடற்கரையில் குவித்து வைப்பர்.

·         காற்றில் சிறகினை உலர்த்திய தும்பி பெண்ணின் முகத்தை நோக்கிப் பறக்கும். இது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சி போல் உள்ளது.

4

 

25  

·         இசை மொழியினைக் கடந்தது.

·         ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ

·         வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.

·         வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம் செய்தார்.

·         நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         போல்ஸ்காவின் முகத்தில் புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர்.

·         நாதசுர வித்துவான் அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார்.

·         போல்ஸ்காவின் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது.

·         அடுத்து சாந்தமுலேகா என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         இந்த இராகத்தில் போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான்.

·         போல்ஸ்கா, நாதசுர வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’ என்றான்.

·         இக்கதையின் மூலம் இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம்.

4

 

25

Ø  உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும்.

Ø  வீட்டு நிலை மாறவீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.

Ø  வீடுகளில் நற்பண்புகள் காண வேண்டுமெனில் வெள்ளிபித்தளைஉடைகள்மருந்துகள்அணிகலன் போன்றவை இருப்பது போன்று புத்தகங்களும் இருக்க வேண்டும்.

Ø  உணவு,உடை,அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.

Ø  இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களேமக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே

Ø  சுப நிகவுகளில் புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.

Ø  உலக அறிவைத் தரக் கூடிய நூல்களும்வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

 

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,  தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

CLICKHERE TO PDF

CLICK HERE 

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post