அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.
கேட்போரை வயப்படுத்தும் முறையில் பேச்சின் _______________ இருக்க வேண்டும்
தொடக்கம்
இடைப்பகுதி
முடிவு
சான்றுகள்
தலைப்பிற்கேற்றவாறு கருத்துகளை வரிசைப்படுத்தி பேசுவது என்பது பேச்சின்______________
தொடக்கம்
முடிவு
இடைப்பகுதி
சான்றுகள்
ஒன்றைப் பற்றிப் பலருக்கு அறிமுகம் செய்வது எதுவோ அதுவே ________________ எனப்படும்.
பாடம்
கவிதை
கட்டுரை
விளம்பரம்
விளம்பரம் மூலம் கவனத்தில் கொள்ள வேண்டியவை----------------
வண்ணம்
வடிவம்
எப்பொருள் சார்ந்தது
எழுத்துகள்
விளம்பரம் மூலம் மாணவர்கள் அடையும் திறன்-----------------.--------------------
பார்த்தல்,படித்தல்
கேட்டல்,எழுதுதல்
உற்றுநோக்கல்,மையக் கருத்து அறிதல்
உற்று நோக்கல், எழுதுதல்
ஒரு குறிப்பிட்ட அரசோ.உற்பத்தியாளரோ,விற்பனையாளரோ தமது கொள்கைகளைப் பரப்புவதற்கும், பொருட்களை விற்பதற்கும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் தாமே பணத்தைச் செலவிட்டு எழுத்தின் வழியோ காட்சிகளின் வழியோ வெளிக்கொண்ரும் உத்தியே
விற்பனை
கொள்முதல்
விளம்பரம்
நிகர இலாபம்
விளம்பரம் உணர்த்தும் கருத்தை ________________ திறன் பெற வேண்டும் சதுரகராதியை எழுதியவர் யார்?
இலாபம்
பகுத்தறியும்
நம்பும்
பொருளின் உண்மை நிலை
இலக்கணம் ____________ வகைப்படும்
6
5
4
3
அணி என்ற சொல்லுக்கு ______________ என்பது பொருள்
ஆடை
அழகு
ஊர்
மக்கள்
ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகுபெறச் செய்தல் _____________ என்பர்
நடை அழகு
அணி
கவிதை
கட்டுரை
செய்யுளை அழகுப்படுத்துவது எது?
அணி
கையெழுத்து
தமிழ்
சொல்
அணிகளுக்கெல்லாம் தாயா விளங்குவது ______________
வஞ்சப்புகழ்ச்சி அணி
தற்குறிப்பேற்ற அணி
மடக்கணி
உவமைஅணி
தொடரில் உவம உருபு வெளிப்படையாக வருவது ___________
உவமை
உவமைத் தொகை
உவம உருபு
உவமானம்
உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது _____________
எடுத்துக்காட்டு உவமையணி
இல்பொருள் உவமை அணி
உவமையணி
உருவக அணி
உவமையும்,உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும்,உவம உருபு வெளிப்படையாக வராமல் மறைந்து வருவது____________
உருவக அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
உவமை அணி
இல்பொருள் உவமை அணி
இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாக்கிக் காட்டுவது ______________-- அணி.
இல்பொருள் உவமையணி
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
போல,புரைய,மான,கடுப்ப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன. இன்ன - இவை __________ ஆகும்.