KATTRAL INIMAI -TAMIL- OCTOBER 2ND WEEK-23 - ACTIVITIES

 

கற்றல் இனிமை

மாதம் : அக்டோபர்                                                         வாரம் : இரண்டாம் வாரம்

நாள் : 09-10-23 முதல் 13-10-23                                                     பாடம் : தமிழ் 

எழுத்து அறியாத மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

பயிற்சி நூல் : தமிழ் கற்றல் கையேடு ( ம.நசன் – கல்வி பொறுப்பாளர் )

§   ட – ட்         ச – ச்            ந – ந்           ர - ர்

§  ப – ப்           க – க்           வ – வ்         ல – ல்

§  ம – ம்           த – த்           ய – ய்           ன – ன்

·         முதல் 6 நாள்  பயிற்சி 12 எழுத்துகளை கூற வைத்தல், புத்தகங்கள், செய்திதாளில் அடையாளம் காண சொல்லுதல்

·         கரும்பலகையில் அந்தஎழுத்துகளை சொல்லிக்கொண்டே எழுதுதல்.

·         மாணவர்களுக்கு அடுத்த 6 எழுத்துகளை அறிமுகம் செய்தல்

·         ண் – ண           ள் – ள        ழ் – ழ

·         ஞ் – ஞ             ங் – ங      ற்  - ற

·         இப்போது மாணவர்களுக்கு 18 மெய்யெழுத்துகளும் , 18 உயிர்மெய் அ வரிசை எழுத்துகளை அவர்கள் உள் வாங்கி கற்றுக் கொள்கிறார்கள்.

·         மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல் கையேடு ( 16 பக்கம் ) நூலில் உள்ள 9ம் பக்கத்தில் மேலுள்ள மெய்யெழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும், அவற்றிற்கென வழங்கப்பட்டுள்ள இன்ன பிற சொற்களையும் படிக்க சொல்லுதல்.

·         தான் கற்ற 18 மெய்கள் மற்றும் உயிர்மெய் 18 எழுத்துகளையும் கொண்ட சொற்களை சற்று வேகமாக உச்சரித்தல்.

·         முந்தைய நாட்களில் கற்ற எழுத்துகளையும் மீள சொல்லுதல்.

·         கரும்பலகையில் கற்ற எழுத்துகளை ஒவ்வொருவராக எழுத வைத்தல். வரி வடிவத்தை அவர்கள் முறையாக அறிந்துள்ளார்களா? என்பதனை கவனித்தல்.

·         தான் கற்ற அனைத்து எழுத்துகளையும் தனது குறிப்பேட்டில் எழுதச் சொல்லுதல்.

தொடர் பணி :

·         மாணவர்கள் தாங்கள் ஒவ்வொரு நாளும் கற்ற இரண்டு இரண்டு எழுத்துகளை தனி ஏட்டில் எழுதிப் பார்த்தல்.

·         தாங்கள் ஒவ்வொரு நாளும் படித்த, எழுதிப் பார்த்த வார்த்தைகளை செய்தித்தாள் அல்லது துண்டு விளம்பர பிரசுரங்களில் அடையாளம் கண்டு அவற்றை வட்டமிடுதல்.

·         வட்டமிட்ட எழுத்துகளை ஆசிரியரிடம் மீள காண்பித்து வாசித்துக் காட்டல்.

·         இவற்றை கோப்பாக பராமரித்தல்.

·         மாணவர்கள் தாங்கள் கற்ற 18 மெய், 18 உயிர் மெய் எழுத்துகளின் சொற்களை எழுதி வர சொல்லுதல்.

·         ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு செய்தித்தாள் துண்டுகள் மூலம் அதில் தான் கற்ற ஒவ்வொரு எழுத்தினையும் வட்டமிட்டு வர சொல்லுதல்

 

 

எழுத்து கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

பயிற்சி நூல் :  நாவில் தமிழ் , நாளும் தமிழ் – சேலம் மாவட்ட தமிழ் பயிற்சி கையேடு

·         அகர வரிசை உயிர் மெய்யெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்.

o   பயிற்சி நூல் -2  பக்க எண் : 9

·         ஆகார வரிசை உயிர் மெய்யெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்

o   பயிற்சி நூல் – 2 பக்க எண் : 16

·         பயிற்சி நூல் இரண்டில் உள்ள “ படித்து பழகு, எழுதிப் பழகு “ பகுதியில் உள்ள சொற்களை வாசித்துக் காட்டுதல்.

·         பயிற்சி நூல் இரண்டில் உள்ள “ படித்து பழகு, எழுதிப் பழகு “ பகுதியில் உள்ள சொற்களை எழுதிக் காட்டுதல்.

·         அகர வரிசை உயிர் மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை தனது பாடப்புத்தகத்தில் உள்ள சொற்களைக் கண்டு எழுதுதல்.

·         ஆகார வரிசை உயிர் மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை தனது பாடப்புத்தகத்தில் உள்ள சொற்களைக் கண்டு எழுதுதல்

தொடர் பணி :

·         அகர வரிசையில் தொடங்கும் சொற்களை எழுதி வருதல். ( குறைந்தது ஒவ்வொரு எழுத்திற்கும் 5 சொற்கள் )

·         அகர வரிசையில் தொடங்கும் சொற்களை எழுதி வருதல். ( குறைந்தது ஒவ்வொரு எழுத்திற்கும் 5 சொற்கள் )

·         எழுத்து கண்டுப்பிடிக்க முடியாத சொற்களுக்கு தமிழ் அகராதித் துணைக் கொண்டு எழுத வைத்தல்

·         அவற்றை கோப்பாக பராமரித்தல்.

விளக்கக் காணொளி 

 

 

தலைமை ஆசிரியர்                                                            பாட ஆசிரியர்  

கையொப்பம்                                                                      கையொப்பம்

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post