சேலம் -இரண்டாம் இடைத் தேர்வு -நவம்பர் -2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி – 1
மதிப்பெண்கள் - 9
வினா.எண்
விடைக் குறிப்பு
மதிப்பெண்
1.
ஈ. உழவு,ஏர்,மண்,மாடு
1
2.
இ.இடையறாது அறப்பணி செய்தலை
1
3.
ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
1
4.
இ. உருவகம்
1
5.
அ. புறநானூறு
1
6.
ஆ. சிற்பி
1
7.
இ. ஜெயகாந்தன்
1
8.
அ. வெண்பா
1
9
ஈ. கண்ணதாசன்
1
10
ஆ. முல்லை
பகுதி – 2
11
அ. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
ஆ. எது உலகம் நிலைப்பத்திருப்பதற்கான அடிப்படை
1
1
12
அ) எண்ணும்மை ஆ) வேற்றுமைத்தொகை
2
13.
அ) நண்பர்கள் தாமரை இலை நீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளனர்.
ஆ) பெண்குழந்தைகளை பெற்றோர்கள் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாக்கின்றனர்.
2
14.
அ. அமைச்சரவை ஆ) பாசனம்
2
15
· பாசவர் – வெற்றிலை விற்போர்
· வாசவர் – நறுமணப் பொருள் விற்போர்
· பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர்
· உமணர் – உப்பு விற்பவர்
2
16
தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.
2
17.
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
2
18
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. நான் எழுதுவதற்கு காரணமும் உண்டு.
2
பகுதி - 3
19 அ
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; -இளங்கோவடிகள்
4
19 ஆ
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! - கண்ணதாசன்
4
பகுதி - 4
20
வ.எ
சீர்
அசை
வாய்பாடு
1
குற் – றம்
நேர் – நேர்
தேமா
2
இல-னாய்க்
நிரை – நேர்
புளீமா
3
குடி-செய்-து
நிரை – நேர் – நேர்
புளிமாங்காய்
4
வாழ்-வா-னைச்
நேர் – நேர் – நேர்
தேமாங்காய்
5
சுற் – றமாச்
நேர் – நிரை
கூவிளம்
6
சுற் – றும்
நேர் – நேர்
தேமா
7
உலகு
நிரைபு
பிறப்பு
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது
3
21
அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.
எ.கா: அன்புக்கு அறன், பண்புக்குப் பயன்
3
22
ஆசுகவி
கொடுத்தப் பொருளைப் பற்றி உடனே பாடும் பாட்டு
மதுர கவி
சொற்சுவை,பொருட்சுவை நிரம்பிய பாட்டு
சித்திர கவி
சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு
வித்தாரகவி
விரித்துப் பாடும் பாட்டு
3
23
· கம்பம்
· உமறுப்புலவர்
· காசிம் புலவர்
· குணங்குடியார்
· சேகனாப் புலவர்
· செய்கு தம்பி பாவலர்
3
பகுதி – 5
24
v அனைவருக்கும் வணக்கம்.
v நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.
v சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.
v மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.
v சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.
4
25
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி
கொடுப்பவன் என் கொடையைப் பற்றி எழுது என்றான்
பெறுபவன் என் வறுமையைப் பற்றி எழுது என்றான்
நான் எழுதுகிறேன் கொடையைத் தடுக்காதே என்று
4
26
மேல்நிலை சேர்க்கை விண்ணப்பம் : அனைத்து படிநிலைகளும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக
4
27
1.பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்
2. நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி
3. வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில்
4
பகுதி – 6
28 அ.
Ø பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.
Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்
Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது.
Ø அம்பினால் உண்டான வலி போல் உள்ளது.
Ø கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார்.
Ø பசிக்கான வழி தெரியாது.
Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.
5
28 ஆ
Ø வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.
Ø நீர்நிலை பெருக்கி,நிலவளம் கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்
Ø வறியோருக்கு உதவி செய்தல் என்பது இன்றைக்கு தேவையான ஒன்று.
