KATTRAL INIMAI -TAMIL- OCTOBER 4TH WEEK-23 - ACTIVITIES

 

கற்றல் இனிமை

மாதம் : அக்டோபர்                                                         வாரம் : நான்காம் வாரம்

நாள் : 25-10-23 முதல்  31-10-23                                     பாடம் : தமிழ்

எழுத்து அறியாத மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

·         மாணவர்கள் இதுவரை தாங்கள் கற்ற எழுத்துகளை கரும்பலகையில் எழுதி உரக்க வாசித்தல்

·         பார்வை நூல் – 1 உள்ள சொற்களை மாணவர்கள் வாசித்தல்

·         மாணவர்களுக்கு  உயிர் எழுத்துகளை புத்தகத்தில் உள்ளது போல எழுத்துகளை அறிமுகம் செய்தல்

·           - ஊ             ஒள      இந்த குறியீடு உள்ள எழுத்துகளை பயிற்சி அளித்தல்.

·         மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல் கையேடு ( 16 பக்கம் ) நூலில் உள்ள 10ம் முதல் 16  பக்கம் வரை உள்ள எழுத்துகளில் பயிற்சிப் பெறல்

·          மெய்யெழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும், அவற்றிற்கென வழங்கப்பட்டுள்ள இன்ன பிற சொற்களையும் படிக்க சொல்லுதல்.

·         முந்தைய நாட்களில் கற்ற எழுத்துகளையும் மீள சொல்லுதல்.

·         கரும்பலகையில் கற்ற எழுத்துகளை ஒவ்வொருவராக எழுத வைத்தல். வரி வடிவத்தை அவர்கள் முறையாக அறிந்துள்ளார்களா? என்பதனை கவனித்தல்.

·         தான் கற்ற அனைத்து எழுத்துகளையும் தனது குறிப்பேட்டில் எழுதச் சொல்லுதல்.

தொடர் பணி :

·         மாணவர்கள் தாங்கள் ஒவ்வொரு நாளும் கற்ற இரண்டு இரண்டு எழுத்துகளை தனி ஏட்டில் எழுதிப் பார்த்தல்.

·         தாங்கள் ஒவ்வொரு நாளும் படித்த, எழுதிப் பார்த்த வார்த்தைகளை செய்தித்தாள் அல்லது துண்டு விளம்பர பிரசுரங்களில் அடையாளம் கண்டு அவற்றை வட்டமிடுதல்.

·         வட்டமிட்ட எழுத்துகளை ஆசிரியரிடம் மீள காண்பித்து வாசித்துக் காட்டல்.

·         இவற்றை கோப்பாக பராமரித்தல்.

·         மாணவர்கள் தாங்கள் எழுத்துகளை  எழுதி வர சொல்லுதல்.

·         ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு செய்தித்தாள் துண்டுகள் மூலம் அதில் தான் கற்ற ஒவ்வொரு எழுத்தினையும் வட்டமிட்டு வர சொல்லுதல்

 

எழுத்து கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

பயிற்சி நூல் :  நாவில் தமிழ் , நாளும் தமிழ் – சேலம் மாவட்ட தமிழ் பயிற்சி கையேடு

·         உகர வரிசை மற்றும் ஊகார வரிசை உயிர் மெய்யெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்.

·         எ வரிசை மற்றும் ஏகார வரிசை உயிர் மெய்யெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்

·         பயிற்சி நூல் இரண்டில் உள்ள “ படித்து பழகு, எழுதிப் பழகு “ பகுதியில் உள்ள சொற்களை வாசித்துக் காட்டுதல்.

·         பயிற்சி நூல் இரண்டில் உள்ள “ படித்து பழகு, எழுதிப் பழகு “ பகுதியில் உள்ள சொற்களை எழுதிக் காட்டுதல்.

·         இகர வரிசை உயிர் மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை தனது பாடப்புத்தகத்தில் உள்ள சொற்களைக் கண்டு எழுதுதல்.

·         ஈகார வரிசை உயிர் மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை தனது பாடப்புத்தகத்தில் உள்ள சொற்களைக் கண்டு எழுதுதல்

தொடர் பணி :

·         உகர மற்றும் ஊகார வரிசையில் தொடங்கும் சொற்களை எழுதி வருதல். ( குறைந்தது ஒவ்வொரு எழுத்திற்கும் 5 சொற்கள் )

·         எகர  மற்றும் ஏகார வரிசையில் தொடங்கும் சொற்களை எழுதி வருதல். ( குறைந்தது ஒவ்வொரு எழுத்திற்கும் 5 சொற்கள் )

·         எழுத்து கண்டுப்பிடிக்க முடியாத சொற்களுக்கு தமிழ் அகராதித் துணைக் கொண்டு எழுத வைத்தல்

·         அவற்றை கோப்பாக பராமரித்தல்.

 

 

தலைமை ஆசிரியர்                                                            பாட ஆசிரியர்  

கையொப்பம்                                                                      கையொப்பம்

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post