KATTRAL INIMAI -TAMIL- OCTOBER 1ST WEEK - ACTIVITIES

 

கற்றல் இனிமை

மாதம் : அக்டோபர்                                                                 வாரம் : முதல் வாரம்

நாள் : 03-10-23 முதல் 06-10-23                                                     பாடம் : தமிழ்

எழுத்து அறியாத மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

பயிற்சி நூல் : தமிழ் கற்றல் கையேடு ( ம.நசன் – கல்வி பொறுப்பாளர் )

·         எழுத்து அறியாத மாணவர்களுக்கு முதலில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் என 

கற்பிக்காமல் உளவியல் ரீதியாக எளிமையாக மூளையில் பதியக் கூடிய எழுத்துகளை 

கண்டு அவற்றை பதிய வைத்தல்.

·         அந்த எழுத்துகள் ம.நசன் அவர்களின் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக் 

கொண்டு பயிற்சி அளித்தல்.

·         எளிதில் மனதில் பதியும் எழுத்துகளை உரிய ஒலிப்புடன் வாசித்து, எழுதி பழகுதல்.

·         கையேட்டில் வழங்கப்பட்டுள்ள எழுத்துகளை அறிமுகம் செய்து படித்தல்.

o   முதல் 6 நாள் - பயிற்சி 12 எழுத்துகள்.

o   கீழ் உள்ள எழுத்தில் உதாரணமாக ட என்னும் எழுத்தின் வரி வடிவத்தையும், 

ஒலி வடிவத்தையும் ஆசிரியர் மாணவருக்கு கற்றுக் கொடுத்தல்.

o   அதிலிருந்து ட் கற்று தருதல். அடுத்து “ ட “ விலிருந்து “ ப “ “ ப் “ உருவாக்கி 

அவற்றை கற்பித்தல். இவ்வாறே கீழ் உள்ள எழுத்துகளை கற்பித்தல்.

o   நாளொன்றுக்கு 2 எழுத்துகள் மட்டும்.

o   எழுத்துகளைக் கற்று கொண்ட மாணவர்களுக்கு புத்தகத்தை வழங்கி 

அவர்களை வாசிக்க வைத்தல்.

§  ட – ட்          ச – ச்            ந – ந்           ர - ர்

§  ப – ப்           க – க்           வ – வ்         ல – ல்

§  ம – ம்           த – த்           ய – ய்           ன – ன்

·         மேற்காண் எழுத்துகளை இரண்டு இரண்டு எழுத்துகளாக வாசிக்க வைத்தல், 

எழுதிப் பார்த்து படித்தல், வடிவங்களை காணுதல்.

தொடர் பணி :

·         மாணவர்கள் தாங்கள் ஒவ்வொரு நாளும் கற்ற இரண்டு இரண்டு எழுத்துகளை தனி 

ஏட்டில் எழுதிப் பார்த்தல்.

·         தாங்கள் ஒவ்வொரு நாளும் படித்த, எழுதிப் பார்த்த வார்த்தைகளை செய்தித்தாள் 

அல்லது துண்டு விளம்பர பிரசுரங்களில் அடையாளம் கண்டு அவற்றை வட்டமிடுதல்.

·         வட்டமிட்ட எழுத்துகளை ஆசிரியரிடம் மீள காண்பித்து வாசித்துக் காட்டல்.

·         இவற்றை கோப்பாக பராமரித்தல்.

 எழுத்து கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கான செயல்பாடுகள் :

பயிற்சி நூல் :  நாவில் தமிழ் , நாளும் தமிழ் – சேலம் மாவட்ட தமிழ் பயிற்சி 

கையேடு

·         உயிரெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்

ஒள

 

·         மெய்யெழுத்துகளை உரிய ஒலிப்பு முறையில் வாசித்தல்.

க்

ங்

ச்

ஞ்

ட்

ண்

த்

ந்

ப்

ம்

ய்

ர்

ல்

வ்

ழ்

ள்

ற்

ன்

 

·         உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகள் 216 இவற்றை 

அடையாளம் கண்டு வாசித்தல்.

·         இதில் எந்த எழுத்து வாசித்தலில் மாணவர் தடுமாறுகிறார் என அறிந்து அந்த வரிசை 

எழுத்துகளை உரிய ஒலிப்புடனும், எழுதியும் பயிற்சி அளித்தல்.

·         அந்த எழுத்துகளை தங்களுடைய பாடப்புத்தகத்தில் அடையாளம் கண்டு வட்டமிடுதல்.

·         மாணவர்களுக்கு கட்டகத்தில் உள்ள எழுதி பழகு, வாசித்து பழகு பகுதியில் உள்ள 

சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தல்.

தொடர் பணி :

·         தான் தடுமாறும் எழுத்துகளை அடையாளம் கண்டு அவற்றை தன்னுடைய 

ஏட்டில் எழுதி பயிற்சி பெறல் ( 10 முறை )

·         தான் தடுமாறும் எழுத்துகளை அன்றாடச் செய்தித்தாள், வார,மாத 

பத்திரிக்கைகள், துண்டு பிரசுரங்கள் இவற்றின் மூலம் அவற்றை கண்டு 

வட்டமிடல்.

·         அவற்றை கோப்பாக பராமரித்தல்.

 

 

தலைமை ஆசிரியர்                                                                                   பாட ஆசிரியர்

கையொப்பம்                                                                                                  கையொப்பம்

 

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post