அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 3-11-23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது எதிர் வரும் 2024 தேசிய அடைவுத் திறன் தேர்வுக்கான முன்னெடுப்பாகும். இந்த மாநில அளவிலான அடைவுத் திறன் தேர்வு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3,6,9 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளை எளிமையாக எதிர்க்கொள்ள நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமானது 25 வினாக்கள் கொண்ட சிறு சிறு தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது உங்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை பயிற்சியாக எடுத்துக் கொண்டு எதிர் வரும் மாநில அளவிலான அடைவுத் தேர்வினை சிறப்பாக எதிர்க் கொள்ளவும்.
மாநில அளவிலான அடைவுத் தேர்வு - 2023
ஆறாம் வகுப்பு
தமிழ்
மாநில கற்றல் அடைவுத் திறன் - 2023
மாநில கற்றல் அடைவுத் திறன் - 2023
ஆறாம் வகுப்பு - தமிழ்
கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகச் சரியான விடையை மட்டும் தேர்வு செய்க
எங்கள் இளமைக்கு பால் போலவும், புலவர்களுக்கு வேலாகவும் விளங்குவதாக பாரதிதாசன் கருதுவது ______
அ) கல்வி
ஆ) செல்வம்
இ) தமிழ்
ஈ) விளையாட்டு
.” புரட்சிக்கவி “ என அழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) ராமலிங்கம்
ஈ) வாணிதாசன்
கனகசுப்புரத்தினம் தனது பெயரை மாற்றிக் கொள்ள காரணமாக இருந்தவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) ராமலிங்கம்
ஈ) வாணிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் – பாடலடியில் காணப்படும் இயைபு நயத்தைக் காண்க
அ) தமிழ் - அமுது
ஆ) பேர் - உயிருக்கு
இ) அமுது – எங்கள்
ஈ) பேர் – நேர்
ஓய்வில்லாமல் உழைத்தவர்களுக்கு அசதியும் இருக்கும். இதில் அசதியும் என்ற சொல்லின் பொருள் யாது?
அ) அதிசயம்
ஆ) சோர்வு
இ) மகிழ்ச்சி
ஈ) ஆர்வம்
ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக. 1. விளைவுக்கு – அ. பால் 2. அறிவுக்கு - ஆ.வேல் 3. இளமைக்கு - இ.நீர் 4. புலவர்க்கு – ஈ.தோள்
அ) 1-இ ; 2-ஈ; 3-அ;4-ஆ
ஆ) 1-ஆ;2-ஈ;3-அ;4-இ
இ) 1-ஈ;2-இ;3-ஆ;4-அ
ஈ) 1-அ;2-இ;3-ஆ;4-ஈ
தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் – என பாடுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) ராமலிங்கம்
ஈ) காசி ஆனந்தன்
. “ பாவேந்தர் “ என சிறப்பிக்கப்படுப்வர் ______
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) ராமலிங்கம்
ஈ) காசி ஆனந்தன்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் ¬¬¬¬¬¬__________ நீர்! – விடுபட்ட இடத்தை நிரப்புக.
அ) உயிருக்கு
ஆ) விளைவுக்கு
இ) புலவர்க்கு
ஈ) நிருமித்த
பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்களில் வேறுபட்டது எது?
அ) அமுது
ஆ) மணம்
இ) நிலவு
ஈ) வானம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி – இப்பாடலடியில் உள்ள மோனை நயத்தைக் காண்க
அ) எட்டு - திசை
ஆ) செந்தமிழ் – புகழ்
இ) புகழ் - கும்மி
ஈ) கும்மி – கொட்டுங்கடி
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் _______
அ) மாணிக்கம்
ஆ) கனகசுப்புரத்தினம்
இ) ராமலிங்கம்
ஈ) காசி ஆனந்தன்
“ பாவலரேறு “ – என அழைப்படுபவர்-----
அ) மாணிக்கம்
ஆ) கனகசுப்புரத்தினம்
இ) ராமலிங்கம்
ஈ) காசி ஆனந்தன்
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் ஒன்று வேறுபட்டுள்ளது.
அ) கனிச்சாறு
ஆ) கொய்யாக்கனி
இ) குடும்பவிளக்கு
ஈ) பாவியக்கொத்து
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி – இப்பாடலில் “ வளி “ என்பதன் பொருள் யாது?
அ) நீர்
ஆ) காற்று
இ) வானம்
ஈ) நெருப்பு
தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்
அ) பன்மை
ஆ) மேன்மை
இ) பொறுமை
ஈ) சிறுமை
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி
ஆ) நிலா
இ) வானம்
ஈ) காற்று
’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______