Ø நம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுப்பதை சிறந்த கொடையாக இலக்கியங்கள் கூறுகின்றன.
5
29.அ
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
குப்புசாமி
பக்கத்து வீட்டுக்காரர்
முடிவுரை
முன்னுரை:
கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.
குப்புசாமி:
Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்
Ø உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.
Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.
Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.
பக்கத்து வீட்டுக்காரர்:
Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.
Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.
Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.
Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.
முடிவுரை:
எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.
5
29ஆ
குறிப்புச்சட்டம்
முன்னுரை
தோல்வியில் வெற்றி
பார்வையற்றவருக்கு உதவுதல்
உதவியில் தர்க்கம்
தர்க்கத்திற்கு அப்பால்
முடிவுரை
முன்னுரை :
மனிதம் என்பது பரந்து விரிந்த வானம் போன்றது. இங்கு ஆறுதலளிக்கும் ஒரு புன்னகை, கைதட்டல், அன்புச் சொற்கள், தம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்தல் இவையெல்லாம் மனிதம். மனிதத்தின் துளியளவு வெளிப்பாடு நமக்கு உதவக்கூடும்.
தோல்வியில் வெற்றி :
வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் மட்டுமல்ல, தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால் அதுவும் வெற்றி. அந்த வகையில் ஜெயகாந்தன் அவர்கள் வெற்றியைக் கொண்டாடுவதில் விருப்பம் கொண்டவர். கணக்கு பார்க்காமல் செய்த செலவில் தர்க்கத்திற்கு ஆளாகிறார்.
வெற்றிக் கொண்டாட்டம் :
தோல்வி நிச்சயம் என மனப்பான்மையுடன் சென்ற ஜெயகாந்தன் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக தோற்றுவிடுகிறார். அந்த வெற்றியை இருக்கும் 1 வெள்ளி ரூபாய் நாணயத்தில் கொண்டாட நினைக்கிறார்.
பார்வையற்றவருக்கு உதவுதல்:
· இரண்டணாவுக்கு காபி குடித்து விட்டு, பேருந்துக்கு பனிரெண்டாவை ஒதுக்கி வைத்துவிட்டு மீதம் இருந்த இரண்டனாவை என்ன செய்யலாம் என யோசித்தார்.
· இரயில் டிக்கெட் எடுக்க செல்லும் முன்பு இருந்த பார்வையற்றவரின் குரல்
· அந்த பார்வையற்றவருக்கு இரண்டனாவை இடுகிறார்
· டிக்கெட் விலை ஒரு அணா அதிகம்.
உதவியில் தர்க்கம்
· தான் பார்வையற்றவருக்கு இரண்டனா போட்டோம்.
· இரண்டனாவை எடுத்துவிட்டு ஓரணாவை போடலாமா?
· அப்படி செய்தால் பார்வையற்றவர் என்ன நினைப்பார்?
· அவருக்கு வழங்கியதால் அது அவருடைய காசு. நான் எப்படி உரிமை கொள்ள முடியும்?
· அடுத்த ஸ்டேசன் சென்று டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என நடந்து சென்றார்.
தர்க்கத்திற்கு அப்பால் :
· அவர் சென்று இருக்க வேண்டிய இரயிலில் செல்லாமல், அடுத்த ஸ்டேசன் சென்று வேறு ஒரு இரயிலில் சென்றார்.
· ஆனால் தர்க்கத்தினாலும், போதிய பணம் இல்லாததாலும் தவறவிட்ட இரயில் அன்றைய தினத்தில் பெரும் விபத்துக்குள்ளானது.
முடிவுரை:-
அந்த இரயில் விபத்தில் இருந்து ஜெயகாந்தன் தப்பித்தது எப்படி?
தர்மம் தலை காத்ததா? தெரியவில்லை. இவையெல்லாம் தர்க்கத்திற்கு அப்பால்.
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
WAIT FOR 10 SECONDS
சேலம் - மாவட்டம்
இரண்டாம் இடைத் தேர்வு - 2023
விடைக்குறிப்பு
காத்திருப்புக்கு நன்றி