இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
பேசும் ஓவியங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. குகை ஓவியங்களில் வணணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.
அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ___
அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம்
ஈ) கேலிச்சித்திரம்
3. ‘ கோட்டோவியம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__
அ) கோடு + ஓவியம் ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம் ஈ) கோடி + ஓவியம்
4. ‘ செப்பேடு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
அ) செப்பு + ஈடு ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு
5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) எழுத்து ஆணி ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி ஈ) எழுதாணி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் ________
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது _______
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் _______ மீது பொறித்து பாதுகாத்தனர்.
குறுவினா.
1. ஓவியங்களின் வகைகள் யாவை?
2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
சிறுவினா
1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?
2. ஓலைச் சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
சிந்தனை வினா
1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
PDF - FILE
KINDLY WAIT FOR 10 SECONDS
பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்