அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழில் வாசிக்க , எழுத தடுமாறும் குழந்தைகள் மற்றும் எழுத்துகளை அறியாத குழந்தைகள் எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் அனைத்து ஆசிரியப் பெருமக்களிடம் உள்ளது. அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் முக்கியமானது. அவற்றில் இந்த தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் தற்போது பங்கெடுத்துக் கொள்கிறது. தாய்த்தமிழை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அந்த வகையில் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் படிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை எய்த வேண்டும். அந்த வகையில் நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்கள் இணைந்து வாரா வாரம் தமிழ் படிக்க எழுத தெரியாத மாணவர்களுக்கு எவ்விதமான செயல்பாடுகளை வழங்க வேண்டும் என்பதனை வாராந்திர பாடக் குறிப்பேடு எழுத தயார் செய்வது போல வாரச் செயல்பாடுகளை வழங்க உள்ளோம். நம் நோக்கம் இந்த ஒரு மாத காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் படிக்க. வாசிக்க தெரிகிறது என்பதனை உறுதி செய்வதே.... அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய செயல்பாடுகளையும் பகிர்ந்தால் நிச்சயம் அனைத்து மாணவர்களும் இதில் தேர்ச்சி அடைவர்.
மாணவர்கள் அடைவு நிலையைக் குறிப்பதற்கும், மாதாந்திர அறிக்கை அளிக்க ஏதுவாக இருக்கக் கூடிய படிவங்களை நமது கல்விவிதைகள் வலைதளம் உருவாக்கி வழங்கியுள்ளது. இவற்றை உங்களது ஆவணங்களாக பராமரித்துக் கொள்ளவும். இவற்றை கோப்புகளாக அதிகாரிகள் வரும் போது நாம் என்ன செய்தோம் என்பதனை காண்பிக்க ஏதுவாக இருக்கும். இங்கு இரு படிவங்கள் பொதுவாக வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் முதல் படிவத்தை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாதங்களுக்கு ஏற்ப நகல் எடுத்துக் கொள்ளவும், இரண்டாம் படிவம் 1 நகல் எடுத்தால் போதுமானது. இரு படிவங்களிலும் தலைமை ஆசிரியர் கையொப்பம் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
நன்றி
மாணவர் பெயர் மற்றும் நிலை படிவம்
படிவம் - 1
கற்றல் இனிமை
மாணவர் மாதாந்திர முன்னேற்ற நிலை படிவம்
Tags:
SLOWLEARNERS