மாதிரி மாதத் தேர்வு – அக்டோபர் – 2023
10 -ஆம் வகுப்பு தமிழ் இயல் : 7 மற்றும் 8
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
I. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 7×1=7
1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ) திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும் இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
2. மேன்மை தரும் அறம் என்பது ______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
4. கலைச்சொல் அறிக:- Patent
அ. மெய்யியலாளர் ஆ. ஆவணம் இ. நம்பிக்கை ஈ. காப்புரிமை
5. ஐ.நா.அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர்_______
அ. எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆ. பால சரஸ்வதி இ. இராஜம் கிருஷ்ணன் ஈ . பி.சுசீலா
6. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
7. புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை____________
அ) காப்பியம் ஆ) இலக்கியம் இ) கல்வெட்டு ஈ) மெய்க்கீர்த்தி
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி:- 3×1=3
“ இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி
வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய
படியானையே பிணிப்புண்பன
வடிமணிச் சிலம்பே யரற்றுவன
செல்லோடையே கலக்குண்பன
வருபுனலே சிறைப்படுவன
8. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. மெய்க்கீர்த்தி ஆ. ஞானம் இ. ஏர்புதிதா ஈ. காலக்கணிதம்
9.” வருபுனல்” இலக்கணக் குறிப்பு தருக _____
அ. உவமைத்தொகை ஆ, வினைத்தொகை இ. பண்புத்தொகை ஈ. வினைமுற்று
10. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்
அ. வந்தபடி - நின்று ஆ. சிலம்பு – அரற்றுவன இ. படியானை – வடிமணி ஈ. செல்லோடை - சிறை
II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி:- 6×2=12
11. விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ) சந்த நயத்தோடும் எதுகை மோனையோடும் உள்ள அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்தவர் ம.பொ.சி
ஆ) ‘ உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
12. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
13. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
14. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக
15. போர் அறம் குறித்து எழுதுக
16. சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக. : பலகையொலி
17. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
18. பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
III. அடிமாறாமல் எழுதுக:- 1×4=4
19. தூசும் துகிரும் எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்பாடல் (அல்லது )
மாற்றம் எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடல்
IV. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:- 2×3=6
20. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
21. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
22 ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
23. கரப்பிடும்பை இல்லாரைக் காணிக் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – எனும் குறளை அலகிட்டு வாய்பாடு தருக
V. அனைத்து வினாவிற்கும் விடையளி:- 2×4=8
24. அ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ) நயம்பாராட்டுக
கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்ச்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே – வள்ளலார்
25. மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களையும் அதனால் விளையும் நன்மைகளையும் பட்டியலிடுக ( அல்லது )
ஆ) Once upon a time there were two beggars in Rome. The first begger used to cry in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.
V I. அனைத்து வினாவிற்கும் விடையளி:- 2×5=10
26. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
( அல்லது )
ஆ. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளை விவரிக்க.
27. அ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொது வாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மக்கத்தான பணி – முடிவுரை.
( அல்லது )
ஆ. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கையாக எழுதுக.
மகளிர் நாள் விழா
இடம் – பள்ளிக் கலையரங்கம் நாள் -30.09.2023
கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.
சேலம் மாவட்டத்தில் 25-10-23 முதல் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு அக்டோபர் மாதத் தேர்வு நடைபெற உள்ளது. அந்த வினாத்தாள்கள் தேர்வு முடிந்ததும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதே போல் உங்கள் மாவட்டத்தில் தேர்வுகள் நடைபெற்றால் அந்த வினாத்தாளினை பகிரும் படி அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் உங்கள் மாவட்ட வினாத்தாள் மற்றும் படைப்புகளை அனுப்ப வேண்டிய Whatsapp number : 8667426866 , gmail.id : thamizhvithai@gmail.com என்ற வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி