9TH - TAMIL-SALEM DT- QUARTERLY EXAM -23 - ANSWER KEY - PDF

 

 சேலம் – காலாண்டுத் தேர்வு  -2023

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ. சிற்றிலக்கியம்

1

2.

ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

1

3.

இ.சித்திரக்கல் புடவு

1

4.

இ. பொய்கை

1

5.

இ. மோனை,எதுகை,இயைபு

1

6.

அ. மணநூல் ( இது இயல் 7லிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடம் தேர்வுப் பகுதியில் இல்லை )

1

7.

அ. 6

1

8.

அ. அறிஞர் அண்ணா ( இது இயல் 5லிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடம் தேர்வுப் பகுதியில் இல்லை )

1

9.

இ. அகல்

1

10.

அ. அப்துல் கலாம்

1

11.

இ. பதிவிறக்கம்

1

12 .

ஆ. புறநானூறு

1

13 .

அ. குடபுலவியனார்

1

14 .

ஆ. உடம்பு

1

15

ஆ. உண்டி , உண்டி

1

பகுதி - 2

16

Ø  அச்சங்களில் அச்சுகோப்பாக மாறி அச்சாகி வெளிவந்தது

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது

1

1

17.

உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

2

18.

ü  தொலைநகல் இயந்திரம் ( FAX )

ü  தானியங்கு பண இயந்திரம் ( ATM )

ü  ஆளறி சோதனைக் கருவி ( BIOMETRIC DEVICE )

ü  வங்கி கணக்கு அட்டை அச்சுப்படி இயந்திரம்

ü  அட்டை தேய்ப்பி இயந்திரம்

2

19

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

20

தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது

2

21.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

2

பிரிவு - 2

22

Ø  ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் மிகும் – பூச் செடி

Ø  அ,இ என்னும் சுட்டெழுத்துக்குப் பின் மிகும் - அச்சட்டை

1

1

23

அ. பயில்          ஆ. செந்தமிழும் நா பழக்கம்

1

1

24.

அ. வேறுபடுத்துவது      ஆ. பெற்றுள்ளன.

2

25

அ. பதிவிறக்கம்

ஆ. நடுகல்

1

1

26

அ. அலை – கடலலை – நான்   கடலலையைப் பார்த்தேன்       

ஆ. அழை – வரவழைத்தல் – ஆசிரியர் என்னை அழைத்தார்

1

1

27

அ. வேகமாக, (அ) மெதுவாக

ஆ.மெதுவாக (அ) வேகமாக

1

1

28

விரித்த – விரி + த் + த் + அ

விரி – பகுதி ; த் – சந்தி; த் – இறந்த கால இடைநிலை ; அ- பெயரெச்ச விகுதி

1

1

பகுதி – 3

29

மூன்று – தமிழ்

மூணு – மலையாளம்

மூடு – தெலுங்கு

மூரு – கன்னடம்

மூஜி - துளு

3

30

  • தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
  • 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
  • 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்
  • அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

3

31

·      உணவு, உடை, உறைவிடம்

·      நீர்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகளி எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது.

3

33

அறிவு நிலை

அறியும் ஆற்றல்

உயிரினங்கள்

ஓரறிவு

தொடுதல்

புல்,மரம்

ஈரறிவு

தொடுதல் + சுவைத்தல்

சிப்பி, நத்தை

மூவறிவு

தொடுதல் + சுவைத்தல் + நுகர்தல்

கரையான், எறும்பு

நான்கறிவு

தொடுதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல்

நண்டு, தும்பி

ஐந்தறிவு

தொடுதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்

பறவை, விலங்கு

ஆறறிவு

தொடுதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல்

மனிதன்

3

34

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

 ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*

3

34

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

அ. இனிய     ஆ. நல்ல   இ. கொடிய

3

36

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

 அவன் திருந்தினான்

  அவனைத் திருந்தச் செய்தான்

3

37

உவமை : அகழ்வாரை தாங்கும் நிலம்

உவமேயம் : இகழ்வாரைப் பொறுத்தல்

உவம உருபு : போல

அணிப்பொருத்தம் :

    பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

3

பகுதி - 4

38

v  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

v  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

v  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

v  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

v  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

v  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

v  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

v  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

v  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

v  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

v  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

38ஆ

·         நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

·         மழை நீரை முறையாக சேமித்தல்

·         நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்

·         நீரினை பாதுகாக்கும் வழிகளை அறிந்து பாதுகாத்தல்

·         தடுப்பணைகளைக் கட்டுதல்

·         ஏரி, குளங்களைத் தூர்வாருதல்

5

39அ

12, தெற்கு வீதி,

மதுரை-2

19,செப்டம்பர் 2023.

 

அன்புள்ள நண்பனுக்கு,                

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி                                                  இப்படிக்கு,                                  

                                                                   அன்பு நண்பன்                                                                      முகிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் – 1

5

39ஆ

அரசினர் உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி,

சேலம் மாவட்டம்.

28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்  திருமிகு. கு.சிவானந்தன் அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

தமிழகம் பெற்ற தவப்புதல்வரே!  

    வருக! வருக! வணக்கம்.

     மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகாப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்து கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும்  உவகை கொள்கிறோம்!

பள்ளியின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்!

    எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும் நீங்கள் கூறிய வழிமுறைகளை  நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.

                                 நன்றி, வணக்கம்

கோரணம்பட்டி

28.9.2021.                                                     தங்கள் அன்புள்ள, 

                                                                   விழாக்குழுவினர்

5

40

திரண்ட கருத்து : 

           மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து :  

காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

மோனைத்தொடை :

சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

ல்லும் - டந்து, ல்லை - ங்கும், றாத - ரி, ராத - ற்றிலும்.

எதுகைத்தொடை :

அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

 ல்லும் - எல்லை, றாத - ஊறா

இயைபுத் தொடை :

இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்

அணிநயம் :

மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் :

குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5

40ஆ

Ø  ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி

Ø  மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால் நேரு

Ø  குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப்பெரிய பிரச்சனை – அன்னை தெரஸா

Ø  உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் -A.P.J.அப்துல் கலாம்

Ø  வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறர்கள் - சேவ்கேரா

5

41

1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
5. குறித்த நேரங்களில் பள்ளி வீட்டுப்பாடங்களை முடிப்பேன்.
6. பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்டு நடப்பேன்
.

5

42

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

முயற்சிக்கான ஊக்கக் காட்சி

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. மைக்கேல் ஆல்ட்ரிச்  2. அமெரிக்கா    3. இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்

4. 13 இலட்சம்  5. இணைய வணிகம் ( அ ) இணையம்

5

பகுதி - 5

43அ

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ü  தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

8

43ஆ

இந்த வினா தேர்வுக்குரிய பாடப்பகுதியில் இல்லை

மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

·         சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

·         அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள்.

 

 

44அ

இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரின் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·           இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·           குறைந்த செலவில் தரமான சேவையைக் கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·           இதுவரை 45 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

·                இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·       1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·       1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·       சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·       நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு.

Ø  .

8

44ஆ

முன்னுரை :

         கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

        கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

          அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

        இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

        வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

          இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

        தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

8

45அ

குறிப்புச் சட்டம் , தகுந்த உட்தலைப்புகள் இட்டு தலைப்புக்குரிய கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

45ஆ

முன்னுரை    மழைநீரி சேகரிப்பின் அவசியம்

வழிமுறைகள்    மழை நீர் சேகரிப்பின் நன்மைகள்

மாணவர்களின் பங்கு   முடிவுரை

தகுந்த தலைப்புக்குரிய கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

விடைக்குறிப்பு

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

பதிவிறக்கம் செய்ய  10 விநாடிகள்  காத்திருந்து பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post