அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழில் வாசிக்க , எழுத தடுமாறும் குழந்தைகள் மற்றும் எழுத்துகளை அறியாத குழந்தைகள் எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் அனைத்து ஆசிரியப் பெருமக்களிடம் உள்ளது. அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் முக்கியமானது. அவற்றில் இந்த தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் தற்போது பங்கெடுத்துக் கொள்கிறது.
அக்டோபர் முதல் வாரத்திற்கான செயல்பாடுகளை மையப்படுத்தி இங்கு வினாத்தாள் உருவாக்கி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் எழுத்து அறியா நிலை மாணவர்களுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கும் ஒரே தாளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண் 20 . இந்த ஒரு வினாத்தாளினை நகல் எடுத்து இரு வகை மாணவர்களுக்கும் பகிரும் படி வடிமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்தி இந்த வார வினாத்தாளில் தேர்வு வைத்து மாணவர்களின் அடைவு நிலையை குறித்துக் கொள்ளலாம். வினாத்தாளில் ஏதேனும் இன்னும் மாற்றம் செய்ய வேண்டும் என நீங்கள் கருதினால் உங்கள் கருத்தினை 8667426866 என்ற எண்ணிற்கு வாட்ஸப் செய்யவும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அவற்றை திருத்தம் செய்யலாம்.
கீழ்க்காணும் வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 10 விநாடிகளுக்குப்பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி வினாத்தாளினைப் பதிவிறக்கம் செய்யலாம்.
கற்றல் இனிமை
அக்டோபர் முதல் வார வினாத்தாள்
எழுத்து அறியா நிலை மதிப்பெண் : 20
1. கீழ்க்கண்ட எழுத்துகளை வாசித்துக் காட்டுக 5
அ) ட – ட் ச – ச் ந – ந் ர - ர்
ஆ) ப – ப் க – க் வ – வ் ல – ல்
இ) ம – ம் த – த் ய – ய் ன – ன்
2. நீங்கள் கற்றதில் விடுபட்ட எழுத்தை நிரப்புக. 5
ட் ___ ___ச் ல் ____ வ ___
ப _______ க் ___ ய் ____ த _____
3. நீங்கள் கற்ற எழுத்துகளை பத்தியில் வட்டமிடுக 5
ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தச் சமயத்தில் அந்த முதியவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.
4. கீழ்க்காணும் விளம்பரத்தில் நீ கற்ற எழுத்துகளை வட்டமிடுக 5
கற்றல் இனிமை
அக்டோபர் முதல் வார வினாத்தாள்
எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள் மதிப்பெண் : 20
1. விடுபட்ட எழுத்துகளை நிரப்புக 5
கெ ___ செ ___ டெ __ தெ __பெ __ யெ ___லெ ___ழெ ___ றெ __
2. முதல் எழுத்தை நெடிலாக மாற்றி எழுதுக 5
பல் - கல் - நிதி - எடு - படு –
மடு - கண் - விதி - சதி - மிதி –
3. சரியான எழுத்தைக் கொண்டு நிரப்புக 5
( ளி , சே, போ, கெ, கோ, கூ, கை, தை, ஒள , ளி )
இயற்___ ___ணர்மி ___புரம் ____ழுத்தி ___லை
___வும் வார்த் ___ __டதம் ___க்குவரத்து கே___க்கை
4. பத்தியில் உள்ள சொற்களை ஈரெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து, ஐந்தெழுத்து சொற்கள் என வகைப்படுத்தி எழுதுக 5
ஒரு வயதான முதியவரைப் போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்தச் சமயத்தில் அந்த முதியவர் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.
click here to get pdf this question