அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.
மாநில அளவிலான அடைவுத் தேர்வு - 2023
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் - பகுதி -5
புத்தாக்கப்பயிற்சி - தமிழ் -ஒன்பதாம் வகுப்பு
மாநில கற்றல் அடைவுத்திறன் தேர்வு - 2023
தயாரிப்பு : தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழு
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
x -ray என்பதன் தமிழ்ச்சொல் ____________
ஊடுகதிர்
வெண்கதிர்
ஊதா கதிர்
புற ஊதாக்கதிர்
blood group என்பதன் தமிழ்ச்சொல் ___________
இணைப்பக்கம்
மருத்துவமனை
குருதிப்பிரிவு
ஊடலை
website என்பதன் தமிழ்ச்சொல்_____________
அருகலை
ஊடலை
இயங்கலை
இணையப்பக்கம்
YOUTUBE என்பதன் தமிழ்ச்சொல் _________________
முடக்கலை
வலையொளி
இயங்கலை
அருகலை
BLUETOOTH - என்பதன் தமிழ்ச்சொல்___________
புலனம்
முடக்கலை
அருகலை
ஊடலை
TOUCH SCREEN என்பதன் தமிழ்ச்சொல்___________
இணையப்பக்கம்
வலையொளி
ஊடலை
தொடுதிரை
WI-FI என்பதன் தமிழ்ச்சொல்______________
திறன்பேசி
அருகலை
ஊடலை
அருகலை
நீ இயங்கலை வகுப்பில் கலந்து கொள்கிறாயா? - இதில் உள்ள கலைச்சொல் எது?
நீ
இயங்கலை
வகுப்பு
கலந்து
நான் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கிறேன் - இதில் உள்ள கலைச் சொல் எது?
பதிவிறக்கம்
நான்
பாடங்களை
படிக்கிறேன்
நான் வலையொளி மூலம் படிக்கிறேன் - இதில் காணப்படும் கலைச்சொல் _____________
படிக்கிறேன்
நான்
வலையொளி
மூலம்
FACE BOOK - என்பதன் தமிழ்ச்சொல் ______________
புலனம்
கீச்சகம்
இணையம்
முகநூல்
கோப்புகள் எனது PENDRIVE இல் உள்ளது. தொடரில் கலைச்சொல்லின் தமிழ்ச்சொல் யாது?