கற்றல்
இனிமை
மாணவர்களுக்கான
வினாத்தாள்
காலாண்டுத்
தேர்வு – 2023
வகுப்பு : 8 மற்றும் 9 மதிப்பெண் : 100
நேரம் : 2.00 மணி
பிரிவு -1
( எழுத்து பயிற்சி – 90 மதிப்பெண்)
1. விடுபட்ட உயிரெழுத்துகளை எழுதுக:- 10×1/2= 5
1.
___ ம்மா 2. ____தல் 3. ___டுக்கை 4. ___ட்டகம் 5.
___லி
6.
___டதம் 7. ___ ந்து 8. ___ப்ரல் 9____ஞ்சி 10. ____ட்டம்
2. முதலெழுத்தை நெடிலாக மாற்றி எழுதுக:- 10×1=
10
1.
கல் - 2. பல் 3. மடம் - 4. படம் - 5.
வனம் –
6.
வசம்- 7. தரம் 8.வட்டம் 9. பலம்- 10. வரம்-
3. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்தி முறையாக எழுதுக 5×1= 5
1.
ல்னமின் ____________
2.
லாநி___________
3.
டதிம்ட்_________
4.
ம்பிம்ப______
5.
ல்கவி ______
4. பொருத்துக:- 5×1=
5
1.
____ரி - சீ
2.____ரகம் - நீ
3.____தி - கீ
4._____ரம் - மீ
5.
____ச்சல் - வீ
5. முடியும் எழுத்தில் இருந்து புதிய சொல் உருவாக்குக. 5×1= 5
எ.கா:
கடுகு – குருவி
1.
நுங்கு – 2. காது – 3. பசு - 4.
துடுப்பு - 5. இராமு
–
6. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுத்து
புதிய சொல்லை உருவாக்குக :
5×1= 5
7. சொற்களைப் பயன்படுத்தி சொற்கோபுரம் அமைக்க. 5×1=
5
( சுக்கு, துடுப்பு, குற்றாலம், பூ,
துணி )
8. வரிசைப்படுத்தி எழுதுக 5×1=
5
ஙெ ஞெ னெ ழெ பெ யெ கெ தெ லெ
றெ வெ மெ டெ செ ணெ நெ ளெ ரெ
9. சொல்லுக்குள் மறைந்திருக்கும் சொல்லை எடுத்து எழுதுக 10×1= 10
1.
நெய்தல் ______ 6. தைலம் ________
2.
பெருங்காயம் ______ 7. நைல்நதி ________
3.
செவ்வாய் ________ 8. தேன்கூடு _________
4. பைந்தமிழ் ________ 9. வைக்கோல் ________
5. கேழ்வரகு ________ 10. கைத்தாள் ________
10. ஒலி வேறுபாடு அறிந்து “ ஒ வரிசை,
ஓ வரிசை” வார்த்தைகள் பிரித்து எழுதுக:- 10×1= 10
மோர் கொடு போட்டி யோசி நொடி
தோட்டம் பொட்டு சொல் நோக்கம் மொழி
11. பத்தியில் “ ஓள “ வரிசை எழுத்துகளைக் கொண்ட சொற்களை
எடுத்து எழுதுக 5×1= 5
பெளர்ணமி
நிலவொளியில் செளமியா விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு மரத்தில் கெளதாரி அமர்ந்திருந்ததைக்
கண்டாள். கெளதாரியைப் பார்த்ததும் செளமியா மெளனமாக நின்றாள். அவளது தோழி கெளரி அங்கு
வந்து செளமியாவைப் பார்த்து செளக்கியமா? என்று கேட்டாள். சத்தமிடாதே தோழியே! இங்கு
வந்து பார் ஒரு கெளதாரி மரத்தில் அமர்ந்துள்ளது என்றாள் செளமியா.கெளரியும் அதைப் பார்த்து
வியந்து நின்றாள். பின்னர் இருவரும் பெளர்ணமி நிலவொளியில் விளையாடச் சென்றனர்.
12. இரண்டு சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக. 5×1= 5
எ.கா : நூல்வெளி
நூல் மொழி கண் மீன் நீதி எழுது
கோல் வெளி தமிழ் மணி விண் மான்
13. முதல் எழுத்தை மாற்றி பறவையின் பெயரை உருவாக்குக:- 10×1/2=5
1.
பேருந்து 2. அருவி 3. வாயில் 4. சந்தை 5.
காவல்
6.
மீனா 7. ஊதாரி 8. மெழுகு 9. வெயில் 10.
மேகம்
14. “ மை “ யில்
முடியும் சொற்கள் ஐந்து எழுதுக. 5×1=
5
எ.கா : நேர்மை
15. உரிய எழுத்தை தேர்ந்தெடுத்து நிரப்புக:- 5×1= 5
1.
பூக்களைக் கொண்டு மா____தொடுக்கலாம் ( லை/ ளை )
2.
பஞ்சவர்ணக்கி____ அழகாக இருக்கும ( லி/ளி )
3.
பெயர்ப்பலகை வ____ காட்டும் ( ளி/ழி )
4.
ஆடையில் படிவது க___ ( ரை/றை)
5. காலையில் பெய்வது ப____ ( னி/ணி
)
பிரிவு – 2
வாசிப்பு பயிற்சி – 10 மதிப்பெண்
1. கீழ் உள்ள சொற்களை பிழையின்றி வாசித்துக் காட்டுக 10×1/2= 5
1.
ஊஞ்சல்
2. வியாபாரம் 3. சூடாமணி 4. தோராயம் 5.
போதாமை
6.
திருநெல்வேலி 7. வழிகாட்டுதல் 8. வெட்டுக்கிளி 9. வினைமுற்று 10. சொற்குவளை
2. சொற்றொடர்களை பிழையின்றி வாசித்துக்காட்டுக. 5×1= 5
1.
சுத்தம் சோறு போடும்
2.
ஒளவையார் ஆத்திசூடி பாடினார்.
3.
நவகோடி நாராயணன் வைர வியாபாரம் செய்தார்
4.
தமிழ்நாடு மாநிலத்தின் சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் உள்ளது.
5. பெரியவர்களை நாம் கெளரவத்துடன் நடத்த
வேண்டும்.
இந்த வினாத்தாள் சேலம் மாவட்டம்
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட “ நாவில் தமிழ் நாளும் தமிழ் “ என்ற பயிற்சிக்
கட்டகத்தில் உள்ள மதிப்பீடு வினாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாளினை 1 0 விநாடிகள் கழித்து தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம்
வினாத்தாள் – ஆக்கம்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்