அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.
புத்தாக்கப்பயிற்சி - தமிழ் -ஒன்பதாம் வகுப்பு
மாநில கற்றல் அடைவுத் திறன் தேர்வு - 2023
தயாரிப்பு - தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழு
வினாக்களை நன்கு படித்து புரிந்து விடையளிக்கவும்
ஒரு நாட்டின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குபவை யாவை?
உழவுத் தொழில்,கைத்தொழில்,வணிகம்
பொன்,பொருள்,புகழ்
மனிதன்,தொழில்,உறவுகள்
கல்வி, பெருமை, பாராட்டு
சேரர்களை எந்த கடல் கொள்ளையர்களை அடக்கினர்?
வானவர்
மீனவர்
கடம்பர்
அயலவர்
முசிறி துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருள்களில் தவறாக இடம் பெற்ற பொருளை இனம் காண்க
யானைத்தந்தங்கள்
பட்டு
மணி
பவளம்
சேர நாட்டுக் கடல்வணிகச் சிறப்பிற்கு காரணம் எது?
நிறைய கப்பல்கள்
இயற்கை அமைப்பு
ஆட்சி சிறப்பு
மக்கள் செல்வாக்கு
உலகின் மிகவும் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று_____________
ஓவியம் வரைதல்
கூடை முடைதல்
பாய் பின்னுதல்
பானை வனைதல்
ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருள்___________
பானை ஓடுகள்
மட்கலங்கள்
சுடுமண் பொருட்கள்
முதுமக்கள் தாழிகள்
களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது என்பதனைத் தெரிவு செய்க